மாடிப்படி மேலே இருந்து கீழே நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த விஹானாவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது. தீக்ஷித் கெட்டவன் என்று மட்டும் புரிந்தது.
விஹானா கீழே இறங்கி வருவதை பார்த்த தீக்ஷித் தான் பேச வந்ததை பாதியிலேயே விட்டுவிட்டு அவளை காண ஓடினான்.
மற்றவர்கள் அனைவரும் அவளை சூழ்ந்துகொண்டனர். அனைவரையும் அருகில் பார்த்த அவள் சற்று மிரண்டுபோய்விட்டாள்.
அவளிடம் அனைவரும் ஒன்றாக பேச, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளுக்கு புரிந்ததெல்லாம் இங்கிருந்து உடனே கிளம்பிவிடவேண்டுமென்பதே !!!
உடனே பயத்தில் அவள் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று அழுதாள். எல்லாரும், அவர்கள் பேசுவதை ஒரு நிமிடம் கேள்!!! என்று கெஞ்சினர்.
அவள் தொடர்ந்து தேம்பி தேம்பி அழுது பிடிவாதம் பிடிக்க வேறு வழியில்லாமல் நாளை அவள் பெற்றோரை வைத்து பேசிக்கொள்ளலாம் என்று தீக்ஷித்தை அவள் வீட்டில் கொண்டு சென்று விட்டுவிட்டு வர கூறினார்கள்.
உடனே அதை மறுத்த விஹானா தானே போய்க்கொள்வதாக கூறினாள். அனைவரும் எவ்வளவோ எடுத்து கூறியும் விஹானா பிடிவாதமாக இருந்தாள்.
அப்பொழுது அங்கு தீக்ஷித்தின் பிறந்தநாளிற்கு வந்த அஞ்சலியை பார்த்த விஹானா,
அஞ்சலி! என்னை உன் காரில் ஏற்றிக்கொண்டு போய் என் வீட்டில் விட்டுவிடுகிறாயா? என்று அழுதுக்கொண்டே கேட்டாள்.
அஞ்சலிக்கு இங்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. உடனே இச்சூழ்நிலையை பயன்படுத்தி தீக்ஷித்தை தன் வசம் இழுக்க எண்ணினாள்.
அவள் தீக்ஷித்திடம் நல்லவள் போல் வேடமிட்டு, தான் திருந்திவிட்டதாகவும் தான் அவளுக்கு புரியவைப்பதாகவும் தனியே அழைத்து கூறிவிட்டு தன் பரிசையும் அளித்துவிட்டு விஹானாவை அவள் வீட்டில் விட்டுவிட அழைத்துச்சென்றாள்.
இருவரும் அஞ்சலியின் காரில் கிளம்பினர். தீக்ஷித்தின் வீட்டிலோ எல்லாரும் அதிர்ச்சி, சோகம், மகிழ்ச்சி என்று அனைத்து உணர்வுகளும் ஆட்கொள்ளப்பட்டு இருந்தனர்.
அனைவரும் விஹானாவை எப்பொழுது நம் வீட்டிற்கு அழைத்து வர போகிறாய் என்று தீக்ஷித்தை பார்த்து கேள்வி கேட்க , நாளை நான் நேரில் சென்று அவளின் பெற்றோரை பார்த்து பேசி அவளுக்கு புரியவைத்து அழைத்து வருகிறேன் என்று கூறினான்.
இங்கோ அஞ்சலியும் விஹானாவிடம் என்ன பிரச்சனை என்று விசாரித்தாள். அவளிடம் அங்கு நடந்தவற்றுள் தான் பார்த்ததை மட்டும் கூறினாள்.
இதனைக் கேட்ட அஞ்சலியோ விஹானா தவறாக தான் புரிந்துகொண்டாள் என்பது அவளுக்கு தெள்ள தெளிவாக தெரிந்தது.
விஹானாவிடம், நீ தீக்ஷித்தை விட்டு விலகியே இரு!!! அதுவே உனக்கு நல்லது அவர்களை பார்த்தால் எனக்கொன்றும் சரியாக படவில்லை. அவர்கள் உனக்கு தெரிந்தவர்கள் என்றுதான் நானும் பழகினேன். இனிமேல் அவர்களிடம் ஜாக்கிரதையாக இரு !!!! என்று கூற அவளும் அவ்வாறே இருக்க முடிவு செய்தாள்.
அவர்கள் காரில் போய்க்கொண்டே இருக்கும் பொழுது திடீரென கார் ரிப்பேர் ஆகி பாதி வழியிலேயே நின்றது. அஞ்சலியின் டிரைவர் இறங்கி சென்று பார்த்து விட்டு வண்டியை மெக்கானிக் ஷெட்டிற்க்கு தான் விட வேண்டும் இதற்குமேல் வண்டி நகராது என்று கூறினார்.
அவ்வழியோ கொஞ்சம் காட்டுப்பாதை எந்த வண்டியும் அவ்வழியில் அவ்வளவாக வரவில்லை. சிறிது நேரத்தில் ஒரு கார் வந்தது. அஞ்சலியின் டிரைவர் அந்த வண்டியை நிறுத்தி நிலைமையை கூறி லிப்ட் கேட்டார்.
அவரும் லிப்ட் கொடுக்க டிரைவர், அஞ்சலி மற்றும் விஹானாவும் அந்த காரில் ஏறினர். வருத்தத்தில் விஹானாவும், மகிழ்ச்சியில் அஞ்சலியும் இருந்ததால் வண்டியை யார் ஓட்டி வந்ததென்பதை இருவருமே கவனிக்கவில்லை.
கவனித்து இருந்தால் பின்னால் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகளை தடுத்திருக்கலாம்.
வீட்டிற்கு வந்த விஹானாவோ தன் பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுகொண்டே இருந்தாள். அவர்களும் என்ன கூறுவதென்றே தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தனர்.
அஞ்சலியோ அவள் வீட்டிற்கு வந்ததும் வானில் பறந்தாள். பாட்டைப்போட்டு நன்றாக குத்தாட்டம் போட்டாள்.
அஞ்சலியையும் விஹானாவையும் வீட்டில் விட்டுவிட்டு வந்த புதியவன் தன்னுடைய ஆசை நிறைவேறாது என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போலானது.
இங்கே ஊர்மிளாவின் பெற்றோர் அடுத்து என்ன சதித்திட்டம் தீட்டலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தனர்.
மறுநாள் விடிந்தவுடன் தீக்ஷித் தன் பெற்றோரிடம் கூறியது போலவே இன்று அப்பூவை தன் வீட்டிற்கு அழைத்துசென்றிட வேண்டும் என்ற எண்ணத்துடன் விஹானாவின் வீட்டிற்கு வந்தான்.
இங்கோ இரவு முழுவதும் அழுததில் அவளுக்கு ஜலதோஷம் பிடித்து காய்ச்சல் வந்துவிட்டது.
காலையில் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என்று இருந்த நேரத்தில் தான் தீட்சித்தும் வந்தான். பின்னர் அவன் விஹானாவின் பெற்றோருடன் பேசி தன் காரிலேயே அவளை வீட்டிற்கு அழைத்து சென்றான்.
விஹானாவும் மயக்கத்தில் இருந்ததில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் மருத்துவமனைக்கு சென்றனர்.
Comments
Post a Comment