14. என் சுவாசத்தின் மறுஜென்மம்

விஹானா காலையில் எழுந்து வந்து பார்த்தால் வீடே பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது.
    
                  காரணம் அந்த பசுமை நகரத்தின் தலைவனின் வருகை !!!அதாவது அவர்களின் முதலாளி.

                  விஹானாவும் அந்த பரபரப்பில் தன்னை நுழைத்துக்கொண்டாள். அவளும் அவளுக்கு தெரிந்த வேலைகளை செய்தாள். நேரம் ஆகஆக அனைவரிடமும் பதற்றம் தொற்றிக்கொண்டது.விஹானாவும் அங்கு சமையலறையில் வேலை செய்யும் அக்காவிடம் அந்த பதற்றத்திற்கான காரணங்களை கேட்டாள்.

                அதற்கு அவளோ, முதலாளிக்கு வேலை செய்தால் திருத்தமாக இருக்கவேண்டும் என்று நினைப்பார், அப்படி இல்லையெனில் கூப்பிட்டு கண்டிப்பார் சிறு சிறு தவறுகள் கூட அவரது கண்களுக்கு புலப்பட்டுவிடும்.

                  அதனால் தான் இந்த பரபரப்பு என்று கூறினாள். நேரம் கடக்க கடக்க, அவளிடமும் இந்த பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆகையால் தன் அம்மாவிடம் சென்று, அம்மா! எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது, நான் நம் அறைக்கு சென்றுவிடவா? என்று கேட்டாள்.

              சரி நீ போய் ஓய்வெடு ! என்று கூறவும் உடனே சென்று விட்டாள்.
    
               பின்னர் வேகவேகமாக வந்த அவனோ அனைவரையும் பார்த்து ஒரு கண்ணசைத்துவிட்டு அவளை தேடினான். அவளை காணவில்லை என்றாலும் பெரிதாக கவலைக்கொள்ளாமல் இங்கே தானே இருப்பாள் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டே  பாட்டியிடம் தான் சென்று ஓய்வெடுக்கப்போவதாக கூறிவிட்டு சென்றுவிட்டான்.
  
               அன்றிரவே  தீக்ஷித்தின் வீட்டார், இவர்கள் ஊரில்  ஷீவ் நாடாரின் புதிய கல்லூரியின் திறப்பு விழாவிற்கு வருவதாக தகவல் கிடைக்கவும் இனி விஹானாவை எப்படி தீக்ஷித்திடம் இருந்து மறைப்பது என்று யோசிக்க துவங்கினான். 

             சற்று நேரம் யோசித்தவனுக்கு ஒரு யோசனை பிறந்தது. அதை எப்படியாவது செயல்படுத்தவேண்டும் என உறுதிபூண்டான்.

              சற்றும் தாமதிக்காமல் உடனே விஹானாவின் அம்மாவையும் அந்த வீட்டின் பராமரிக்கும் பாட்டியையும் சென்று பார்த்தான். அவர்களிடம் விஹானா அவளின் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் அப்பொழுதுதான் அவள் அவளின் சொந்தக்காலில் நிற்கமுடியும் என்று கூற, அதற்கு விஹானாவின் தாயும் சற்று யோசிக்க,  எங்கே?  தான் தாமதித்தால் அவர் மனம் மாறி விடுவாரோ என்று ஏதேதோ கூறி அவரை சம்மதிக்க வைத்தான்.

                 அன்றே அவனும் விஹானாவின் தாயும் சேர்ந்து அந்த கல்லூரிக்கு சென்றனர். அந்த கல்லூரியில் அவனுக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தாமலே  விஹானாவிற்கு அட்மிஷன் கிடைத்தது. ஆனால் விடுதிக்கு தான் அனுமதி கிடைக்கவில்லை. அந்த கல்லூரி பெயர்பெற்றதே அந்த விடுதியின் கட்டுப்பாட்டினால்தான். அந்த விடுதியில் இடம் கிடைப்பது ஒன்றும் எளிதல்ல.
   
         அங்குதான் விவான் சோப்ரா வின் அதிகாரம் தேவைப்பட்டது. ஆம் அவனின் பெயர் விவான் சோப்ரா.
அந்த கல்லூரியில் சேரும்  முதலாண்டு மாணவியருக்கு ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டிலும் இருக்கும் முதல் 6 பேருக்கு மட்டும்தான் அந்த விடுதியில் இடம் கிடைக்கும். அவர்கள் யாராவது விடுதியை விட்டு வெளியேறினாலோ இல்லை வெளியேற்றப்பட்டாலோ தான் அடுத்தவருக்கு இடம் கிடைக்கும்.

              அந்த விடுதி பிரபலமாக இருப்பதற்கு காரணம் அங்கு இருக்கும் ஒழுக்கமும்  கட்டுப்பாடுகளும் தான் காரணம்.

               அங்கு அவன் விஹானாவை சேர்ப்பதற்கு முக்கிய காரணம்,  விஹானா அந்த விடுதியை விட்டு வெளியே வரவேண்டுமென்றால்  இவனின் அனுமதியும் விஹானாவின் தாயின் அனுமதியும் வேண்டும். இவர்களை தவிர வெளியாட்கள் யாரும் அவளை அங்கே சந்திக்கமுடியாது.

           இன்னொன்று அவள் படிக்கும் பல்கலைக்கழகம் பெண்களுக்கானது. அதில் ஆண்கள் படிக்க அனுமதி இல்லை.

    
          அங்கு காலையிலே எழவேண்டும். குளித்துவிட்டு 5 மணிக்கு பஜனைக்கு செல்லவேண்டும். பஜனையில் கலந்துகொள்ள தவறினால் தண்டனை வித்யாசமாக இருக்கும். Ncc மாணவியாக இருந்தால் அவர்களின் சீனியர் ncc classil mischievous activity ku ஏற்ற தண்டனை கொடுப்பார். மற்ற மாணவியாக இருந்தால் பஜனை கூடத்தை சுத்தம் செய்வது, விடுதி சமையலுக்கு உதவுவது, சாமி படங்களுக்கு பூ மாலை கட்டி இடுவது போன்று நிறைய தண்டனைகள் இருக்கும்.

               இது போன்று எல்லாவற்றிலும் வித்தியாசமானது அந்த பல்கலைகழகம்.

        அவளுக்கு இது போன்று வேலை இருந்தால் விஹானா வின் மனது அவளின் தந்தையை நினைத்து ஏங்காது என்று கூறினான். அவளின்  தாயாரும் அதுவே சரியென்று மனதை தேற்றிக்கொண்டார் .

          இங்கோ தீக்ஷித்திற்கு ஏன் இந்த விழாவிற்கு வந்தோம் என்று அவன்மேலே அவனுக்கு கோபமாய் வந்தது.

            ஏனென்றால் அங்கு வந்திருந்த தொழிலதிபர்களின் ஒருவராக பிரதாப்பும் அவருடைய மகள் ஊர்மிளாவும் வந்திருந்தனர். அவளோ இவனிடம் விஹானா சேரவே மாட்டாள் என்ற சந்தோஷத்தில்  இவனிடம் அட்டை போல் ஒட்டிக்கொண்டாள்.

             அங்கு சென்ற விவானுக்கோ தீக்ஷித்தின் நிலையை பார்த்து மிகவும்  மகிழ்ச்சியடைந்தான். ஏனெனில் பார்க்க எப்பொழுதும் கம்பீரமாய் இருப்பவன் தன் வாழ்க்கையே பறிபோனதுபோல் இருந்தான். தாடி வளர்த்து, செக்கச்சிவந்த கண்களுடன் பார்க்கவே பாவமாக இருந்தான்.

               பின்னர் அங்கே நிகழ்ச்சி முடிந்து விருந்து ஆரம்பம் ஆனது. அங்கே வந்திருந்த தொழிலதிபரின் மகளான விசாலினியும் வந்திருந்தாள் அவளின் கண்கள் விவானையே சுற்றிவந்தது. அதனை கவனித்த அவளின் தந்தை விவானை மகளுக்கு அறிமுகப்படுத்துவோமென்று அவளை அவனுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

                அங்கு விவானோ தீக்ஷித்தின் நிலையை பார்த்த சந்தோஷத்தில் அவளை கவனிக்கவேயில்லை. பார்ட்டி முடிந்ததும் அனைவரும் கிளம்பிவிட்டனர். விவானுக்கோ சந்தோசம் தாளவில்லை, மனதிற்குள் இன்னும் நீ நிறைய வேதனைகளை அனுபவிக்க போகிறாய் தீக்ஷித் என்று நினைத்துக்கொண்டான்.

                 இங்கு விடுதியில் முதலாமாண்டு மாணவியரின் விடுதியில் விஹானாவின் அறையில் textiles and apparel designing course மாணவியும் இருந்தாள். அவளை மிரட்டி 3ம் ஆண்டு மாணவிகள் அவர்களின் ரெகார்டுகளை எழுதுவாங்க வந்திருந்தனர். அந்த நேரம் ரௌண்ட்ஸ் வந்த வாடனோ, நீ இங்கே என்ன செய்கிறாய்  விசாலினி?  என்று கேட்டார்.

               விசாலினிதான் கல்லூரிவிடுதியின் மாணவியரின் தலைவி. அந்த நேரம் விஹானா வார்டேனிடம் அனைத்தையும் கூறிவிட, வார்டனும் வானதியை பார்த்து நீ இப்படி செய்யலாமா? தலைவி நீதானே மற்றவர்களுக்கு நீ அல்லவா!! உதாரணமாக இருக்க வேண்டும் என்று நன்றாக வசைபாடிவிட்டு, நீங்கள் மூவரும் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் பஜனைக்கு ஏற்பாடு செய்யவேண்டும்  என்று தண்டனை வழங்கிவிட்டு சென்றுவிட்டார்.

                   பஜனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் சும்மா இல்லை, பஜனை மடத்தை (அங்கு shrine hall என்று கூறுவார்கள்) கூட்டி பெருக்கி நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பூகோலமிட்டு அறையெங்கும் பூவலங்காரம் செய்து வாயிலில் பூமாலையை கட்டி தொங்கவிட்டு பிரசாதமும் செய்யவேண்டும்.

              விசாலினி உன்னை நான் பின்னர் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு வார்டன் கூறிய வேலையை செய்ய கிளம்பிவிட்டாள் அவளின் சகாக்களோடு.

                அவளுக்கு இரு உயிர் தோழிகள். இவளுக்கும் இவளின் மாமா மகளான இந்துவிற்கும் படிப்பில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. ஏதோ டிகிரி வாங்கட்டுமே என்று அவர்களின் தொழிற் சம்பந்தப்பட்ட படிப்பை பாடிவைத்தனர். இந்து அதே பல்கலைக்கழகத்தில் interior designing படிக்கிறாள். இருவரும் ஒரே வயது என்பதால் தோழிகளை போல பழகிக்கொள்வார்கள். இவர்களின் இன்னொரு தோழி அங்கே psychology படிக்கிறாள்.

            விஷாலினியின் தந்தை அங்கே படித்தால் வெளியில் நல்ல பேரு இருக்கும் என்றுதான் அவளை அங்கு சேர்த்தார். ஏனெனில் அந்த பல்கலைக்கழகம் ஒழுக்கத்திற்கு பேர் போனது. அதனாலே அதனை வெளியில் பெரிதாக கூறிக்கொள்வார்.

              விவானின் காதலியாகி தன்னுடைய பாதையில் விஹானா குறுக்கே வருவாள் என்று கனவிலும் நினைத்திராத விசாலினி உண்மை உரைத்ததும் என்ன செய்வாள்?  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Comments