உடனே அவன் அவளுடைய உடம்பை மறைக்க அவளை கட்டியணைக்க முயல அவளோ அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள். உடனே அவன் உடுத்திருந்த blazer ஐ கழட்டி அவளுக்கு போர்த்திவிட்டான். அவள் அதனை தன் பற்றுக்கோளாய் இறுக்கி பற்றிக்கொண்டு கேவி கேவி அழ தொடங்கினாள். அவள் அழுவதை பார்க்க விவானுக்கு கோவம் கலந்த குற்ற உணர்ச்சியாய் இருந்தது.
அவளுக்கு இன்னமுமே தான் என்ன தவறு செய்தோம்? எதற்கு அவள் மேல் அவன் கோவம் கொண்டான். எதற்காக போலிசில் மாட்டிவிட்டான் என்று அவள் யோசித்தாள்.
ஆம் அவள் அவன் வேண்டுமென்றே இவளை மாட்டிவிட்டுவிட்டான் என்றே நினைத்தாள். தான் ஏதோ தவறு செய்ததாக நினைத்து தன்னை பழி வாங்க நினைத்து இப்படி செய்துவிட்டான் என்றே நினைத்தாள்.
கிட்ட தட்ட பாதியளவு உண்மைதானே! இந்த ஆபீஸ் செக்யூரிட்டி விஷயமும் காவல் நிலையமும் மட்டுமே தற்செயலான
சம்பவம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை தீக்ஷித் கூறியது நடக்க துவங்கி இருக்கிறது.
விவான் அவனை அறியாமலே விஹானாவிடமிருந்து விலகி கொண்டிருக்கிறான்.
பின்னர் இன்ஸ்பெக்டரிடம் கூறிவிட்டு போர்மலிட்டிஸ் ஐ முடித்துவிட்டு கிளம்பினர். அதுவரை விஹானா விவானை தலை நிமிர்ந்து பார்க்க கூட இல்லை.
அதன்பிறகு அவளை பார்த்து வா வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி அழைத்து சென்று காரில் அமரவைக்க காரின் முன்பக்க கதவை திறக்க, அவளோ எதுவும் பேசாமல் பின்பக்க கதவை திறந்து அமர்ந்துக்கொண்டாள். அந்நேரம் அவளின் செயல் அவனுக்கு கோபத்தை மூட்டிருந்தாலும், தன் மீதுள்ள தவறை எண்ணி, அவளுடன் அந்நேரத்தில் வாக்குவாதம் செய்யாமல் காரை எடுத்தான்.
போகும் வழி எங்கும் அவள் அழுதுக் கொண்டே வந்தாள். விவானால் ஆறுதல் கூட சொல்ல முடியவில்லை.
விவான் காரை ஒட்டியப்படியே முன்பக்க கண்ணாடி வழியாக விஹானாவை பார்த்துக் கொண்டே வந்தான்.விடாமல் அழுததில் அவளின் முகம் நன்றாக சிவந்து வீங்கி இருந்தது. அவனுக்கே அவளை பார்க்க மிகவும் பாவமாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது.
சிறிது நேரத்தில் அவள் அழுகை குறைந்து முனகலாய் வெளிப்பட்டது. உடனே விவான் காரின் உள்ளே இருக்கும் லைட் ஐ ஆன் செய்து பின்னால் திரும்பி பார்த்தான்.
அவளின் உடல் நடுங்க காரின் காதவோரமாய் சாய்ந்து கண்களை மூடியவாறு படுத்திருந்தாள். வாயிலிருந்து மெல்லிய முனகல் சத்தம் மட்டும் கேட்டது. உடனே காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு காரிலிருந்து இறங்கி பின் பக்க கதவை திறந்து விஹானாவின் அருகில் அமர்ந்து என்ன வென்று பார்த்தான்.
அவளோ சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் தன்னை இறுக்க அனைத்துக்கொண்டு ஏதேதோ பிதற்றினாள்.
உடனே விவானும் அவளது நெற்றியை தொட்டு காய்ச்சல் அடிக்கிறதா? என்று பார்த்தான்.
அவளது உடம்போ அனலாய் கொதித்தது.மேலும் அவளது உடம்பு குளிரில் நடுங்க மேலும் தன்னை இன்னும் இறுக்கி கொண்டு தன்னுளே புதைந்தாள்.
அவனுக்கோ என்ன செய்வதென்று தெரியாமல் அவளின் பக்கத்தில் அமர்ந்து அவளை இறுக்கமாக கட்டி பிடித்து அமர்ந்துக் கொண்டான்.
அவளோ அதனைக் கூட அறியாத நிலையில் இருந்தாள்.
உடனே அவன் அவளை காரின் முன் இருக்கையில் அமர வைத்து விட்டு வண்டியை நேரே 24 மணி நேர கிளினிக்கிற்கு சென்றான்.அங்கு உள்ளே சென்று விசாரித்தான்.
அங்கோ அன்று மருத்துவர் வரவில்லை செவிலியர்கள் மட்டுமே இருந்தனர்.
இவனோ ஏற்கெனவே அணிந்திருந்த கோட்டை அவளுக்கு போர்த்திருந்தான். கோட்டுக்குள்ளே வெள்ளை நிற முழுகை சட்டையை அணிந்திருந்தான். அவன் ஏற்கெனவே மழையில் சொட்ட சொட்ட நனைந்து இருந்தமையால் அவனின் உடலோடு அந்த சட்டை ஒட்டி, அவனின் கம்பிரமான முறுக்கு உடலைக் காட்டி அவனை பேரழகனாய் காட்டியது.
அங்கிருந்த செவிலியர் அனைவரும் அவனையே ஆ!!!! வென பார்த்தனர்.
அவர்கள்,அவ்வாறு பார்த்ததை கூட கவனிக்க நேரமில்லை அவனுக்கு.இதே வேறொரு நாளாய் இருந்தால் அவர்களை ஒரு வழியாய் ஆக்கிருப்பான். அங்கிருந்த மூத்த செவிலியரிடம் விவரத்தை சொல்லிவிட்டு ஓடோடி சென்று விஹானாவை காரிலிருந்து தூக்கி வந்தான். அவன்,அவளை தூக்கி வருவதை பார்த்த சில செவிலியர்கள் அவளை பொறாமையோடு பார்த்தனர்.
அதனை அவன் கவனித்தாலும் இப்போதைக்கு கோவப்பட்டால் அது விஹானாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சையை பாதிக்கும் என்பதால் அமைதியாய் இருந்தான்.
அங்கிருந்த தலைமை செவிலியரிடம் கூறி, அப்போதைக்கு காய்ச்சல் குறைய ஒரு இன்ஜெக்ஷன் மட்டும் போட்டுக்கொண்டு அவளை வெளியே தூக்கி வந்தான்.
ஒரு முடிவு எடுத்தவனாக அருகிலிருந்த ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி அவளுக்கு கொஞ்சம் சரியானதும் மறுநாள் காலை செல்லலாம் என்று முடிவெடுத்தான். அவன் எப்பொழுதும் தங்கும் அளவிற்கு அங்கு ஹோட்டல் எதுவும் இருக்கவில்லை.
அங்கு இருந்ததே ஒன்றிரெண்டு ஹோட்டல்களே, அதில் இருந்து ஒரு நல்ல ஹோட்டலை சென்றடைந்தவன், ரிசெப்ஷனில் suite ரூம் வேண்டுமென கேட்டான்.
அவர்களோ இங்கு suite ஏதும் இல்லை என்று கூறிவிட்டனர். பின்னர் அவர்களுடன் வாதாடி, அந்த ஹோட்டலின் முதலாளி வந்தால் தங்குவதற்கு என்று எல்லா வசதி வாய்ப்புடன் ஒரு ரூம் இருந்தது.
அவர்களிடம் பேசி தான் அதிக வாடகை கூட கொடுக்க தயார் என்று கூற, அவர்களும் போன் செய்து ஓனரிடம் கேட்க, அவரும் அதிக வாடகை என்பதால் ஒப்புக் கொண்டார்.
அவன் முதலில் அந்த அறைக்கு சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று அந்த அறையை போய் பார்த்தான். அந்த அறை கூட சூட் (suite) ரூம் போலவே தான் இருந்தது.அவனுக்கு திருப்தியாக உணர்ந்ததும் விஹானாவை சென்று காரிலிருந்து தூக்கி வந்தான்.
அவளை ரூமில் உள்ள சோபாவில் முதலில் கிடத்தினான்.அவன் வரும் வழியிலே பக்கத்தில் இருக்கும் லேடி டாக்டரின் எண்ணிற்கு அழைத்து அவரிடம் விஹானாவின் உடல்நிலையை எடுத்துரைத்து அதற்குரிய ஏற்பாட்டோடு ரெடி யாக இருக்குமாறும் தான் இடம் சொன்னதும் அங்கு வந்துவிடகோரி அவனின் PA சதீஷ்ற்கு போன் செய்து கூறிருந்தான். ஆதலால் அவனுக்கு இடத்தை தெரிவிக்கும் பொருட்டு தன்னுடைய வாட்சப்பில் இருந்து இவர்களுடைய லொகேஷன் ஐ ஷேர் செய்தான்.
ஆதலால் ரிசெப்சனிற்கு போன் செய்து தன்னை காண ஒரு லேடி டாக்டர் வருவாரென்றும் அவர் வந்ததும் தன்னுடைய அறைக்கு அழைத்து வருமாறு கூறிவிட்டு விஹானாவை பார்த்தான்.
அவளது உடை இன்னும் ஈரமாக இருக்க அதனை மாற்றிவிடலாமா? என்று யோசித்தவன், வேண்டாம் அவளுக்கு தெரிந்தால் அவள் சங்கடப்படுவாள், சங்கடப்படுவதோடு, தன்னை பற்றி தவறாக நினைத்துக் கொண்டலானாள் என்ன செய்வது என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான். பின்னர், என்ன இருந்தாலும் விஹானா நான் விரும்பும் பெண் தான் திருமணம் செய்துக்கொள்ள போகும் பெண் அவளுக்கு உடைமாற்றுவது ஒன்றும் தவறில்லையே என்றும் நினைத்தது அவன் மனது.
முதலில் அவள் அணிந்திருந்த அவனுடைய கோட்டை அவன் கழற்ற எண்ணினான்.அந்த நிலையிலும் அவனின் கோட்டை அவள் கெட்டியாக பிடித்திருந்தாள்.முதலில் கோட்டை பிடித்திருந்த அவளின் விரல்களை பிரித்தெடுத்தான்.பின்னர் அவளை சரிவாக அமரவைத்து கோட்டை கழற்ற முற்படும் பொழுது அவளின் முகம் இவனின் முகத்தருகே இரண்டு இன்ச் இடை வெளியில் இருந்தது. அவளின் ஈரமான முகம், அவனின் கைகளில் அகப்பட்ட அவளின் ஈரக்கூந்தல் என எல்லாம் சேர்த்து அவனின் மனதை எங்கோ கொண்டு செல்ல முற்பட்டது.
அவளின் சூடான தேகம் அவனுள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அவள் இருக்கும் நிலையை மறந்து தன்னையும் மறந்து தனது வேட்கையை தீர்க்கும் பொருட்டு அவளின் உடைகளை கலைய முற்படும் பொழுது, யாரோ கதவை தட்டும் சப்தம் கேட்டது.
அதன் பின்னே அவன் சுயநினைவிற்கு வந்தான். பின்னர் தான், தான் செய்யவிருந்த காரியத்தை எண்ணி வெட்கினான்.
ச்சே! என்ன இது ? நானா இப்படி செய்தேன். எனக்கு என்னவாயிற்று? ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல், அதுவும் அவள் சுய நினைவோடு இல்லாத நேரமாக பார்த்து இப்படி நடந்து கொண்டேனே.
இவன் இவ்வாறு தன்னை நினைத்து மனதினில் திட்டி கொண்டிருக்க, அதே நேரம் மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
விஹானாவிற்கு பெட்ஷீட்டை கொண்டு போர்த்திவிட்டு போய் கதவை திறந்தான்.
அங்கு ஒரு வயதானவரும் கூட ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள்.அவர்களிடம் என்னவென்று விசாரிக்க, அந்த பெரியவர், ஒன்னும் இல்லை சார்!மேடம்க்கு காய்ச்சல் டாக்டர் வருவாங்கனு சொல்லிருந்திங்க அதான் சார் உடைமாத்தவும், மற்ற உதவிகாகவும் இந்த பொண்ணை கூட்டிட்டு வந்தேன் சார் என்று கூறினார்.
இதே மற்ற நேரமாயிருந்தால் நீ யார் என்று விசாரிப்பதில் துவங்கி, id ஐ செக் பண்ணி என்று வரிசையாக ஒவ்வொன்றாக விசாரித்து அவர்களே வெறுத்து ஓடும் வரை கேள்வியால் துளைத்து எடுத்திருப்பான்.
தற்போது அவன் இருந்த மனநிலையே வேறு ஆயிற்றே! அவன் இருந்த மனநிலையில் எதையுமே உணரவில்லை. அதுவும் அந்த பெண்ணின் கையில் ஒரு துணிப்பை இருந்ததையும் கூட கவனிக்கவில்லை.
எனவே அந்த பெண்ணிடம் உள்ளே போக சொல்லிவிட்டு இவன் ரிசப்செனில் டின்னெற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, டாக்டர் வந்தால் நேரே ரூமிற்கு அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு ரூமை நோக்கி புறப்பட்டான்.
அதற்குள் அந்த பெண் தான் கொண்டு வந்திருந்த நையிட்டியை விஹானாவின் உடைகளை கலைந்து அவளிற்கு மாட்டிவிட்டாள்.
அவன் ரூமிற்குள் நுழைந்ததும் அந்த பெண் எழுந்து நின்று, சார் நான் இப்போ போய்ட்டு டாக்டர் வந்ததும் வந்துவிடுகிறேன் என்று கூறினாள். அவனுக்கும் வேறு வேலை எதுவும் இருப்பதாக தோன்றததால் அவளை போக சொல்லிவிட்டான்.
டாக்டர் வரும் பொழுது வேலை இருந்தால் தான் வர சொல்லுவதாகவும் வேலை இல்லையென்றால் வர வேண்டாம் என்று கூறிவிட்டு அவன் குளிக்க பாத்ரூமிற்கு சென்றான்.
அவனின் ஆடைகளை கலைந்துவிட்டு ஷவரை ஆன் செய்யும் பொழுது யாரோ கதவை திறக்கும் சப்தம் கேட்டது. டாக்டர் வர சொல்லிருக்கிறோம் என்ற நினைவு இல்லாமல், வேறு யாரோ வந்துவிட்டதாக எண்ணி உடனே இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு வெளியில் வந்து பார்த்தான்.
அவன் சதீஷிடம் வர சொன்ன லேடி டாக்டர் தான் வந்தார்.
இவன் வந்த வேகத்தை பார்த்து அவர் முகம் மாறினாலும் அவனை பார்த்து எதுவும் கூறவில்லை. அவர் உடனே விஹானாவின் டெம்பரேச்சரை செக் செய்தார்.அவனும் உடனே போய் பாத்ரூமில் பிரெஷாப் ஆகி விட்டு உடை அணிய தேடும் போதுதான் தெரிந்தது அவனிடம் மாற்றுடை இல்லையென்பது. பிறகு பாத்ரூமில் இருந்த பாத் ரோபை மாட்டிக்கொண்டு வெளியே வந்தான்.
பின்னர் அவளுக்கு இன்ஜெக்ஷன் ஐ போட்டுவிட்டு, அவங்க ரொம்ப வீக்கா இருகாங்க. அதுவுமில்லாம எதுவுமே சாப்பிடலனு நினைக்குறேன். ரொம்ப dehydrated ah இருக்காங்க சோ, அதனால அவங்களுக்கு iv போடணும்.
உடனே ப்ரிஸ்க்ரிப்ஷனில் மருத்துகளை எழுதி அவனிடம் கொடுத்து வாங்கி வர சொன்னார். அவன் அதை ரிசப்ஷனில் கொடுத்து வாங்கி வரச்சொன்னான். அவர்கள் வாங்கி வந்து தந்ததும், அதனை கொண்டு சென்று டாக்டரிடம் கொடுத்தான்.
உடனே டாக்டர் விஹானாவின் கையில் iv இன்ஜெக்ஷன் ஐ செலுத்தி அதில் டியூபை இன்ஸெர்ட் செய்து அந்த பாட்டில்லை மாட்ட ஏதுவாக கோட் ஸ்டாண்டில் மாட்டிவிட்டார்.
அதிலேயே அவளுடைய மருந்தை இன்ஜெக்ட் செய்துவிட்டு, விவானை பார்த்து காலையில் இந்த iv பாட்டில் முடிந்துவிடும்.ஆதலால் நான் பார்த்து கொள்கிறேன் சார் நீங்கள் சென்று தூங்குவதென்றால் தூங்குங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினார்.
அவளுக்கு எப்பொழுது சரி ஆகும் என்று கேட்க, அதற்கு டாக்டர் நாளை காலை iv முடியட்டும் காய்ச்சல் குறைந்திருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. காய்ச்சல் குறையாவிட்டால் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய வேண்டும் என்று கூறினார்.
விவானோ நான் பார்த்து கொள்கிறேன் என்று கூற, அதற்கு அந்த டாக்டர் இல்லை சார், iv முடிஞ்சதும் ஸ்டாப் பண்ணனும். அப்புறம் அடிக்கடி டெம்பரேச்சர் செக் பண்ணனும். நீங்க போய் தூங்குங்க சார், நான் பார்த்துக்கிறேன்.
விஹானா அந்த சூட் ரூமின் ஹாலில் இருந்த பெட்டில் படுத்திருந்தாள். இவன் உள்ளே இருக்கும் பெட்ரூமிற்கு சென்று படுத்துக் கொண்டான்.
எவ்வளவு நேரம் புரண்டு புரண்டு படுத்தாலும் அவனுக்கு தூக்கமே வரவில்லை. எனவே சற்று நேரம் டிவி யை டிவி பார்க்கலாம் என்று டிவியை ஆன் செய்தான்.
அதிலோ இரவு நேரம் என்பதால் பெரும்பாலான சேனல்களில் ரொமான்டிக் பாடல்கள் தான் ஒளிபரப்பு ஆகிகொண்டிருந்தது.
அதில் ஒரு சேனலில் மாலை மங்கும் நேரம் பாடல் ஓடிகொண்டிருந்தது.
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உனை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டிப் பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்பமாட்டேன் நானும்
பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு கோலம் போடும்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உனை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
ஒரு வீட்டில் நாம் இருந்து, ஓர் இலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில், மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன், நீ வந்து அனைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும், சேர்ந்து ஒன்றாய் அடங்கும்
நான் கேடு ஆசை பட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீதான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்
மாலை மங்கும்...
பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பணி இரவில்,
நாம் மூச்சின் காய்ச்சலில், மீண்டு பணியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள், அசைந்தாடும் உன் உடைகள்,
தனியாக நானில்லை என்றே சொல்லி சிணுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சே
உன் வாசம் என்னில் பட்டும் ஆடிப் போனேன்
வாசல் தூண்தான் நானும் ஆனேன்
மாலை மங்கும்...
இப்பாடலை கேட்கும் போதெல்லாம் அவனுக்கு விஹானாவின் அந்த ஈரமான முகம் தான் ஞாபகம் வந்தது. பின்னர் அவளுடன் பாஸ்கட் பால் விளையாடியது, அவள் ஆபிஸிற்கு வந்து படிப்பதாக கூறிவிட்டு தூங்கியது, ரெஸ்டாரன்ட்டிற்கு சென்றது என்று அவளுடன் பழகிய நினைவுகளே அவனுக்கு ஞாபகம் வந்தது.
அங்கே ஹாலில் டாக்டர்க்கு ஒரு போன் வந்தது அதில் வந்து எண்ணைப் பார்த்துவிட்டு இவன் பார்க்கிறானா? தன்னை கவனிக்கிறானா? என்று சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தார். அவன் ரூமில் இருப்பதை அறிந்து கொண்டு வெளியில் சென்று பேசலாம் என்று போனை எடுத்துக் கொண்டு அந்த சூட் ரூமின் கதவை சாத்தி விட்டு வெளியே சென்றார்.
இங்கு தீக்ஷித்தின் அறையில் அவன் மிகவும் உக்கிரமாக இருந்தான். கோபத்தில் கை முஸ்டிகளை இறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அங்கு அங்கு தீக்ஷித்தை காண வந்த அலெக்சாண்ரோ அவன் எதிரில் இருந்த சாரில் அமர்ந்து சேரில் அமர்ந்திருந்தான்.
தீக்ஷித்தை பார்த்து எல்லாம் உன் பிளான் படிதானே நடக்கிறது என்றுக் கேட்டான்.
சற்று நேரத்திற்கு முன்பு,,,,,,
விஹானாவை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு செல்லும் பொழுது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தீக்ஷித் விஹானாவை போலீஸ் ஜீப்பில் பார்த்தான்.
சற்றும் தாமதிக்காமல் அந்த ஜீப்பை தொடர்ந்து ஃபாலோ செய்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றான் பின்னர் தனது pa வை அழைத்து அங்கு என்ன நடக்கிறது என்று விசாரிக்கச் சொன்னான். தீக்ஷித்தின் பிஏ அங்கு சென்று அனைத்தையும் விசாரித்து விட்டு வந்து தீக்ஷித்திடம் சொன்னான். அவனால் இதனை நம்ப முடியவில்லை.
ஏனெனில் இப்படி ஒரு காரியத்தை செய்கிறான் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை இதில் வேறு ஏதோ நடந்து இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
தனக்கு இருக்கும் காண்டாக்ட் ஐ பயன்படுத்தி தனக்கு தெரிந்தவர் மூலம் அங்கு இருந்த கான்ஸ்டபிளை தொடர்புகொண்டு அங்கு நடந்தவற்றை விசாரித்தான்.
இங்கு நடப்பதற்கும் இவ்வாறிருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை புரிந்துகொண்டான். இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். அவன் எதிர்பார்க்காத ஒன்று இதில் பாதிப்படைய போவது விவான் மட்டுமல்ல விஹானாவும் என்பதை மறந்து விட்டான்.
அந்த கான்ஸ்டபிள் மூலம் அங்கு போலீஸ் ஸ்டேஷனில் விஹானாவை வீடியோகால் மூலம் கவனித்துக் கொண்டே இருந்தான்.
அங்கு அங்கு அவள் ஈர உடையுடன் அமர்ந்திருப்பதையும் அவளை மற்றவர்கள் பார்ப்பதையும் கண்டு மிகவும் கோபப்பட்டான். பின்னர் தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் இன்னும் சிறிது நேரம் மட்டுமே இப்படி அவசரப்பட்டால், அன்று அவள் விலகி சென்றது போல இன்றும் நடந்துவிடும் என்று யோசித்து விவான் வரும் வரை பொறுமையாக இருந்தான்.
விவான் வந்து அவளைக் கூட்டிச் சென்று விடுவான் என்று நினைத்து அதற்கு எதிர்மாறாக அங்கு நடந்தது. அவன் அங்கு கோட்டை அவளுக்குப் போர்த்தி விட்டதும் அவள் அழுதது எல்லாம் சேர்த்து இவனுக்கு மிகவும் கோபமாக இருந்தது. அவள் விவான் மீது உள்ள கோபத்தினால் அழுகிறாள் என்பதை உணராமல் அவள் மேல் விவான் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக அழுகிறாள் என்று தவறாக நினைத்தான். எங்கே அவர்கள் தன்னை மீறி ஒன்று சேர்ந்து விடுவார்களோ என்ற பயந்தான். அதற்கேற்றார் போல் அவனும் ஹோட்டலில் அறை எடுத்தான் எல்லாம் தெரிந்த இவன் மிகவும் கலக்கம் உற்றான்.
பின்னர் அவனை அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவரை அழைத்து பணம் கொடுத்து தான் கூறுபவயை செய்யவேண்டும் என்று அவரை பணித்தான். இடையில் விவான் சதீஷிடம் ஒரு லேடி டாக்டரை அனுப்பச் சொன்னான் அல்லவா! அந்த நேரத்தில் அதற்கேற்றார் போல் சதீஷ் மொத்த டாக்டர்களை காண்டாக்ட் செய்ய முடியாதவாறு அந்த டாக்டர்களை எந்த கால் வந்தாலும் போக முடியாதவாறு தனது ஆட்கள் மூலம் லாக் செய்தான் அந்த ஏரியாவில் உள்ள ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து அவரை சதீஷ் காலிற்கு ஏற்றவாறு அந்த ஹோட்டல்க்கு அனுப்பினான்.
அந்த டாக்டரிடம் விஹானா மறுநாள் காலைக்குள் முழித்து விடவேண்டும், அவளுக்கு உடம்பும் சரியாகி விட வேண்டும் அதுவரை இவரே கூட இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டான். எக்காரணத்தைக் கொண்டும் அவள் பக்கத்தில் நெருங்க விடக்கூடாது என்றும் அவரிடம் தெளிவாக கூறினான்.
அவன் போட்ட திட்டத்தின்படி அனைத்தும் தெளிவாக நடந்தது விவானும் அவன் இருந்த நிலையில் இதையெல்லாம் கவனிப்பதாக இல்லை. அதுவே இவனுக்கு சாதகமாகவும் அமைந்தது. இவனுக்கு பாதகமாக அமைந்த ஒரே விஷயம் விவான் விஹானாவுடன் இன்னும் நெருங்கியது.
தற்போது,,,,,,
எல்லாம் என் ப்ளான் படி தான் நடந்தது ஆனால் இன்னமும் ஆனால் அவனிடம் நான் விட்டு வைக்க போவதில்லை சீக்கிரமே அவளை என்னிடம் வர வைக்க போகிறேன் என்று கூறினான். அதற்குண்டான ஏற்பாடுகளை நாளையே செய்யப்போகிறேன் இதற்கு நீதான் மிகவும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று alessandro விடம் கூறினான்.
ப்ரோ! இதை நீ கேட்காவிட்டாலும் நான் இதனை செய்வேன்.
விஹானாவை தன்னைத் தேடி வர வைக்க தீக்ஷித் என்ன செய்யப்போகிறான்???????
Comments
Post a Comment