அன்றிலிருந்து கல்லூரியில் மூன்று நாட்களுக்கு விடுமுறை. விஹானாவை வீட்டிற்கு கூட்டிவர வேண்டும். ஆதலால் வீட்டில் விஹானாவின் அம்மா விவானின் காரியதரிசியிடம் விவரம் கூறி நாளைக்கு தான் செல்ல அனுமதி கோரினார்.
உடனே அவரும் விவானிடம் கூறிவிடுகிறேன் நீங்கள் சென்று அழைத்து வாருங்கள் என்று கூறினார்.
அவர் சரி நாளை காலை நான் கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அவர் சென்றதும் விவானின் காரியதரிசி விவானிடம் விபரத்தை உரைத்தார்.
அதனை கேட்ட விவானுக்கு ஏதும் சரியாக படவில்லை. கல்லூரிக்கு உள்ளே இருக்கும்வரை ஏதும் பிரச்சனை இல்லை. வரும் வழியில் அவர்கள் தீக்ஷித்தையோ இல்லை அவன் சம்பத்தப்பட்ட யாரையாவது சந்தித்தால் பிரச்சனையாகி விடுமே? என்று யோசித்தான்.
பின்னர் தான் ஊருக்கு நாளை வர இருப்பதாகவும் வரும் வழியில் தான் விஹானாவை அழைத்து வருவதாகவும் கூறிவிட்டு காலை கட் செய்தான்.
விஹானாவின் அம்மாவிடம் இதை பற்றி அவனின் காரியதரிசி கூறியதும் அவருக்கும் இது சரி என்றே தோன்றியது. அதனால் அவரும் சரி என்று விட்டு அவரின் வேலையை பார்க்க சென்று விட்டார்.
மறுநாள் விஹானாவும் மிகவும் மகிழ்ச்சியாக கிளம்பினாள்.
இதற்கிடையே இவளது சூப்பர் சீனியரான விசாவிற்கு கொடுத்த டிபார்ட்மென்ட் வேலைகளை தனது ஜூனியரான விஹானாவின் தலையில் கட்டிவிட்டாள். பொதுவாக டிபார்ட்மென்ட்டில் இருக்கும் வேலைகளை விடுதியில் இருக்கும் மாணவியரிடமே ஒப்படைப்பர்.
இன்று தான் வீட்டிற்கு சீக்கிரமே செல்லவேண்டும் என்று ஒரு காரணத்தை கூறி hod யிடம் அனுமதி கேட்டாள். அதற்கு, அவர் விடுதியில் வேறு யாரிடமாவது இவ்வேலையை ஒப்படைத்துவிட்டு நீ செல்! என்றார்.
அந்த நேரம் விஹானாவும் தன்னுடைய tutor அழைத்தார் என்று வந்தாள். அவளுடைய அட்மிஷன் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு form இல் அவளுடைய பெற்றோரோ அல்லது கார்டியனுடைய sign வாங்கப்படாமல் இருந்தது. அதனை விஹானா வீட்டிற்கு அழைத்து செல்ல வீட்டிலிருந்து பெற்றோரோ கார்டியானோ வரும் பொழுது கையெழுத்து வாங்கி தந்து விட்டு செல்ல கூறினார்.
அதே நேரம் அவளை அங்கு பார்த்த விசா வோ அவளுடைய வேலையை விஹானாவின் தலையில் கட்டிவிட்டு hod மேம் தன் உன்னை செய்ய சொன்னார்கள். நானே உன்னை தேடி வரவேண்டும் என்று இருந்தேன் நல்லவேளையாக நீயே வந்தாய், என்று அவளிடம் தன்னுடைய வேலையை ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.
இங்கோ விஹானாவை அழைத்து செல்ல வந்த விஹான் நேரே வார்டேனிடம் சென்று, விஹானாவை கூட்டிச்செல்ல வந்திருப்பதாய் கூறினான். வார்டேனிற்கு இவன் யார் என்பது தெரியுமாதலால் அவனை அமரவைத்து உபசரித்து பேசிக்கொண்டிருந்தார். அங்கு வார்டனுக்கு அவ்ட்கோயிங் pass ஐ வாங்க உதவிக்கொண்டிருந்த விசா வின் நண்பி அவனை 'ஆ'வென்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
விடுதியின் விதிமுறைப்படி ஹாஸ்டல் ஸ்டுடென்ட்ஸ் chairperson உம் assitant chairpersons உம் விடுமுறை நாட்களில் மாறி மாறி விடுதியில் தங்கி வார்டன் க்கு விடுதியின் வேலைகளை செய்ய வேண்டும். இம்முறை விசா வீட்டிற்கு சென்றதால் அவளது தோழியும் co-chairperson என்ற முறையிலும் அவந்திகா விடுதி வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.
விவானுக்கு நேரம் ஆவதை தொடர்ந்து விஹானா வராததால் அவந்திகாவை விட்டு விஹானாவை அழைத்து வர சொன்னார் வார்டன்.
'ஆ'வென்று பார்த்து கொண்டிருந்த அவந்திகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. சே, இந்த வார்டன் உருப்படியா சைட் அடிக்க கூட விடமாட்டேங்குது ! என்று புலம்பியபடியே விஹானாவின் ரூமிற்கு சென்று பார்த்தாள். அங்கு அவள் இல்லையென்றதும் அவளின் டிபார்ட்மென்ட்டிற்க்கு சென்றாள். அங்கு அவள் செல்லவும் விஹானா வேலையை முடிப்பதற்கும் சரியாய் இருந்தது.
அங்கு அவளிடம் விவரத்தை கூறி அவளை அவந்திகா அழைத்தாள். உடனே விஹானாவின் மேமோ நீ இந்த formil சைன் வாங்கி ஆஃபிஸில் கொடுத்து விடு! நாளையே கடைசி யஹீதி என்றாலும் அடுத்து மூன்று நாட்காளும் விடுமுறை என்பதால் ஆபீசை மூடிவிடுவிடுவார்கள் என்று கூறினார்.
சரி என்று அந்த formஐ வாங்கிக்கொண்டு வார்டேனின் அறைக்கு விரைந்தாள். அப்பொழுது தான் அவந்திகாவிற்கு தோன்றியது வார்டன் ஏன்? விஹானாவை அழைத்து வர சொன்னார் என்று யோசித்து, விஹானாவை அழைத்து செல்லவந்திருப்பானோ? என்ற யோசனை தோன்றியது. ஆனால் இவள் ஒன்றும் அவ்வளவு பணக்காரியாய் தோன்றவில்லை இவளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தமாக இருக்கும்? என்று யோசித்து பார்த்துவிட்டு அவளிடமே கேட்கலாம் என்று அவளிடம் உன்னை அழைத்து செல்ல வந்திருப்பவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டாள்.
அவள் தன் அன்னை தான் தன்னை அழைக்கவந்திருக்கிறார்கள் அவர்களை கிண்டல் செய்வதற்க்காக கேட்கிறாள் என்று நினைத்து, சீனியர் அது என் பர்சனல் அதுபற்றி நீங்கள் என்னிடம் கேட்பதோ விசாரிப்பதோ நான்றாக இல்லை என்று முகத்தில் அறைந்தாற்போல் கூறினாள்.
அதனை கேட்ட avanthikavin முகத்தில் ஈ ஆடவில்லை. அவளை பார்த்த விஹானாவோ நம்மால் இப்படியெல்லாம் பேச முடியுமா என்றுநினைத்து ஆச்சர்யப்பட்டாள். எதுவுமே இல்லாத வாழ்க்கை என்னவெல்லாம் கற்றுத்தருகிறது என்றுநினைத்து கொண்டாள்.
வார்டன் ரூமில் தன் தாயாரை எதிர்பாத்து நுழைந்தவளுக்கோ அதிர்ச்சி. அங்கே அவளின் தாயாருக்கு பதில் விவான் அமர்ந்திருந்தான். இவள் என்ன என்று யோசிக்கும் முன்பே அவன் கிளம்பலாமா? என்று கேட்டான். இவளுக்கு அதிர்ச்சியில் வார்த்தை வர மறுத்து அம்மா என்று மட்டும் வந்தது.
ஆண்ட்டிக்கு வேலை இருந்ததால் என்னை அழைத்துவர சொன்னார்கள் என்று கூறினான்.இவள் கையில் இருக்கும் form ஐ வாங்கி படித்தவன் அதில் கையெழுத்திட போக, அதில் பெற்றோர் தான் கையெழுத்திட வேண்டும் என்று கூறினாள்.
உடனே அவன் நான் உன் கார்டியன் அதனால் அதில் கையெழுத்திடலாம் என்று கூறினான்.
சரி போய் உன் luggage லாம் பேக் பண்ணியாச்சா? என்று கேட்டான். அவள் வெளியே வைத்துவிட்டு வந்திருக்கிறேன் என்று கூறினாள்.
வா கிளம்பலாம்! என்று அவனே luggage ஐ கையில் எடுத்துக்கொண்டு அவளையும் கூட்டி சென்றான். கேம்பஸ் ஐ விட்டு வெளியே வரும் வரையில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் அவன் கையில் luggage இருப்பதை கண்டு இல்லை சார் நான் எடுத்துட்டு வரேன் என்று இவளின் luggage ஐ வாங்க கையை நீட்டினாள்.
அவள் கேட்டதும் தான் அவனுக்கு அவளுடைய luggage ஐ இவன் எடுத்தது நினைவுக்கு வந்தது. தான் எப்படி இப்படி மாறினோம் என்று யோசித்தான். ஏனென்றால் அவனுடைய luggage ஐ கூட டிரைவர் உம் இவனின் assitants தான் எடுத்து வருவர்.
இப்பொழுது அவளிடம் bag ஐ கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவன், இப்பொழுது கொடுத்தால் எதாவது வித்யாசமாக நினைக்க கூடும் என்றெண்ணி, இல்லை பரவாயில்லை நானே எடுத்து வருகிறேன் என்று கூறினான்.
Luggage ஐ அவன் டிக்கியில் வைத்து கொண்டே அவளை போய் காரில் அமர சொன்னான். அவள் முன்னே அமர்வதா? பின்னே அமர்வதா? என்று ஒரே குழப்பம். பின்னர் தீக்ஷித்துடன் சென்ற பொழுது அவன் அவளை முன்னே உக்காரவைக்க பிரயத்தன பட்டதெல்லாம் கண் முன்னே வர, பின்னாடியே அமர்ந்தாள்.
அவனும் காரில் ஏற கதவை திறக்கும்பொழுது அவள் பின்னாலே அமர்ந்திருப்பதை பார்த்தவன் ஒரு சொல்லாமல் பின்னால் அமர்ந்துகொண்டான்.
அவன் அவனின் லேப்டாப்பில் மூழ்கிவிட, அவள் வேடிக்கை பார்த்துக்கொண்டே கண்ணயர்ந்தாள். அவனும் வேலையை முடித்துவிட்டு அவன் புறம் உள்ள ஜன்னலில் கண்ணயர்ந்தான்.
சிறிது நேரத்தில் வண்டி நிற்பதை உணர்ந்து கண்களை திறந்தான். தன் தோளில் ஏதோ பாரமாய் இருப்பது போல உணர்ந்தான். என்னவென்று பார்த்தால் விஹானா இவன்மேல் தலைசாய்த்து உறங்கி கொண்டிருந்தாள். டிரைவர் டீ குடிப்பதற்காக வண்டியை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு சென்றிருந்தார்.
தெருவோர மஞ்சள் நிற விளக்கொளியில் அவள் முகம் பிரகாசமாய் இருந்தது. அவள் சற்றே வாய் திறந்தவாறு குழந்தைபோல் தூங்கிக்கொண்டிருந்ததை பார்த்தவனுக்கோ ஏதோ இனம்புரியா உணர்வு ஏற்பட்டது. அவனையே மறந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.
பின்னர் டிரைவர் வருவதை பார்த்து அவளை அவள் பக்க ஜன்னலில் சாய்த்துவிட்டு இயல்பாக அமர்ந்துகொண்டான்.
அதான் பின்னர் அவனுக்கு தூக்கமே வரவில்லை. தான் வித்யாசமாக நடந்துகொள்வதை உணர்ந்தான்.
வீட்டிற்கு வந்ததும் அவளை எழுப்பினான். அவளோ இவன் என்று தெரியாமல் தூக்கத்திலேயே சிணுங்கினாள். அவள் சிணுங்குவது கூட இவனுக்கு கேட்க இதமாய் இருந்தது. பின்னர் அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப அவளின் கன்னத்தை தொட்டான். அவளின் கன்னத்தை தட்டும்பொழுது அவளின் கன்னத்தின் மென்மையை உணர்ந்தான். ஏதோ தோன்றவும் உடனே கையை எடுத்துக்கொண்டு கீழிறங்கினான். அவளின் தாயார் காரின் சத்தம் கேட்டு வாசலுக்கே வந்தார். அவரிடம் அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள் அவளை எழுப்பி கூட்டி செல்லுங்கள் என்று கூறிவிட்டு உடனே விரைந்தான்.
மறுநாள் பந்த் காரணமாக ஊரிலிருந்து இவனுக்கு வேலை செய்ய வருவதாக இருந்த p.a வரவில்லை. அதனால் இவனே எல்லாவேலையும் செய்தான். இவன் accounts பார்க்கும் போது அஸ்ஸிஸ்ட் க்கு ஆள் இருந்தால் தேவலாம் என்று தோன்றவும் வீட்டில் பார்த்தான் மற்றவர்கள் வேறு வேலையில் இருக்க விஹானா மட்டும் சும்மா இருந்ததால் அவளை கூப்பிட்டான்.
நான் கூறும் கணக்குகளின் விடையை சரிபார்த்து கூறவேண்டும் என்று கூறினான். அவளும் சரி என்றாள். நான் லெப்டாப்பில் உள்ள கணக்கை கூறுகிறேன் நீ உன் மொபைலில் சரிபார்த்து விடு என்று கூறினான்.
அவளோ என்னிடம் மொபைல் இல்லை அம்மாவிடம் சென்று வாங்கி வருகிறேன் என்று கூறினாள். அதற்கு அவனோ ஆச்சர்யமாய் பார்த்துவிட்டு உன் அம்மாவின் மொபைலில் email, excelsheets போன்றவை இருக்காது. ஆதலால் நீ என் மொபைலில் சரி பார்த்து சொல் என்று கூறினான்.
அவர்கள் அருகருகே அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களை ஒருவர் போட்டோ எடுத்தார். யாரென்றால் அந்த வீட்டின் நிர்வாகி வைதேகி அம்மாள்தான்.
அதனை கவனித்த விவானோ, பாட்டி என்ன செய்யிரிங்க? என்று கேட்டான். அதற்கு அவரோ நீ காலைல படம் எடுக்க கத்துக்கொடுத்தில அதைத்தான் செஞ்சு பார்க்கிறேன் என்று கூறினார்.
அவர் விவானின் இன்னொரு மொபைலில் இருந்து போட்டோ எடுத்துவைத்து பார்த்துக்கொண்டிருந்தார்.அவர் எடுத்த போட்டோவில் அவர்களின் நெருக்கத்தையும் ஜோடி பொருத்தத்தையும் பார்த்த அவர் விவான் தன் பகைமையை மறந்து இந்த பெண்ணுடன் அமைதியாய் மகிழ்ச்சியாய் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தார்.
இந்த மூன்று நாள் விடுமுறையில் அவர்கள் மிகவும் நெருக்கமாயினர். விஹானா விவானை neil என்றுதான் கூப்பிட சொன்னான் vihaanaathan அது மரியாதையாய் இராது என்று அவனை neil ji என்று அழைத்தாள். விவானின் அம்மாவிற்கு கிருஷ்ணரை பிடிக்கும் என்பதால் விவானை சிறு வயதில் neil என்று கூப்பிடுவார் (neilesh-lord krishna) அதனால் அப்பெயரை சொல்லி அவளை அழைக்க சொன்னான்.
அவனுக்கு நாளுக்கு நாள் விஹானாவை பிடித்துக்கொண்டே போனது. ஆனால் அவன் அதனை காதல் என்று கூறாமல் நட்பு என்று தனக்குத்தானே கூறி சமாதானம் செய்து கொண்டான்.
அவளை விடுதியில் விட திங்கள்கிழமை காலையிலே வந்தான். அப்போதுதான் அவனுக்கு அவளுக்கு மொபைல் இல்லாதது நினைவு வந்தது. இதைப்பற்றி வார்டேனிடம் பேச நினைத்து வார்டேனின் ரூமிற்கு சென்றான். அங்கு வார்டேனும் அவந்திகாவும் அட்டெண்டன்ஸ் லிஸ்ட் ஐ பார்த்து கொண்டிருந்தனர்.
அங்கு சென்ற விவான் விஹானா மொபைல் ஐ வைத்து கொள்ள அனுமதி கேட்டான். அதற்கு வார்டன் ஒருவருக்கு அனுமதி கொடுத்தாள் அனைவரும் கேட்பர். ஆதலால் அவளின் மொபைல் ஐ தாருங்கள் நான் ஹாஸ்டல் லாக்கரில் வைத்துவிடுகிறேன். அவளின் எமெர்ஜென்சி டைமில் உபயோகித்துக்கொள்ளட்டும். வீட்டிற்கு செல்லும் நாளில் அவளே எடுத்து செல்லட்டும். மற்ற நாட்களில் வராண்டா வில் உள்ள போனை பயன்படுத்தட்டும் என்று கூறினார்.
அவனுக்கும் அது சரி என்றே பட்டது. அவள் பாட்டுக்கு சோசியல் நெட்ஒர்க் அது இதென்று உபயோகித்தால் தீக்ஷித் இவளை கண்டுபிடித்துவிடுவான் என்று நினைத்து சரி என்றான்.
அவன் அவளுக்கு புது மொபைல் பிறகு வாங்கி தருகிறேன் இந்நேரம் shop எதுவும் திறந்திருக்காது என்று கூறி தனது மொபைலில் ஒன்றை அவளுக்கு கொடுத்தான். அவள் வேண்டாமென்று மறுக்க இதனை வைத்துக்கொள் இதில் என் நம்பர், paati, உன் அம்மா மற்றும் என் chief guard உடைய சில num இருக்கிறது.
அவனே அவனின் லாக் ஐ ரிமோவ் செய்து confidencial டீடெயில்ஸ் டெலீட் செய்து அவளுக்கு தந்துவிட்டு சென்றான். வார்டன் உம் அதனை வாங்கி லாக்கரில் வைத்துவிட்டு அவரின் வேலையை பார்க்க தொண்டங்கிவிட்டார்.
லஞ்ச் டைம் இல் இந்து வையும், விஷாவையும் சந்தித்த அவள், விஹானாவின் கார்டியன் ஐ பற்றி கூறி அங்கு நடந்த அனைத்தையும் கூறினாள்.
இந்து அவன் அவ்வளவு அழகாகவா இருந்தான் என்று கேட்டாள். நீ நேரில் பார்த்திருந்தால் நீயே கூறுவாய் அவனைத்தான் கல்யாணம் செய்வேனென்று !என்று கூறினாள்.
விசா ஏதோ யோசனையில் இருக்க அவளை பார்த்து என்ன யோசிக்குற விசா? என்று கேட்டாள்.
அவளை பார்த்தால் அப்படி ஒன்றும் highclass family ஐ சார்ந்தவள் போல தெரியவில்லை என்று கூறினாள்.
அவள் அவனை எவ்வாறு அழைத்தாள்? என்று கேட்டாள். அவந்திகா யோசித்துவிட்டு, neil னு கூப்பிட்டா? என்று கூறினாள்.
Neil ah? அப்படி யாரையும் கேள்விப்பட்டதே இல்லையே என்று விசா யோசிக்க, அவன் கொடுத்த மொபைல் நம் ஹாஸ்டல் லாக்கரில் தன் உள்ளது. சாய்ந்திரம் வார்டன் வர லேட் ஆகும். அதற்குள் அந்த மொபைலை எடுத்து பார்த்தால் எதாவது தெரியும்.
பின்னர் அவரவர் வகுப்பிற்கு சென்றனர் லேபிலிருக்கும் ஸிஸ்டெமில் கூட neil என்று type செய்து கூகுளை அலசி ஆராந்தனர்.
வகுப்பு முடிந்தவுடன் வேகமாக வந்த அவர்கள் வார்டன் cupboard இல் இருந்து சாவியை எடுத்து லாக்கர் ஐ ஓபன் செய்தனர். அதிலிருக்கும் மொபைலை ஒன்னும் செய்தனர்.
ஒரு வேல password கேட்டா என்ன பண்ண? என்று இந்து சந்தேகம் கேட்டாள்.
இல்லை அவன் lock pattern ஐ remove பண்ணிட்டு தான் கொடுத்தான்.
அதற்குள் மொபைல் ஓபன் ஆனது.
வால்பேப்பர் இல் ஒன்றும் இல்லை. பின்னர் gallery ஓபன் செய்து பார்த்தனர். அதில் வைதேகி பாட்டி எடுத்த போட்டோ இருந்தது. அதனை பார்த்த விசா இவன் பேரு neil இல்லை விவான் என்று கூறினாள்.
இவனை உனக்கு தெரியுமா? என்று இந்து கேட்டாள். தெரியும்! இவன் இந்தியாலேயே பெரிய பிசினஸ் மக்னெட். லாஸ்ட் டைம் பார்ட்டி ல பாத்தேன் என்று கூறினாள்.
விசா இவளுக்கும் விவானுக்கும் என்ன சம்பந்தமாக இருக்கும்? என்று யோசித்து கொண்டிருக்க, இந்து போனை பிடிங்கி வாட்ஸாப்ப் போட்டோஸ் ஐ பார்த்து கொண்டிருந்தாள். அதில் அவனின் candidpics niraya மற்றவர்கள் அனுப்பியது இருந்தது. அதனை பார்த்து அவ்விருவரும் ஜொள்ளு விட்டு கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment