அங்கு கொலைவெறியுடன் நின்றுகொண்டிருந்தது தீக்ஷிதோ விவானோ அல்ல அங்கு நின்றுகொண்டிருந்தது Alessandro.
அவனை பார்த்து முதலில் அதிர்ச்சியான விஹானா பின்னர் நிலைமையை உணர்ந்து அவனை அமைதிப்படுத்தப் பார்த்தாள்.
ஆனால் அலெசான்ட்ராவோ அவனை வெறிகொண்டு தாக்கிக்கொண்டிருந்தான். அவனை கட்டுப்படுத்த வழிதெரியாமல் அவனை பின்னால் இருந்து கட்டிப்பிடித்து அவ்விடத்தை விட்டு இழுத்து சென்றாள்.
அதனை alessandro அந்த கோச்சை அடித்தது விஸ்காம் டிபார்ட்மென்ட் ஸ்டுடென்ட்டின் வீடியோ கேமரா வில் எதேச்சையாக பதிவாக, அதனை கவனித்த அவந்திகா அவளிடம் பேசி அதன் மெமரி கார்டை வாங்கிக் கொண்டாள்.
இங்கு அதற்குள் விஷயம் vice-chancellor க்கு சென்று விட அவரை காண இருவருக்கும் அழைப்பு விடுக்க பட்டது. விஹானா வழக்கம் போல் பயம்கொள்ள Alessandro அவளை தேற்றி அவரை காண அழைத்துச்சென்றான். அங்கு அவனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ஆதலால் அவன் அங்கு தான் விவானின் நண்பன் என்று கூறி இவர்கள் பிசினஸ் லஞ்ச்சின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டினான். அதனை காட்டி அங்கிருந்த அனைவரையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து அவன் சுலபமாக விஹானாவை காப்பாற்றி பல்கலைக்கழகத்தின் அலட்சியத்தை எடுத்து காட்டி அவர்களை மிரள வைத்தான். அவர்கள் மேல் தவறு இருப்பதால் இவன் சொல்வதையெல்லாம் கண்களை மூடிக்கொண்டு கேட்டனர்.
கொஞ்சம் சூழ்நிலை அமைதியாகியவுடன் அவளை காண்டீனிற்கு அழைத்து சென்றான். அங்கு அவளிடம் சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்க அவலும் ஐஸ்கிரீம் கேட்க, அங்கோ ஐஸ்கிரீம் தீர்ந்துவிட்டிருந்தது.
அதனை கேட்டவுடன் விஹானாவின் முகம் சிறிது சுருங்கியது பின்னர் முகத்தை சீர்படுத்திவிட்டு வேறு எதாவது சாப்பிடலாமா என்று யோசிக்க தொடங்க வேறு எதுவும் தோன்றாதலால், எனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு அவனை பார்த்தாள்.
அவனோ சரி வா உனக்கு நான் ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என்றான்.
அவளோ நம்பமாட்டாமல் அவனை பார்த்து, இங்குதான் தீர்ந்துவிட்டதே? நீ எப்படி எனக்கு வாங்கித்தருவாய்? என்று கேள்வியாய் கேட்க, அவனோ நீ சற்று நேரம் என்னுடன் பேசாமல் வா என்று கூறி காலேஜின் பின்பக்க காம்பௌண்டிற்கு அழைத்து சென்றான்.
அங்கிருந்து சுவரேறி அவளை தன்னுடன் சேர்ந்து குதிக்க சொன்னான். அவளோ முடியாது என்று கூற அவன் அவளை அலாக்காக தூக்கி சுவரின் மேல் அமரவைத்து தான் குதிக்கும் பொழுது அவளது கையையும் சேர்த்து பிடிகொண்டு கீழே குதிக்க வேறு வழி இல்லாமல் அவளும் குதிக்க இருவரும் சேர்ந்து அங்கிருந்து கீழே குதித்தனர்.
அங்கிருந்து இருவரும் அருகிலுள்ள மால்லிற்கு சென்றனர். அங்கே turkish ஐஸ்கிரீம் stand ஐ கண்டதும் அங்கே சென்றனர். அவளை ஐஸ்கிரீம் வாங்க சொல்லிவிட்டு அங்கு அவளிடம் turkish icecreamman னிடமிருந்து எவ்வாறு ஐஸ்கிரீம் வாங்குகிறாள் என்பதை alessandro வீடியோ எடுத்துக்கொண்டிருந்தான்.
Alessandro எடுத்து முடித்ததும் அதனை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவனுக்கு உடனே அனுப்பிவிட்டு அவள் ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன் கல்லூரிக்கு அழைத்து சென்றான். வழக்கம் போல் சுவரேறி குதித்து, யாரும் பார்க்காதவாறு கல்லூரிக்கு உள்ளே சென்றனர்
அங்கோ கோபத்துடன் விவான் விவான் கல்லூரி கேட்டிற்குள் நுழைந்தான். அதற்குள் இவளும் வீட்டிற்கு செல்ல travel bag ஐ ரெடி செய்து visitors ஹாலிற்குள் நுழைந்தாள் விவானை எதிர்பாத்து, எப்படியும் அவன் அவளை அழைத்துப்போக லேட்டா ஆக வருவான் என்று நினைத்து இவள் அங்கே வெயிட்டிங் ஏரியாவிற்கு செல்ல போக அவள் கண்ணில் கோபமாக வந்து கொண்டிருந்த விவான் தென்பட்டான்.
அவனைக் கண்டதும் இவன் என் இவ்வளவு கோபத்துடன் வருகிறான் என்று யோசித்துக்கொண்டே விஹானா அவன் அருகில் சென்று காரணத்தை கேட்க, அவனோ அவளிடத்தில் எதுவும் கூறாமல் போய் luggage ஐ பேக் செய்து எடுத்து வா என்று காட்டமாக கூறினான்.
ஏனென்று கேட்க வந்தவள் பின்னர் எதுவும் கூறாமல் கையில் கிடைத்த துணிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு வந்தாள்.
அவள் பேக்குடன் வருவதை கண்ட விவான் கோபமாக, அவளின் கையிலிருந்த பேக்கை ஒரு கையில் பிடிங்கிகொண்டு மறுக்கையில் அவளை இறுக்கிபிடித்துக் கொண்டு கிட்டத்தட்ட அவளை இழுத்துக்கொண்டு காருக்கு சென்றான்.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த alessandro வோ உணர்ச்சியற்ற முகத்தோடு அக்கல்லூரியை விட்டு வெளியேறிக்கொண்டே தனது மொபைலில் recent dial ல் iruntha saviour என்ற எண்ணிற்கு அழைத்தான்.
கால் கனெக்ட் ஆனதும் நான் நேரில் வருகிறேன் என்று கூறிவிட்டு கால் ஐ கட் செய்தான்.
அவன் உடனே அங்கிருந்து தனது காரில் ஏறி பிரபல நட்சத்திர ஹோட்டல் ஐ கூறி அங்கு போகுமாறு டிரைவரை பணித்தான்.
ஹோட்டல்லை அடைந்ததும் நேரே விரு விருவென நடந்து லிஃட்டில் ஏறி அந்த அறையை அடைந்தான். அங்கு அவனை எதிர்பாத்து காத்திருந்தது வேறு யாருமல்ல நமது நாயகன் தீக்ஷித்.
அவன் அங்கு சென்ற உடனே alessandro திட்டி தீர்த்துவிட்டான்.
எனக்கு அவனை பார்த்தாலே கடுப்பாக வருகிறது.
ஆனால் நீ எப்படி இவ்ளோ கூலாக இருக்கிறாய் என்று கேட்டான்.
முதலில் எனக்கும் அவனை கொல்ல வேண்டும் என்ற வெறியே வந்தது. நானும் முதலில் அவன் செய்ததற்கு அவனை உண்டுயில்லையென்று ஆக்கிவிடவேண்டுமென்று தோன்றியது. என்னை பழிவாங்க விகானாவை பகடைக்காயாக பயன்படுத்துகிரானே என்று பின்னர் அவனே அவளை காதலிக்கவும் எனக்கு முதலில் கோபத்துடன் அதிர்ச்சியும் ஏற்பட்டது.
பின்னர் நிதானமாக யோசித்து பார்க்கையில் எனக்கு தோன்றியது என்னவென்றால் அவனின் அதீத காதலே அவனின் காதலை அழித்துவிடும்.அது அவனிற்கும் நன்றாக தெரியும். ஆதலால் தானாகவே விஹானா என்னிடம் வந்து சேருவாள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படி அவளாக வரவில்லையென்றாலும் நான் அவளை வரவைப்பேன் என்று முகத்தில் தீவிரம் படர கூறினான்.
ப்ரோ நீ சொல்றது எதுவுமே புரில. என்னமோ இப்படி தானாவே எல்லாம் நடக்கும்னு அமைதியா இருந்துட்டு எல்லாம் கை நழுவி போன பிறகு வருத்தப்படாதே என்று கூறினான்.
அதற்கு தீக்ஷித் பதிலேதும் கூறாமல் ஒரு சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு வெளியே வெட்டவெளியை வெறிக்கலானான்.
அவனை பார்த்த alessandro அவர்களின் முதல் சந்திப்பை நினைத்து பார்த்தான்.இவனது லிட்டில் angel தான் abigail. இவனின் ஒரே தங்கை செல்ல தங்கை. இவர்கள் இருவருக்கும் ஐந்து வருட வித்தியாசம். இவன்
கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போது ஒருநாள் திடீரென அவனின் தந்தையின் பாத்துக்காவலர்கள் இவனை அவசர அவசரமாக வீட்டிற்கு அழைத்து சென்றனர். அவனுக்கு முதலில் எதுவுமே புரியவில்லை.
பின்னர் தான் தெரிந்தது அவனின் செல்லத்தங்கையை கடத்தியிருந்தார்கள் மாபியா கூட்டத்தினர்.இவர்கள் குடும்பமும் மாபியாவை சேர்ந்தவர்களே. இவனின் தந்தை தான் அதில் ஈடுபட பிடிக்காமல் தனியே பிசினஸ் செய்து கொண்டிருந்தார்.
அவரின் சில கம்பெனிளை அவர்கள் illegal வேலைக்காக பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு எழுதிதறுமாறு கேட்டதற்கு அவர் மறுத்துவிட அதன் பிரதிபலிப்பாய் அவரின் செல்ல மகளான abigail ஐ கடத்தி இருந்தனர்.
மாபியா வில் அவர்கள் நினைத்தது நடந்தாலும் பணயமாக்கப்பட்டர்வகள் திரும்பவும் வருவது சந்தேகமே ஏனெனில் அவர்கள் மற்றவர்களுக்கு பயத்தை உண்டுபண்ண தன்னை எதிர்த்தவர்களை அவ்வளவு எளிதில் விட்டுவிடாமல், ஆனென்றால் அவர்களை கொன்றுவிடுவர் அதுவே பெண் என்றால் அவர்களை அடிமையாக்கி விற்றுவிடுவர். அப்பெண் எங்கிருக்கிறாள் என்பதை இவர்களால் கண்டுபிடிக்கவே முடியாது.
அப்படிப்பட்ட நிலைமையில் அவர்கள் செய்வதரியாது நிற்க அதே சமயம் மாபியாவுடனான பிசினஸ் டீல்லிற்கு இத்தாலி சென்றவன் அவர்களிடத்தில் இருந்த குழந்தைதனம் மாறாத abigail ஐ பார்த்தவனுக்கு கோவம் வந்தது. இவன் மாபியா உடன் லீகல் பிசினஸ் டீலிங் மட்டுமே வைத்துக்கொள்ளுவான். அவர்களின் illegal விஷயத்தில் இவன் தலையிடமாட்டான்.
அவன் அவர்களிடத்தில் சண்டையிட்டு abigail ஐ அவர்களிடம் இருந்து காப்பாற்றி alessandro குடும்பத்தாரிடம் ஒப்படைத்தான். அன்றே அவன் மாபியா உடனனா பிசினஸ் டீல் அனைத்தையும் முடித்துக் கொண்டான்.
Abigail ஐ காப்பாற்றியதற்கு alessandro நன்றி கூறி நட்பானான். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் தீக்ஷித்திற்கு தம்பி தங்கை ஆகினர்.
அதன் பிறகு இவன் அவர்கள் இருவரையும் காண்பதற்காகவே இத்தாலி செல்வான். அது போலவே அவர்களும் இவனை இந்தியா வந்து காண்பர்.
திடீரென ஒரு நாள் இவன் இத்தாலிக்கு வந்து alessandro வின் தந்தையிடமும் alessandro விடாமும் விகானாவை பற்றி கூறி விவானிடம் பிசினஸ் டீல் ஐ வைத்து நட்பாக கூறினான்.
அதன்படியேதான் அவர்கள் இந்தியா வந்ததும் விவானிடம் பிசினஸ் டீல் வைத்ததும்.
Alessandro வின் வேலையே விஹானாவை கண்காணிப்பதுதான்.ஏற்கெனவே alessandro விற்கு அவள் தங்கையாக உணர காரணமும் தீக்ஷித் அவளை விரும்புவதே.
இங்கோ, விவான் அவளின் பையை கார் டிக்கி யில் தூக்கிப் போட்ட வேகத்தை கண்டு விஹானாவிற்கு தான் பயத்தில் உடம்பு தூக்கிப்போட்டது.
அவளுக்கு இவன் எதற்காக இவ்வளவு கோவமாக இருக்கிறான்? யார் மீது இவ்வளவு கோவமாக இருக்கிறான்? ஏதாவது கேட்டால் அடித்துவிடுவானோ? எரிந்துவிழுவானோ? என்று பயத்துடனே தலை குனிந்து அவளது விரல்களை ஆராய்ச்சி செய்துகொண்டே அமர்ந்திருந்தாள்.
காரை ஓட்டிக்கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் கோபத்தை அடக்க முடியாமல் யாருமற்ற சாலையில் நிறுத்தினான். திடீரென வண்டி நிற்கவும் விஹானாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.
உடனே அவன் வண்டியை விட்டு கீழிறங்கி கதவை சாத்திவிட்டு வண்டியின் பின்பக்கமாக போய் ஓவென கைகளை இருக்க மூடி கத்தினான். அவ்வாறு அவன் கத்தியும் அவனது கோபம் அடங்கவில்லை. பின்னர் வேறு வழியில்லாது முடிந்த வரை விரைவாக வீட்டிற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து வண்டியை கிளப்பினான்.
அவர்கள் நேரே சென்றது அவனின் அலுவலகத்திற்கு, அங்கு சென்றதும் நேரே அவனின் கேபினிற்குள் நுழைந்தனர்.
நல்லவேலையாக அன்று பிரியா விடுப்பு எடுத்திருந்தாள். அங்கு சென்றதும் அவனது அறைக்கு காபி எடுத்துவர சொல்லிவிட்டு,அவனுடைய chair இல் அண்ணாந்து மேலே விட்டத்தை பார்த்தாவாறு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
நேரம் ஓட ஓட அவளுக்கு எதுவுமே புரியவில்லை. மெதுவாக அவனை பார்த்து ஏன் டென்ஷனாக இருக்கிறீங்க? என்று அவள் கேட்க அதுவரை அவன் கஷ்டப்பட்டு கட்டுக்குள் கொண்டுவர செய்த கோவம் அனைத்தும் அவள் மேல் திரும்பியது.
ஏனென்று உனக்கு தெரியாதா? நான் இவ்வளவு கோவபடுவதே உன்னால்தான்! உனக்கு அறிவு என்பதே கிடையாதா? யார் கையை தொட்டாலும் அமைதியாக நிற்பாயா? அவனை உடனே தள்ளிவிட்டுருக்க வேண்டாமா? (இவன் கூறியதோ alesandro வை பற்றி, ஆனால் அவள் நினைத்ததோ அந்த கோச் ஐ பற்றி )
நான் தள்ளிவிடதான் முயற்சி செய்தேன். ஆனால் அவன்தான் ஏன் கையை இறுக்கமாக பற்றி இருந்தான். என்னால் அவனின் கையை ஏன் கையிலிருந்து எடுக்கவே முடியவில்லை என்று பேசிக்கொண்டே போக, அதற்குள் அவன் அவளை பாதியிலே நிறுத்தி அவன் பேச ஆரம்பித்தான்.
அவனோ கோவத்தில் அவளை எப்படி பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் என்னென்னவோ பேசினான். அவளை பார்த்து நேற்று வரை உனக்கு நான் நல்ல சாய்ஸ் ஆக தெரிந்தேன் இன்று அவனை கண்டதும் அவன் என்னைவிட better சாய்ஸ் ஆக தெரிகின்றானா? உனக்கு! நீ அந்தமாதிரி பெண்ணா?
பணக்காரன் எவனாவது வந்து கூப்பிட்டால் நீ அவனுடன் சென்றுவிடுவாயா?
உனக்கு பணம்தான் வேண்டும் என்றால் நான் இன்னும் நிறைய சம்பாதிப்பேன் அனைத்தையும் நீயே வைத்துக்கொள். நிச்சயம் நீ யாரை தேர்வு செய்ய நினைத்தாலும் அவர்களை விட நான் உனக்கு better சாய்ஸ் தான் என்று கூற, அதே நேரம் கதவு தட்டப்பட, come இன் என்று கூறினான். உள்ளே வந்த ஆளோ காபி ஐ அவனுக்கு அருகில் டேபிளில் காபி ஐ வைக்க போக, அதே நேரம் விஹானா பேச ஆரம்பித்தாள், அதுவந்து நான் என்று கூற முற்பட பயத்தில் அவளுக்கு வார்த்தை வராமல் தடுமாற,
போதும் நிறுத்து! என்று அவளை பார்த்து கைகாட்ட முற்படும் பொழுது அவனின் கைப்பட்டு காபி முழுவதும் விஹானாவின் மேல் கொட்ட, சூடான காபி மேலே கொட்டியதும் அவளுக்கு பேச்சு அப்படியே நின்றது.
அவளை பார்த்ததும் அவன் வேறு எதுவும் கூறாமல், முதலில் உன்னுடைய உடையை மாற்றிக்கொண்டு வா காரில் உன்னுடைய bag ஐ வைத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு அவளுக்கு கார் சாவியை கொடுத்தான்.
அவளோ கண்ணீருடன்,சார் நான் வீட்டுக்கு போகவேண்டும் என்று கூறினாள். அவனோ அவளின் கண்ணீரை பார்த்து மனது வலித்தாலும், கோபம் குறையாத காரணத்தினால் அவளை பார்க்காமல் பைலை பார்த்தபடி எனக்கு வேலையிருக்கிறது நீ நினைத்தவுடன் உன்னை அழைத்து போக நான் ஒன்றும் உன்னுடைய டிரைவர் இல்லை என்று கூற அவளோ நான் ரவி அண்ணாவுடன் அல்லது பஸ்சில் சென்றுக்கொள்கிறேன், நான் நீங்கள்தான் என்னை அழைத்து போகவேண்டும் என்று கூறவில்லை என்று கூறினாள்.
நீ இருப்பது என்னுடைய நிழலில் நீ எனக்கு கட்டளை இடக்கூடாது நான்தான் உனக்கு கட்டளை இடவேண்டும். கட்டளை இடுமிடத்தில் நான் இருக்கிறேன் கேட்கும் இடத்தில் நீ இருக்கிறாய் என்று அவனுக்கு தோன்றியதெல்லாவற்றையும் அவளின் மனம் புண்படுமே என்று கூட யோசிக்காமல் பேசினான்.
இதுவரை இப்படி யாரிடமும் பேச்சு வாங்காத விஹானாவின் கண்களில் இருந்து கண்ணீர் தாரத்தாரையாக கொட்டியது. அவன் தன் மேல் உள்ள காதலினால் ஏற்பட்ட பொறாமையினால் வந்த வார்த்தைகள் தான் அவை என்று அவளுக்கு புரியவில்லை.தன்னை திட்டினால் யாரும் வந்து கேட்கபோவதில்லை என்று தானே வாயில் வந்ததையெல்லாம் கூறுகிறார் என்று நினைத்தாள்.
தன்னுடைய தந்தை மட்டும் இப்பொது உயிரோடிருந்தால் தனக்கு இந்த நிலை வந்திருக்காதல்லவா? என்று அவள் எதைதையோ எண்ணி மௌனமாக கண்ணீர் வடித்தாள்.அவளுக்கு தான் என்ன தவறு செய்தோம் என்று கூட புரியவில்லை.
கலங்கிய கண்களுடன் காரிலிருந்து துணியை எடுத்துவந்து அவனின் பாத்ரூமிலே மாற்ற நுழைந்தாள். உடைகளை கலைந்து விட்டு பைப்பை திறந்துவிட்டு அழுதுகொண்டிருந்தாள்.
வெளியே அவனுக்கு போர்டுமீட்டிங்கிற்கு நேரம் ஆக உடனே conference ஹால்லிற்கு விரைந்தான். செல்லும்போது அவன் விஹானா உள்ளிருப்பதை மறந்து அவனின் அறையை வெளி பக்கமாக தாழிட்டு விட்டு சென்றான்.
மீட்டிங் முடிந்ததும் அதன் ஞாபகத்திலே அவன் பார்க்கிங்கிற்கு வர அப்பொழுதுதான் அவனுக்கு விஹானாவின் ஞாபகம் வர திரும்ப செல்ல நினைத்தவன் ஆபீஸ் காரை காணாததால் அவள் டிரைவர் ரவி உடன் வீட்டிற்கு சென்றுவிட்டாள் என்று நினைத்துவிட்டு கோபத்துடன் காரை கிளப்பி வீடு நோக்கி புறப்பட்டான்.
இங்கோ ஆபீஸ் முடிந்ததும் எல்லாரும் வீட்டிற்கு கிளம்பினர். விஹானா சிறிது நேரம் கழித்துதான் இரவாகிவிட்டதை உணர்ந்து பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள்.
கதவு வெளிப்பக்கம் தாழ் போட்டிருக்க அவளால் முடிந்தவரை கதவை திறக்க முயற்சித்தாள்.
ஆனால் அவளால் அதை திறக்கவே முடியவில்லை.ஆபீஸ் ஐ செக் செய்ய ரௌண்ட்ஸ் வந்த நைட் shift வந்த செக்யூரிட்டி விவானின் அறைக்கதவு தட்ட படுவதை பார்த்தவர் வேகமாக அந்த கதவினை திறந்துவிட வேகமாக வெளியே வந்த விஹானாவை பார்த்ததும், ஏற்கெனவே இதுபோல் confidential பைலை ஐ திருட வந்த பெண் போல் இவளும் திருட வந்திருக்கலாம் என்று நினைத்து அவளை விசாரிக்காமல் அவளை தரதர வென்று வெளியே இழுத்து வந்தார். அவரோ புதிய செக்யூரிட்டி ஆதலால் அவருக்கு விஹானாவை தெரியவில்லை அவள் உள்ளே வரும்பொழுது டே shift செக்யூரிட்டி தான் இருந்தார். இவருக்கு நைட் shift என்பதால் இப்பொழுதுதான் வந்திருந்தார். அவளை building கிற்கு வெளியே மழையிலே நிற்கவைத்து அவளிடம் விசாரிக்க அவள் விவானிற்கு வேண்டியவள் என்று மட்டுமே கூறினாள். மழையில் நனைய நனைய அவளின் வெள்ளை நிற ஷர்ட் உடலோடு ஒட்டி அவளின் அங்கங்களை காட்டியது. அவளும் கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு மழையில் நனைந்தவாறே நின்றாள்.
அவளை பார்த்து செக்யூரிட்டி நீ சாரிடம் வேலை செய்கிறாயா? அவருக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்க, அவளால் அவர்களுக்குள் என்ன உறவு என்பதை கூட தெளிவாக கூற முடியவில்லை. ஏனென்றால் அவளுக்கு அதில் தெளிவில்லை.
விஹானாவின் உடை

அவள் விவானின் வீட்டிற்கு வந்த கதையை அழுதுக்கொண்டே விக்கி விக்கி சொல்லிமுடித்தாள். அதனை நம்பாத செக்யூரிட்டி விவானிற்கு அழைத்தார். அவனது போன் சுவிட்ச்ஆப் என்று வரவே இவள் உடனே தன்னுடைய மொபைல் விவானின் காரில் தான் இருக்கும் அதற்கு அழையுங்கள் என்று கூறி அவளுடைய என்னை கொடுத்தாள். அதற்கு அழைத்த பொழுது அவன் திரையில் வெறும் நம்பர் மட்டும் வரவும் alessandro தான் கூப்பிடுவதாக நினைத்து கோபத்தில் போன் ஐ சுவிட்ச் ஆப் செய்து காரில் வீசினான்.
அடுத்த படியாக செக்யூரிட்டி போலிசிற்கு போன்செய்து அவர்களை வரவழைத்து விகானாவை அவர்களிடம் ஒப்படைத்தார்.
அவர்களும் இரவில் அவளை அர்ரெஸ்ட் செய்ய முடியாது என்பதால் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று அவளின் வீட்டினற்கு தகவல் கொடுக்கலாம் என்று அவளிடம் கேட்க அவள் அவளின் அன்னையின் போன் நம்பர் ஐ கொடுக்க அவர்கள் விஹானாவின் அம்மாவிடம் விஷயத்தை கூற அவருக்கோ ஒன்றுமே புரியவில்லை.பின்னர் தானே நேரில் வருவதற்கு கூறிவிட்டு ராஜம்மா உதவியுடன் அந்த வீட்டிலிருந்த காரை எடுத்துக்கொண்டு விரைந்தனர்.
போகும் வழியிலே அவர்கள் விவானிடம் கூற அவனது அழைபேசிக்கு அழைக்க அவன் அதனை எடுக்கவே இல்லை. அதற்குள் இரு வண்டியும் பாதி வழியில் சந்திக்க அவர்கள் யூ டர்ன் அடித்து இவனின் காரை ஒன்வெர்டேக் செய்து நிறுத்தினர்.
காரிலிருந்து கீழே இறங்கி வந்த அவனிடம் விவரத்தை கூறி விஹானாவை பற்றி விசாரிக்க அப்பொழுதுதான் அவனுக்கு அவள் வீட்டிற்கு செல்லவில்லை என்பது ஒருவாராக புரிந்தது. பின்னர் அவர்களிடம் தானே விஹானாவை அழைத்து வருவதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துவிட்டு policestation ஐ நோக்கி விரைந்தான்.
அங்கு உள்ளே சென்றதும் அவனின் கண்கள் விஹானாவை தேடியது. அங்கோ d&d கேசில் பிடிபட்ட கல்லூரி மாணவர்களும் அன்றைக்கு பிடிக்கப்பட்ட மற்ற குற்றவாளிகள் முதலியோர் இருந்தனர். ஒரு ஓரமாக பெஞ்சில் கால்களை மடக்கி நெஞ்சோரமாய் கைகளை கட்டிக்கொண்டு குறுகி தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள். அங்கிருந்த இளைஞர்கள் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அக்காட்சியை பார்த்த அவனுக்கு ரத்தமே கொதித்தது. இவை எல்லாவற்றுக்கும் தானே காரணம் என்று தன்னையே நொந்துகொண்டான். அவளை நெருங்க நெருங்க இவனின் இதயம் படபடவெனா அடித்துக்கொண்டது. கிட்டே சென்றதும்தான் அவள் குலுங்கி அழுவது தெரிந்தது. அவளிடம் சென்று விஹானா என்று கூப்பிட அவள் பார்க்காததால் அவளின் தோளை தொட்டு கூப்பிட, சடரென்று பயத்துடன் நிமிர அவளின் முகமே அழுதழுது வீங்கி போய் கண்கள் ரத்த சிகப்பாய் இருந்தது இருந்தது. இவனை கண்டதும் பயத்தில் எழுந்து தள்ளி நின்று கையைகட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள்.அப்பொழுதுதான் அவளின் வெள்ளை நிற shirt ஐயும் மஞ்சள் நிற skirt ஐயும் அணிந்திருந்த அவளின் உடை ஈரத்தில் உடலோடு ஒட்டி அவளின் உடலை காட்டியதை கவனித்தான்.
எல்லாரும் அவளையே பார்ப்பதை கண்டு அப்படியே தன் உடலை கைக்கொண்டு மறைத்தபடி மடங்கி மூலையில் சுருண்டு உட்கார்ந்தாள். அவன் திரும்பி பார்த்து அவளை பார்த்தவர்களை கண்களாலே சுட்டு பொசுக்கிக் கொண்டிருந்தான்.
Comments
Post a Comment