13. என் சுவாசத்தின் மறுஜென்மம்

மருத்துவமனையில் கண்விழித்த விஹானாவோ தன் அருகில் தீக்ஷித்தை பார்த்து கத்த துவங்கினாள்.

அவளது பெற்றோர் எவ்வளவோ முயற்சி செய்தனர் அவளை சமாதான படுத்த, ஆனால் அவளோ முரண்டு பிடித்தாள். இப்பொழுது அவள் உடல்நிலை சரியில்லாததால் அவள் பெற்றோர் அவளிடம் பின்னர் உண்மையை கூறிக்கொள்ளலாம் என்று உண்மையை மறைத்தனர்.

ஆனால் தீக்ஷிதோ விஹானாவை பார்த்து , நான் ஒரு ஐந்து நிமிடம் உன்னிடம் பேசவேண்டும் சற்று அமைதியாய் இரு!!! என்று கூறினான்.

ஆனால் அவள் அதனைக் பெட்டிலிருந்து எழமுயன்றாள். அவள் எழமுடியாதவாறு தீக்ஷித், அவளை அழுத்தி பிடிக்க முயன்றான்.

உடனே அவன் கைப்பிடியிலிருந்து வெளியேற, விஹானா திமிர தொடங்கினாள்.

அவன் எவ்வளவோ முயன்றும் அவனால் அவளை அடக்கிப்பிடிக்க முடியவில்லை. அவளை அமைதி படுத்த சுற்றும்முற்றும் பார்த்தவன் அவள் அருகில் இருந்த டேபிளில் பழம் நறுக்கும் கத்தியைக் கண்டான்.

உடனே கத்தியை கையிலெடுத்தவன், அந்த அறையின் கதவருகே நின்றிருந்த விஹானாவின் தந்தையின் அருகில் சென்று அவருடைய கழுத்தில் கத்தியை வைத்தான்.

விஹானா, இப்பொழுது மட்டும் நீ அமைதியாக நான் சொல்வதை கேட்காவிட்டால் உன் தந்தையின் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டினான்.

அதனை பார்த்த விஹானாவின் தாய், தம்பி எதுவானாலும் பொறுமையாக பேசிக்கொள்ளலாம். தவறுதலாக ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? தயவு செய்து அவர் கழுத்திலிருந்து கத்தியை எடு! என்று கூறினார்.

தீக்ஷிதோ, இப்பொழுது நான் சொல்வதை அவள் பொறுமையாக கேட்கவேண்டும் இல்லையேல் உண்மையிலேயே இவரின் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று பொய்யாக கூறினான்.

விஹானாவோ உன்னிடம் பேசுவதற்கு எதுவுமில்லை, நீ இங்கிருந்து கிளம்பிவிடு, உன் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை என்று கூறினாள்.

தீக்ஷிதோ அறுத்துவிடுவேன் என்று மிரட்ட, விஹானாவும் அவன் அந்த அளவிற்கு போகமாட்டான் சும்மா தன்னை மிரட்டுவதற்காக கத்தியை வைத்திருக்கிறான். தன் தந்தைக்கு ஒன்றும் ஆகாது என்று அவன் கூற வருவதை கேட்கமறுத்தாள்.

அவன் இடது கையால் அவரை பிடித்துக்கொண்டு வலது கையில் கத்தியை விஹானாவின் தந்தையின் கழுத்தில் வைத்து மிரட்டிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது வெளியே வராண்டாவில் வந்துகொண்டிருந்த ஒருவர் மீது ஸ்ட்ரெச்சர் மோத அவர் நிலை தடுமாறி விஹானா அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் கதவில் விழ கதவு பட்டென்று திறக்க, திறந்த கதவோ தீக்ஷித்தின் இடது தோள்பட்டையில் இடிக்க முன்னே விழப்போனான்.

அவன் முன்னே விழப்போக, விஹானாவின் தந்தையும் நிலைதடுமாறி முன்னேவிழ கத்தியை கெட்டியாக தீக்ஷித் பிடித்திருக்க, அந்த கத்தி முன்னேவிழப்போன விஹானாவின் தந்தையின் கழுத்தை பதம்பார்த்தது.

அந்த கத்தி விஹானாவிற்கு பழம் நறுக்கி கொடுக்க அன்று காலையில் தான் வாங்கி வந்திருந்தனர். புது கத்தி ஆதலால் நன்கு ஆழமாக வெட்டியிருந்தது.

அதனை பார்த்த விஹானாவும் அவளின் தாயும் அதிர்ச்சியில் உறைந்தனர். தீக்ஷித்திற்கு என்ன நடந்தது என்று புரியவே சிலபல வினாடிகள் தேவைப்பட்டது.

அவன் தன்னுணர்விற்கு வந்து அவரை தூக்கி சென்று டாக்டரிடம் காட்ட கிளம்பினான்.

அவரின் கழுத்தில் நல்ல ஆழமாக கத்தி இறங்கியதால் அவர் ரத்தம் நிறைய வெளியேறி சிலமணித்துளிகளில் அங்கேயே இறந்தார்.

அவர் இறந்ததும் மருத்துவமனை நிர்வாகம் முறைப்படி போலீஸ்க்கு தகவல் கொடுத்தது.மருத்துவமனைக்கு வந்த போலீஸ் தீக்ஷித்தை கைது செய்தது. பின்னர் விஹானாவின் தந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு விஹானாவின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

(எனக்கு அந்த சோக காட்சிகளை எழுத மனம் வரவில்லை ஆதலால் அந்த பகுதியை தவிர்க்கிறேன் )

இங்கு தீக்ஷித்தை ஜாமினில் எடுக்க முயற்சிக்க அதற்குள் இரவாகிவிட்டது. மறுநாளோ தீபாவளி விடுமுறை. அதற்கடுத்து நீதிபதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்குள்ளாக மருத்துவமனையின் வரான்டாவின் சிசி டிவியில் அறையின் உள்ளே நடந்தது அதாவது கதவு திறந்தற்கு பிறகு நடந்தவை பதிவாகியுள்ளதை (பின்னால் இருந்து பார்த்து போல் இருக்கும்அதாவது தீக்ஷித் கத்தியை வைத்தது ரெகார்ட் ஆகியிருக்காது மற்றும் பின்னால் இருந்து பார்த்தால் தீக்ஷித் விஹானாவின் தந்தையின் இடுப்பில் கையணைத்தைவாறு தெரியும் கதவு திறந்ததால் நிலை தடுமாறி தீக்ஷித்தின் கையில் இருந்த கத்தியின் மேல் அவர் விழுந்தது போல் இருக்கும் உண்மையும் அதுவே ) காண்பித்து தீக்ஷித்தை விடுதலையாகி வெளி வர செய்தனர்.

இங்கோ அஞ்சலியின் தந்தையின் உதவியால் விஹானாவின் தந்தையின் உடலை அடக்கம் செய்தனர்.

அதேநேரம் அவர்கள் இவ்வூரை விட்டு கிளம்பமுடிவு செய்தனர். எங்கு ச
செல்வதென்றே தெரியாமல் இருக்கும்பொழுது விஹானாவின் தந்தையின் நண்பரின் உதவியை நாடினர். அவரும் தனக்கு தெரிந்த ஒரு இடம் இருக்கிறது அது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றுகூறி அவர் விவரத்தை கூறினார்.

உடனே அவர்களும் சற்றும் தாமதிக்காமல் அங்கு செல்ல தயாரானார்கள். அவர்களை காண வந்த அஞ்சலி எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவளிடம் உண்மையை கூறினால் அவள் தீக்ஷித்திடம் பயத்தில் உளறிவிடுவாள் என்றுக் கருதி அவளிடம் விவரத்தை மட்டும் சரியாக கூறிவிட்டு இடத்தை மாற்றிக்கூறினாள் விஹானா.

அஞ்சலியும் அவள் தீக்ஷித்தை நெருங்க இருந்த தடையும் தகர்ந்ததை எண்ணி மகிழ்ச்சியில் தோண்டி துருகாமல் விட்டுவிட்டாள்.

அவர்களும் விஹானாவின் தந்தையின் நண்பரோடு அந்த கிராமத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு என்ன வேலையெண்ணில் அங்கு மிக பெரிய பண்ணை இருக்கிறது அதனை நிர்வகிக்கும் அம்மாளுக்கு உடம்புக்கு முடியவில்லை. ஆதலால் அப்பண்ணையையும் அந்த அம்மாளையும் தற்காலிகமாக கவனிக்க ஒரு ஆள் வேண்டும் அதற்காக தான் அவர்கள் அந்த கிராமத்திற்கு சென்றனர். ஏனெனில் இவர்களுக்கு ஊரில் ஏற்கெனவே பண்ணையம் பார்த்த அனுபவம் இருந்ததால் இவர்களும் அவர் கூறியவுடன் ஒத்துக்கொண்டனர்.



அவர்களை கவர்ந்த அந்த வீடு



அங்கு இருந்த பசுமையான வயல்வெளி கால்நடைகள் வயலின் நடுவே அமைந்துள்ள வீடு என்று அனைத்தும் அவர்களுக்கு பிடித்துப்போய்விட்டது. ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை தாமாக இங்கு வரவில்லை தம்மை வரவழைத்து இருக்கிறார்கள் என்று !!!

இங்கு தீக்ஷித் விடுதலையானவுடன் விஹானாவை பற்றி கேட்டான். அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று அவனின் பெற்றோர் முழித்துக்கொண்டிருந்தனர். ஏனெனில் அவன் கைதானபோது விஹானாவை அழைத்து வந்து அவர்கள் வீட்டில் வைத்து கண்காணித்துக்கொண்டே இருக்க சொன்னான். இவர்களோ அவள் தந்தை இறந்த துக்கத்தில் இருப்பாள் இப்பொழுது அவளிடம் எதையும் கூறி கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்திருந்தனர். ஆனால் அவளோ ஊரை விட்டே சென்றுவிட்டாள் என்ற செய்தி இவ்ரகளுக்கு மிகவும் தாமதமாக தான் கிடைத்தது.

எவ்வளவோ முயன்றும் அவளின் இருப்பிடத்தை பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இதனை தீக்ஷித்திடம் சொன்ன பொழுது அவன் வீட்டில் உள்ள அனைத்தையும் அடித்துநொறுக்கி கத்தி கதறினான். 

Comments