இவ்வாறு தீக்ஷித்தும் alessandro வும் தங்கள் அடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.அப்பொழுது
ப்ரோ, எனக்கு இன்னொரு டவுட் கூட இருக்கு. நம்ம டாக்டர் அங்கே போய் சேர்வதற்குள் விவான் அவனின் எல்லையை மீறி விஹானாவிடம் ஏதேனும் தவறாக நடந்து இருந்தால், அதைப் பற்றி நாம் யோசிக்கவே இல்லையே அண்ணா! இவ்வளவு செய்தவன் அதைப்பற்றி யோசிக்காமலா இருந்திருப்பேன்? அந்த ஹோட்டலில் ஒரு ஆளைப் பிடித்து அவனிடம் பணத்தையும் அவளுக்கு நான் வாங்கிய உடையையும் கொடுத்து என்ன செய்ய வேண்டும் என்று இன்ஸ்ட்ரக்சன் கொடுத்துவிட்டே வந்தேன். ஆதலால் நமக்கு பாதகமாக அங்கு ஒன்றும் நடந்திருக்காது.
நீ அதைப் பற்றி யோசிக்காமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து ஏதாவது ஐடியா இருந்தால் கொடு என்று கூறிவிட்டு தன் யோசனையை தொடர்ந்தான்.
அதேநேரம் இன்று ஹோட்டலில் விவான் இரவு முழுவதும் கண்விழித்து இருந்ததால் மிகவும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.விஹானா முதலில் கண்களை சற்று லேசாக திறந்து பார்க்க, அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூச சற்று மூடி ஆசுவாசப்படுத்தி கொண்டு மறுபடியும் கண்களை திறந்தாள். ஒரு நிமிடம் அவளுக்கு என்ன நடந்தது என்று நினைவில் இல்லை, பின்னர் சுற்றும் முற்றும் பார்த்தால் பக்கத்தில் டாக்டர் உறங்கிக் கொண்டிருந்தார். அவளுக்கு அவரை யாரென்றே தெரியவில்லை இவர் யார் என்று யோசித்துக் கொண்டே இருக்கும் பொழுது டாக்டர் கண் விழித்தார்.
பின்னர் டாக்டர் அவளுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதித்தார். பின்னர் அவளை பார்த்து உனக்கு இரவு முழுவதும் பயங்கரக் காய்ச்சல் அடித்தது என்றுக் கூறினார். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு உள்ளே அறையில் தூங்கிக் கொண்டிருந்த எழுந்து வந்தான்.
டாக்டரிடம் விஹானாவிற்கு காய்ச்சல் சரியாகி விட்டதா? என்று கேட்டான்.
அவளுக்கு தற்போது ஒன்றும் இல்லை என்று டாக்டர் கூறியதும் தான் நிம்மதி அடைந்தான்.
பின்னர் விவான் வலை பார்த்து, விஹானா! நீ சற்று நேரம் ஓய்வெடு, நான் சென்று டாக்டரை அனுப்பி விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு டாக்டரை வெளியில் அழைத்துச் சென்றான்.
வெளியே வந்தவுடன்,அவரிடம் விஹானா என்ன என்ன சாப்பிட வேண்டும், எந்தெந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்! என்று எல்லா விஷயத்தையும் கேட்டறிந்தான்.
அவளுக்கு காலையில் இட்லியை சாப்பிட கொடுத்துவிட்டு இந்த மாத்திரையை உட்கொள்ள செய்யுங்கள். இரண்டு நாட்களுக்கு மருந்து மாத்திரைகளை எழுதித் தருகிறேன் தவறாமல் எடுத்துக் கொள்ள சொல்லுங்கள் அதுவே போதும் வேறு எதுவும் தேவைப்படாது என்று கூறிவிட்டு டாக்டர் பீஸை வாங்கிக் கொண்டு சென்றார்.
அவர் சென்றதும் உள்ளே சென்று விஹானா என்ன செய்கிறாள்? என்று பார்த்தான்.
அவள் சுவற்றை பார்த்துக்கொண்டு யோசித்தபடியே அமர்ந்திருந்தாள்.
அவளிடம் சென்று, விஹானா! நேற்று நடந்ததை கனவாக நினைத்து எல்லாவற்றையும் இங்கேயே மறந்துவிடு! நேற்று நடந்த தில் உன் தவறு என்று ஒன்றுமே இல்லை என் மீதும் சூழ்நிலை மீதும் தவறு இருக்கிறது. இனி அதுபோல் தவறை நான் செய்ய மாட்டேன்.அதுபோன்ற சூழ்நிலையையும் உருவாக நான் விடமாட்டேன்.
நேற்று நடந்தவற்றை வீட்டிற்கு சென்று, உன் அம்மாவிடம் சொன்னால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள் அவர்களுக்கு என்று இருப்பது நீ ஒருத்தி மட்டுமே! அவர்கள் வாழ்வது உன் ஒருத்திக்காக மட்டும் தான். ஆதலால் அவர்களிடம் இதனை சொல்லி அவர்களை கஷ்டப்படுத்தாதே. தயவு செய்து என்னை ஒதுக்காதே! முன்பு எப்படி பழகினாயோ அதுபோலவே பழகு. எனக்கு தெரியும் நான் தவறு தான் செய்தேன், ஆனால் நான் அன்று இருந்த கோபத்தினால் ஏதோ கண் மண் தெரியாமல் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு! என்று பேசிக்கொண்டே விஹானாவை பார்த்தான்.
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனால் கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது.
இவன் பார்வைக்கு, அவன் இவ்வளவு தவறு செய்தும் இவன் இன்னும் சாரி கேட்கவில்லையே என்று அவள் யோசித்துக் கொண்டிருப்பதாக தோன்றியது.
சற்று நேரம் எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் ஆழ்ந்த மூச்சு ஒன்றை விட்டுக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்து ஐ அம் சாரி, விஹானா! என்று கூறினான்.
அதற்கும் அவள் ஒன்றும் கூறாமல் அவனையே பார்த்தபடி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அந்நேரம் யாரோ காலிங் பெல்லை அழுத்த இவன் போய் கதவை திறந்தான். அங்கே இவன் ஆர்டர் செய்திருந்த உணவை எடுத்துக்கொண்டு ஒருவன் வந்து இருந்தான். அவனிடம் காசை கொடுத்துவிட்டு உணவு பொட்டலத்தை பெற்றுக்கொண்டான்.
அவளுக்கு இடியாப்பமும் தனக்கு சப்பாத்தியும் ஆர்டர் செய்திருந்தான். இடியாப்பத்திற்கு பாயாசம் தேங்காய் பால் இரண்டும் சேர்ந்தே வர அவன் தேங்காய் பால் எடுத்து ஊற்றி அவளிடம் சாப்பிடக் கொடுத்தான். அவளோ அதனை வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
விஹானா நீ நடந்ததையே நினைத்துக் கொண்டிருப்பதால் , நடக்கப்போவது ஒன்றும் இல்லை. அதை இங்கே இப்பொழுதே மறந்துவிடு! இப்பொழுது இந்த இடியாப்பத்தை சாப்பிடு நீ மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீ மிகவும் அனிமிக்காக உள்ளாய் என்று டாக்டர் கூறினார். அவளிடம் எந்த அசைவும் காணப்படவில்லை என்று அவனை எடுத்து ஊட்ட ஆரம்பித்தான். அவனது கைகளை தடுத்த விஹானா அவளே எடுத்து உண்ண ஆரம்பித்தாள். முதலில் அவளது கைகள் லேசாக நடுங்க ஆரம்பித்தது பின்னர் அவள் எதையும் பொருட்படுத்தாமல் பசையில் அனைத்தையும் எடுத்து உண்டாள். அதன் பிறகே அவளது கை நடுக்கம் சிறிது குறைந்தது.
அவள் உண்டு முடித்ததும் அவளுக்கான மாத்திரையும் தண்ணீரையும் எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் மாத்திரையும் விழுங்கிய பிறகு அவளை சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு சிவனுக்கான உணவு பொட்டலத்தை பிரித்து உண்ணத் தொடங்கினான்.
பின்னர் இவன் உண்டு முடித்ததும் விஹானாவை பார்த்து கிளம்பலாமா? என்று கேட்டான். அவள் தலை அசைத்ததும் இவர்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினர்.
ரிசப்ஷனில் பில்லை கட்டிவிட்டு இருவரும் காரில் ஏறி வீட்டிற்குச் சென்றனர். சில சங்கடங்களை தவிர்ப்பதற்காக அவன் ஏற்கனவே விஹானாவின் அம்மாவை பாட்டியோடு இரண்டு நாட்களுக்கு கோவிலுக்கு அனுப்பி வைத்திருந்தான். எனவே விஹானாவின் அம்மா நாளைதான் வருவார் என்பது இருவருக்கும் வெவ்வேறு விதத்தில் ஆறுதலாக இருந்தது. இவளுக்கு அம்மாவிடம் என்ன சொல்லி எதை சொல்லி அவரிடம் சமாளிப்பது என்று தெரியவில்லை ஆதலால் அவள் இதனை நினைத்து சிறிதளவு நிம்மதி அடைந்தாள்.
விவானும், அவளது அம்மாவை தற்போது பார்த்திருந்தால் நிச்சயம் ஏதாவது கூறியிருப்பாள். அவர்கள் நாளை தான் வருவார்கள் என்பதால் இவர் சிறிது ஓய்வெடுத்து விட்டு பின்னர் அந்த நிகழ்வை மறந்து விடுவாள் என்று நினைத்து அவன் வேலையை பார்க்கச் சென்றான்.
விஹானாவும் மாத்திரைகளின் உபயத்தால் தூங்கச் சென்றதும் உடனே தூங்கி விட்டாள்.
இரவு அவள் எப்படியும் சாப்பிட வர மாட்டாள் என்று நினைத்த விவான் அவளது அறைக்கே சாப்பாட்டை அனுப்பி வைத்தான். பிறகு அவளது அலைபேசியில் சாப்பிட்டு மாத்திரை போடு என்று குறுஞ்செய்தியையும் அனுப்பினான்.
விஹானாவும் எங்கே டைனிங் டேபிளில் சென்று அவனுடன் சாப்பிட வேண்டுமோ? என்று தயங்கி பேசாமல் சாப்பிடாமல் இருந்து விடலாம் என்று முடிவு செய்திருந்தாள்.
சாப்பாடு அறைக்கு வரவும், சாப்பிட்டு விட்டு மாத்திரை போட்டுக்கொண்டு தூங்கலாம் என்று முடிவு செய்து சாப்பிட்டு மாத்திரையை போட்டு விட்டு உறங்க சென்றாள்.
மறுநாள் காலை விஹானாவின் அம்மா கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்தார். அதே நேரம் அங்கு வேலை செய்பவர் ஒருவரின் மகளின் பூப்பெதிய சடங்கிற்கு அங்கு வேலை செய்பவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.
வீட்டிற்கு வந்ததும், அவளின் அம்மா "அந்த சடங்கில் கொள்ள வேண்டும் சீக்கிரம் கிளம்பு! "என்று அவளை கிளம்ப சொன்னதும் வேறுவழியின்றி, அவளும் கிளம்பி அவர்களுடன் அந்த சடங்கிற்கு சென்றாள்.
அங்கே நிறைய குழந்தைகளும் அவள் வயதையொத்த பெண்களும் நிறைய பேர் இருந்ததால் அவர்களுடன் விளையாடிக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.அவளின் மனநிலையும் ஒரு இயல்பு நிலைக்கு வந்திருந்தது. சடங்கு முடிந்ததும் விஹானாவும் அவளின் தாயாரும் வீட்டிற்கு வந்தனர்.
அங்கு போய் வந்ததில் இவளுக்கு நடந்ததைத் தன் தாயாரிடம் சொல்ல மனம் வரவில்லை.
மறுநாள் விவான், "இவளிடம் ஆபீஸுக்கு செல்ல வேண்டும்" என்னுடன் வா!என்று அழைத்தான்.
அதற்கு விஹானாவோ, " இவ்வளவு நடந்தும் அந்த ஆபீஸ் இருக்கு நான் ஏன் வரவேண்டும்" என்று கேட்டு விட்டு தனது அறைக்கு சென்று விட்டாள்.
விவானோ சிரித்தபடியே உன்னை எவ்வாறு வர வைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று கூறிவிட்டு விஹானாவின் தாயாரிடம் சென்றான்.
விஹானாவின் தாயாரிடம் சென்று, ஆன்ட்டி இன்று என்னுடைய பி ஏ ஆபிஸ்க்கு வரவில்லை. சில கணக்கு வழக்குகளை இன்றே முடித்தாக வேண்டும். அதற்கு விஹானா வந்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நான் என்னுடைய ஆபிஸிற்கு இன்று விஹானாவை அழைத்துச் செல்ல வா? என்று கேட்டான்.
அதற்கு விஹானாவின் தாயாரும், தாராளமாக அழைத்துச் செல்லுங்கள் தம்பி! அவள் வீட்டில் சும்மா தானே இருக்கிறாள். அதற்கு பதில் அங்கு வந்து கணக்கு வழக்குகளை பார்த்தால் உங்களுக்கும் உதவியாக இருக்கும். இதில் என்னிடம் கேட்க என்ன இருக்கிறது, தாராளமாக அழைத்துச் செல்லுங்கள்! என்று கூறினார்.
தாயின் வற்புறுத்தலின் பேரில் வேறு வழியில்லாமல் விவானுடன் அவனுடைய ஆபீஸுக்கு விஹானா சென்றாள்.
அங்கு ஏற்கனவே ஆபீஸில் இவள் அரெஸ்ட் ஆன விஷயம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி கொண்டிருந்தன. பரவிக் கொண்டிருந்தன என்று சொல்வதைவிட பரப்பிக் கொண்டிருந்தாள் பிரியா என்று சொல்லலாம்.
ஏற்கனவே நடந்த ஏற்கனவே நடந்த நிகழ்வினால் விஹானா திரும்பவும் ஆபீஸுக்கு வரமாட்டாள் என்று பிரியா கணக்குப் போட்டிருந்தாள். ஆனால் அதற்கு நேர்மாறாக விவான் விஹானாவை வற்புறுத்தி ஆபிஸிற்கு கூட்டி வந்தான்.
இவர்கள் இருவரும் வருவதை பார்த்து ஆபீஸில் இருந்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டே பார்த்தனர். இவன் அவர்களை முறைத்துப் பார்த்ததும் அனைவரும் தலையை கீழே குனிந்து கொண்டனர். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது விஹானாவிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. நேரே தனது அறைக்குச் சென்றவன், இன்டர்காமில் பிரியாவை அழைத்தான்.
பிரியாவும் யோசனையுடன், கதவைத் தட்டிவிட்டு, "மே ஐ கம் இன் சார் " என்று கேட்டாள். அவளை உள்ளே வரச்சொல்லி, அனைத்து ஸ்டாப் களையும் மீட்டிங் ஹாலில் அசெம்பிள் ஆக சொல்லுங்க பிரியா! என்று கூறினான்.
அவளும் யோசனையாய் எதற்கு சார் என்று கேட்டாள். அவனோ அவளை முறைத்துப் பார்த்து, " இங்கு நான் முதலாளியா? இல்லை நீங்கள் முதலாளியா? பிரியா "என்று கேட்டான்.
ஐந்து நிமிடத்தில், "அனைவரும் வந்து விட்டார்கள் சார்" என்று பிரியா இன்டர்காமில் தெரிவித்தாள்.
மீட்டிங் ஹாலுக்கு சென்று நேரே மைக்கை எடுத்து, " காய்ஸ் நேரே விஷயத்திற்கு வந்து விடுகிறேன். இதுவரை நான் உபயோகித்து வரும் பிரீமியம் அக்சஸ் கார்டின் இன்னொரு காஃபி இதோ என்று என்று கூறி ஒரு கார்டை எடுத்து அனைவருக்கும் காட்டினான்.
இது இனிமேல் விஹானாவிடம் இருக்கும். என்னை தவிர இனிமேல் இங்கு இருக்கும் அனைத்தையும் அக்சஸ் செய்யக்கூடிய மற்றொரு ஆள் விஹானா என்று கூறிவிட்டு அளவைக் கூட்டிக் கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்று விட்டான். ஏற்கெனவே நடந்த சம்பவத்திற்கு அனைவருக்கும் விளக்கம் கூறாமலே விஹானாவிற்கு இந்த ஆபீஸில் அனைத்து உரிமையும் உண்டு அதை பற்றி காஸ்ஸிப் பேச இங்கு ஒருவருக்கும் உரிமை இல்லை என்று சொல்லாமல் சொல்லி காட்டிவிட்டான்.
அனைவரும் ஒருவர் பின் ஒருவராக மீட்டிங் ஹாலில் இருந்து கலைந்து சென்றனர். நடப்பதையெல்லாம் பார்த்த பிரியாவிற்கு அப்படியே வயிறு எல்லாம் எரிந்தது. அக்சஸ் கார்டையே அவள் கையில் கொடுக்கிறார் என்றால் அவளும் இந்த கம்பெனியின் முதலாளி போல் அல்லவா என்று என்று நினைத்து கண்கள் சிவக்க கோபத்துடன் அங்கிருந்து தனது அறைக்குச் சென்றாள். இப்படி தன் திட்டம் எல்லாம் தன் கண் முன்னாடியே தவிடுபொடி ஆகின்றது என்று கோபத்தில் மேஜையை குத்தினாள்.
இங்கு அவனது அறையில் அவன் அங்கே மீட்டிங் ஹாலில் பேசியதைப் பற்றி விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தாள் விஹானா.
அதற்க்கு அவன், "அங்கே அவர்களுக்கு சொன்னது தான் இங்கே உனக்கும் இதைப்பற்றி கேட்கவும் பேசவும் உனக்கும் எந்த உரிமையும் இல்லை "என்று கூறினான். ஏனென்றால் இங்கு நான் தானே முதலாளி. இதைத்தானே நீ அன்று ஹோட்டலில் கூறினாய் என்று அவள் விலகியிருப்பதற்கு அவள் ஆனால் கூறிய காரணத்தையே அவளுக்கு திரும்ப கூறினான்.
அன்று நடந்ததைப் போல் யாராவது பைலை திருடி விட்டு சென்றால்,அந்தப் பழி என் மீதுதான் விழும் அப்போது நான் என்ன செய்வேன்? என்று கேட்டாள்.
அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அது அனைத்தையும் நான் செய்து விட்டேன். என்னுடைய பொருள் எதுவாயினும் அதை எப்படி காத்துக் கொள்வது என்பது எனக்கு தெரியும் என்று இரு பொருள்பட அவளைப் பார்த்துக் கூறினான்.
பின்னர் இருவரும் ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு சென்றனர். அடுத்து ஒரு நாள் இப்படியே அமைதியாக சென்றது இருவரும் ஒருவருக்கொருவர் அதன்பிறகு பேசிக் கொள்ளவே இல்லை.
மறுநாள் இவள் காலை செல்வதற்காக கிளம்பினாள். அன்று பார்த்து இவனுக்கு ஏதோ அவசர வேலை வந்து விடவே டிரைவரை கூப்பிட்டு அவளை ஜாக்கிரதையாய் காலேஜில் விட்டுவிட்டு வர சொன்னான்.
விஹானாவும் இவன் வரவில்லை என்ற நிம்மதியில் மிகவும் மகிழ்ச்சியாக காரில் ஏறி கல்லூரிக்கு புறப்பட்டாள்.
அங்கே விஷாகா, விவானின் ஆபீஸில் நடப்பதையெல்லாம் கவனிக்க ஒரு ஆளை பணம் கொடுத்து கரெக்ட் செய்திருந்தாள்.
அந்த ஆள் மூலம் அங்கு நடந்த சம்பவம் அனைத்தையும் கேள்விப்பட்டு விஹானாவை அவமானப்படுத்த ஒரு திட்டம் தீட்டினாள்.
அன்று ஹாஸ்டல் வார்டன் பர்சனல் ஒர்கிற்காக ஒரு வாரம் இருமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்று இருந்தார். அதனால் அங்கு டெம்பரரி வார்டனாக வேறு ஒரு ப்ரோபஸ்ஸரை நியமித்து இருந்தனர்.
அவருக்கு விஹானாவை பற்றி ஒன்றும் தெரியாது. ஆதலால் அவரைக் கொண்டு தன் திட்டத்தை செயல்படுத்த எண்ணினாள்.
அதன்படி ஹாஸ்டலில் தன் தோழி ஒருத்தியின் டைமன்ட் செயினை காணவில்லை என்று புகார் கொடுத்து ஹாஸ்டல்லில் விசாரிக்க வேண்டும் என்று டெம்பரரி வார்டனிடம் கூறினாள்.
ஏற்கனவே வேறு ஒருத்தியின் மூலம் விஹானாவை பற்றிய தப்பான பிம்பத்தை அந்த வார்டனிடம் ஏற்படுத்தி இருந்தாள்.
அதற்கேற்றார் போல் இந்தப் பிரச்சினையையும் அவரிடம் கொண்டு செல்ல அவரின் கவனம் முழுக்க விஹானா விடமே இருந்தது. பெயருக்கு அனைத்து அறைகளையும் சோதனையிட்டு அவளின் அறையை மட்டும் தலை கீழாகப் புரட்டிப் போட்டார்.
விஷாகாவின் தோழிகளும் ஏற்கனவே திட்டமிட்டபடி அந்த டைமன் செயினை அவளது ட்ராவெல் பாக்கிற்குள் அவள் கிளாசில் ஒரு பெண்ணை கரெக்ட் செய்து அவளின் மூலம் அந்த பாக்கிற்குள் வைத்து விட்டனர்.
ஊரிலிருந்து வந்திருந்த விஹானாவிற்கு முதலில் எதுவுமே புரியவில்லை. அனைவரும் ஊருக்கு சென்றிருக்க எப்படி அந்த செயின் ஹாஸ்டளில் போயிருக்கும் என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
பின்னர் அவளது அறையை மட்டும் அதிக தீவிரத்துடனும் அதிக நேரமாகவும் சோதனை செய்து கொண்டு இருப்பதாக நினைத்தாள்.
அதற்கேற்றார் போல் வார்டனும் அவளை மரியாதை குறைவாக நடத்துவதாக தோன்றியது.
அவளது அறையில் சோதனை முடியும் வரை அவளை எங்கேயுமே நகர விடவில்லை. விஷாகாவும் அவளது தோழிகளும் பிளான் செய்திருந்த படி அவளின் டிராவல் பேக்கில் இருந்து அந்த டைமண்ட் செயினை எடுத்தனர். அதனை நம்ப மாட்டாமல் விஹானா செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதனைப் பார்த்த வார்டன் அவளை பார்த்து பேசக்கூடாத வார்த்தைகளை எல்லாம் அனைவரின் முன்பு பேசினார். அதனைக் கேட்டவள் அவமானத்தில் கூனி குறுகி நின்றாள்.
பின்னர் வார்டனிடம் நான் அந்த செயினை எடுக்கவில்லை என்று எவ்வளவோ மன்றாடிப் பார்த்தாள்.
அவளது வார்த்தைகளுக்கு வார்டன் செவி கொடுக்கவே இல்லை.
பின்னர், அந்த செயினை நான்தான் எடுத்தேன் என்பதற்கு என்ன ஆதாரம் மேடம் வேறு யாராவது எடுத்து கூட என் வாயில் போட்டு இருக்கலாமே என்று அழுது கொண்டே கேட்டு பார்த்தாள்.
அந்த வார்டனும் அதேபோல் நீ அந்த செயினை எடுக்கவில்லை என்பதற்கும் என்ன ஆதாரம் என்று கேட்டார்.
அவளோ என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்தாள். அவள் அவமானப்படுவதை விசாகாவும் அவளது தோழிகளும் கண்குளிர ரசித்து பார்த்தனர்.
விஹானா எவ்வளவோ கெஞ்சியும் அவளை நம்பாமல், " இதனை இங்கே வைத்து பேசினால் சரிப்பட்டு வராது நட! பிரின்ஸ்பல் ரூமுக்கு அங்கே வைத்து அனைத்தையும் பேசிக் கொள்வோம் "என்று வார்டன் கூறினார்.
அவளோ நான் இந்த பேகை நான் ஊரிலிருந்து வரும் பொழுது கொண்டு வந்தேன். லேட் ஆகிவிட்டது என்று நேரே வகுப்பறைக்கு தான் சென்றேன்.
பின்னர் அங்கிருந்து நான் இங்கே வரும் முன்னரே அந்த செயினை காணவில்லை என்று பிரச்சினை போய்க் கொண்டிருந்தது என்று கூறினாள்.
அது எப்படி என் பேக்கில் வந்திருக்க முடியும் என்று அழுதுக் கொண்டே கேட்டாள். இவளால் எங்கே மாட்டிக் கொள்வோமோ? என்று நினைத்த விசாகா தான் பிரின்சிபாலிடம் கூற நினைத்த விஷயத்தை வார்டனிடம் கூறினாள்.
மேம் இவள் ஏற்கனவே ஒரு ஆபிஸில் ஏதோ பைலை திருடி விட்டாள் என்று போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்திருக்கிறாள். உண்மையா? இல்லையா? என்று நீங்களே கேளுங்கள் மேம்! என்று கூறினாள்.
விஹானாவோ மேம்! அது எதுவோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கில் நடந்தது. அதன்பிறகு நான் தவறு எதுவும் செய்யவில்லை என்று அவர்களே அனுப்பி விட்டார்கள் என்று அவள் அழுதுகொண்டே நடந்ததை கூறிக் கொண்டிருக்க
போதும் நிறுத்து! விஷாகா சொன்னதுபோல் ஃபைலை திருடியதற்காக உன்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்களா? இல்லையா? என்பதை மட்டும் சொல் என்று கேட்டார்.
அவள் திரும்பவும் ஏதோ கூற வர அவர் கையை நீட்டி ஆமாவா இல்லையா என்று மட்டும் கூறு என்று மிரட்டினார்.
அவள் தலையை ஆட்டி ஆமா என்று ஒப்புக்கொள்ள அவர் பிரின்ஸ்பல் அறையை தொடர்பு கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.
அவர் கூறியதும் அங்கிருந்த மாணவிகளை கலைந்து போகச் சொல்லிவிட்டு விஹானாவை மட்டும் அழைத்துக்கொண்டு பிரின்ஸ்பல் ரூமிற்கு சென்றார்.
அங்கு பிரின்ஸ்பல் ஏற்கனவே விஹானாவின் கார்டியனிற்கு போன் செய்து நடந்தவற்றை கூற, அங்கு மறுமுனையில் என கூறினார்களோ? இவர் பதட்டத்தில் எழுந்து நின்று படபடப்புடன் சாரி சார் சாரி சார் என்று கூறினார். நீங்கள் எப்படி சொல்கிறீர்களோ அதைப்போலவே செய்து விடுகிறேன் என்றும் கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
ஏற்கனவே விவானும் அங்கே பிசினஸ் விஷயமாக ஒருவரை பார்க்க காலையிலேயே அந்த ஊருக்கு வந்திருந்தான். ஆதலால் அவன் பக்கத்திலேயே இருந்ததால் விஷயம் கேள்விப்பட்டதும் விஹானாவை பார்க்க காலேஜிற்கு வந்தான். அங்கே பிரின்சிபாலின் ரூமில் அழுதுகொண்டிருந்த விஹானாவை கண்டான்.
அவளைப் பார்த்ததும் எதிரே வந்த பிரின்சிபலை கூட பார்க்காமல், அவளிடம் நேரே சென்று ஒன்றுமில்லை விஹானா! நான் வந்துவிட்டேன். எந்த பிரச்சனையும் இல்லை, நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன். நீ எதற்கும் கவலைப்படாதே! என்று கூறினான்.
அழுது கொண்டிருந்த விஹானா அவனை பார்த்து இது எல்லாம் உங்களால் தான் என்று அழுதுக்கொண்டே கோபமாக கூறினாள்.
Comments
Post a Comment