விசாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. விவானோ மிக பெரிய பணக்காரன், விஹானாவோ sponsors தரும் ஷகாலர்ஷிப்பில் படிப்பவள்.இருவருக்கும் இடையே அப்படி என்ன இருந்துவிட முடியும் என்று யோசித்தாள்.
இந்து, சொல்வதை பார்த்தால் அவர்கள் நெருங்கி பழகுபவர்கள் போல் தெரிகிறதே! ஆனால் நான் கேள்விப்பட்ட வரையில் விவான் பெரிய பணக்காரர்களிடம் கூட இவன் சரியாக பேசமாட்டான். ஆனால் இவளிடம் எப்படி? என்று யோசித்தாள்.
மூவரும் விஹானாவிடமே கேட்கலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால் விசாவுக்கோ தாங்கள் கேட்டாள் அவள் தங்களிடம் உண்மையை கூறுவாளா? என்று இருந்தது.
அப்போதுதான் விசாவிற்கு இந்துவின் ஜூனியர் அவளின் ரூம்மெட் என்பது ஞாபகத்திற்கு வந்தது.
அவளை விட்டு கேட்கச்சொல்லலாம் என்று விசா நினைத்தாள். அவளிடம், இவர்கள் தங்கள் கேட்கநினைப்பதை அவளிடம் எவ்வாறு கேட்க வேண்டும் என்று அவளிடம் விளக்கி அனுப்பினர்.அவள் கேட்க சென்றதும், அவள் பின்னாலே போய் கதவருகே மறைந்து நின்று ஒட்டுக்கேட்டனர்.
அவள் விஹானாவிடம் சென்று விஹானா எனக்கு லோக்கல் guardian இல்லை.அதனால் அம்மா உன்னுடைய கார்டியனை எனக்கு guardianaga போடலாம்ணு அம்மா கேட்டாங்க? ஜஸ்ட் ஊருக்கு போக சைன் போட மட்டும்தான் அதுவும் எமெர்ஜென்சி time காக என்று கேட்டாள்.
அவள் என்னுடைய guardian வேண்டாம் என் அம்மாவை உனக்கு guardianaaga போடலாம் என்று கூறினாள்.
ஆனால் உன் அம்மா வேறு ஊரில் அல்லவா இருக்கிறார்கள். உன்னை அழைத்து போக உன் guardian தானே வந்தார்.
நீ கேட்கறது புரிது! என் கார்டியன், எனக்கு relative இல்லை என்னுடைய அம்மாவின் முதலாளி எங்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்திருக்கிறார். எனக்கு வேறு யாரும் இல்லை அதனால் அவர் கார்டியனாக இருக்கிறார் ( பாவம் அவளுக்கு தெரியவில்லை அவளை தீக்ஷித்திடம் விலக்கி வைக்கவே அவன் கார்டியன் ஆக பாஸ் வாங்கியிருந்தான்).
அதுமட்டுமல்லாமல் அவருக்கு இந்த ஊர் கிடையாது. அவர் vacation காக இங்கு வந்திருக்கிறார் என்று கூறினாள்.
சரி டி நான் வேறு யாரையாவது பார்க்கிறேன் என்று கூறிவிட்டு சென்றாள்.
அதனை ஒட்டுகேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அப்பொழுது தான் நிம்மதி பிறந்தது. அதிலும் குறிப்பாக விசாவிற்கு.
இப்படியே நாட்கள் சென்றது. விவானும் விஹானாவும் போனில் பேசிக்கொள்ளவே இல்லை. அதனால் அந்த போன் வார்டன் இன் லாக்கரில் தூங்கியது.
அப்பொழுதுதான் பழ்கலைக்கழகத்தின் கலைவிழா வந்தது. அங்கு கலைவிழா என்பது ஆடல் பாடல் மட்டுமல்லாது ஆடை வடிவைமைப்பு, flower arrangement, சமையல் என அனைத்து துறையினருக்கும் போட்டிகள் நடைபெறும். அந்த பழ்கலைக்கழகமே விழாக்கோலம் பூண்டிருக்கும். ஒரு மாதத்திற்கு முன்பே போட்டிகள் தொடங்கிவிடும். அதில் தற்காப்பு கலையும், விளையாட்டும் மட்டும் நடைபெறாது. அது இரண்டும் even செமஸ்டரில் ஸ்போர்ட்ஸ் டே வாக கொண்டாடப்படும்.
கலைவிழா நிகழ்ச்சி இரண்டு நாட்களுக்கு 5 ஷோவாக நடக்கும் ஏனெனில் அங்கு பள்ளி மற்றும் பழ்கலைக்கழக மாணவியர் ஏராளம். முதல் 4 ஷோ பள்ளி, ug, pg, மற்றும் இன்ஜினியரிங் மாணவியர் பார்வையளாராக இருப்பர்.அதற்கு தலைமை தாங்குவது chancellor vicechancellor, ரெஜிஸ்ட்ரார் மற்றும் faculties சீனியர் dean. கடைசி ஷோ தான் வெளியிலிருந்து சிறப்புவிருந்தினர் வருவர். ஏனெனில் விடுதியில் தான் சிறந்தமதிப்பெண் வாங்கும் மாணவியரும் மற்ற துறையில் சாதனை படைத்த மாணவியரும் இருப்பர்.
அன்று சிறப்பு விருந்தினராக வந்தது விவான் சோப்ரா. முதலாம் ஆண்டு மாணவிகளை ஆடிட்டோரியமில் பின்னால் அமர்த்திருந்தனர். ஆதலால் விஹானாவும் மேடையில் அமர்ந்திருந்த விவானை சரியாகப்பார்க்கவில்லை. விழா ஆரம்பித்ததும் விஹானா தூங்க ஆரம்பித்துவிட்டாள். ஆடல் பாடல் நிகழ்ச்சியை மட்டும் அரைகுறை தூக்கத்தில் கண்டாள்.
பின்னர் விழாமுடிந்து சிறப்பு விருந்தினர்களை சாப்பிட அழைத்துச்சென்றதும் கூட்டம் கலைய தொடங்கியது. இறுதியாண்டு மாணவியர் மட்டும் மேடையில் ஆடிப்பாடி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
ஆடிட்டோரியுமின் அருகில் pg மற்றும் research scholars க்கான மெஸ்ஸும் கொஞ்சம் தள்ளி ug மற்றும் ஸ்கூல் க்கான மெஸ்ஸும் இருந்தது.
அன்றிலிருந்து 10 நாட்கள் study holidays அதன் பிறகு செமஸ்டர். ஆதலால் அவள் pg யில் இவள் ஒரு பெண்ணுடன் ஸ்நேகமாகிருந்தாள். அந்த பெண் நன்றாக படிக்க கூடிய பெண் என்று சமீபமாக தெரியவந்தது. ஆதலால் அந்த பெண்ணிடம் நோட்ஸ் கேட்டிருந்தாள். அந்த பெண்ணும் function முடிந்ததும் pg மெஸ்ஸிற்கு வந்து நோட்ஸ் ஐ வாங்கிக்கொள்ள சொன்னாள். இவளும் நோட்ஸ் தானே வாங்க போகிறோம் என்று tshirt um 3/4உம் அணிந்திருந்தாள். முடியை அப்படியே அவிழ்த்துவிட்டிருந்தாள்.
எனவே pg மெஸ்ஸிற்கு சென்று நோட்ஸ் வாங்கிக்கொண்டு ஆடிட்டோரியமை கடந்து செல்லும் போது விவான் அவளை பார்த்து, sonpari என்று கூப்பிட்டான். ஒருநிமிடம் அவனுக்கே புரியவில்லை ஏன் அவ்வாறு கூப்பிட்டோம் என்று, அவனுடன் சாப்பிட்டு கொண்டிருந்த யூனிவர்சிட்டி faculty மெம்பெர்ஸ் அனைவரும் அவன் கூப்பிட்ட திசையை பார்த்தனர்.
குழப்பத்தில் இருந்த விஹானா அவனை கண்டதும் அருகே வந்தாள். அவன் உடனே வார்டேனிடம் நாளை வந்து அவளை அழைத்து செல்வது தேவையில்லாத அலைச்சல் ஆதலால் அவளை தான் இப்போதே அழைத்து செல்கிறேன் என்று கூறினான்.
வார்டன் தயக்கத்துடன் chancellor ஐ பார்க்க அவர் தலையசைத்து அனுமதி கொடுத்தார். பின்னர் விஹானாவிடம் நீ இன்று இரவே வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினார்.
அவளும் நான் சென்று சாப்பிட்டு luggage ஐ எடுத்து வருகிறேன் என்று கூறினாள். விவானோ நீ ஹாஸ்டெலில் சென்று சாப்பிட்டு வர நேரமாகும். நீ இங்கேயே சாப்பிடு என்றுகூறினான். அவள் தயங்கவும், chancellor ஐ பார்த்து, அவள் இங்கு என்னோடு உணவருந்துவதில், உங்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லையே? என்று கேட்டான்.
அவரும் அதெல்லாம் ஒன்றும் இல்லை அவள் தாராளமாக நம்மோடு உணவருந்தலாம் என்றார்.பின்னர் அவள் தன் கையிலிருந்த நோட்ஸ் ஐ ஓரிடத்தில் பத்திரமாக வைத்துவிட்டு தான் கொண்டுவந்த பென்சிளை கொண்டு கொண்டையிட்டாள்.அவள் கை சர்வ சாதாரணமாக கொண்டையிடுவதை
விவான் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்த விவானிடம் hosteluku தானே போறோம்னு அப்படியே வந்துட்டேன், எல்லாரும் சாப்பிடுறாங்க முடிகொட்டும் இல்ல அதான் என்றாள்.
அங்கு காலேஜ் ஸ்டுடென்ட் கவுன்சில் மெம்பெர்ஸ்ஸும், ஹாஸ்டல் ஸ்டுடென்ட் கவுன்சில் மெம்பெர்ஸ்ம்(விசா and team) இருந்தனர்.
அவன் sonpari என்று கூப்பிட்டதை மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை ஆனால் விசா விற்கு அதனை கேட்டதிலிருந்தே உள்ளுக்குள் ஏதோ கொதித்தது.
அவள் சாப்பிட்டதும் luggage எடுக்க செல்ல வார்டன் விசா விடம் விஹானாவின் போனை எடுத்து வந்து விவானிடம் தர சொல்ல, இதுதான் சமயமென்று விசா மொபைலை கொடுக்கும் சாக்கில் அவனிடம் வந்து என்னை உங்களுக்கு நினைவில்லயா? என்று கேட்டாள்.
அவனோ எனக்கு தெரியவில்லை? என்று கூறினான்.
அவள் விடாமல் ஷீவ் நாடார் சாரின் காலேஜ் inauguration க்கு வந்திருந்தேன். அங்கு என் அப்பாவோடு வந்திருந்தேன். அந்த functionku கூட தீக்ஷித் சார் என்று ஆரம்பிக்கவும் இவன் பதட்டமாகி எனக்கு நினைவில்லை என்று பட்டென கூறிவிட்டு தூரத்தில் வந்துகொண்டிருந்த விஹானாவை, எங்கே விட்டாள் விசா பேசுவதை அவள் கேட்டுவிடுவாளோ என்ற பயத்தில் விஹானாவின் luggage ஐ ஒரு கையில் வாங்கி இன்னொரு கையினால் விஹானாவின் கைபிடித்து வேகமாக வாயிலை நோக்கி புறப்பட்டான்.
பின்னர் இருவரும் காரில் ஏறி ஊருக்கு கிளம்பினர். அன்றுபோல் அல்லாமல் இருவரும் களைப்பாக இருந்ததனால் காரில் ஏறியவுடன் உறங்கிவிட்டனர்.
அவர்கள் எழுந்து பார்த்தால் மணி காலை 11:15 என காட்டியது. முன்னாடி பார்த்தால் டிரைவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருக்கிறார். விவான் அவரை எழுப்பி, kya bhaiee? என்று கேட்டான்.
sari sar bahut thake hue the isalie so gae (ரொம்ப டயர்டாக இருந்தது அதனால் தூங்கிட்டேன் ) என்றார்.
விவான்தான் அவனின் டிரைவர்களிடம் மிகவும் களைப்பாக இருந்தால் வண்டியை ஓரமாக நிறுத்தி ரெஸ்ட் எடுத்து செல்ல வேண்டும் என்பான்.
மிகவும் அவசர வேலையாக இருந்ததால் வேறு டிரைவர் ஐ வர சொல்லி செல்வான்.
இட்ஸ் ஓகே bhaiya! என்று கூறிவிட்டு பசிக்கவும் சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே ஒரு nonveg மெஸ்ஸும் சற்று தள்ளி chinese ரெஸ்டூரண்ட்டும் இருந்தது. அந்த மெஸ்ஸில் கேட்டால் லஞ்ச் 2 மணிக்கு தான் ரெடி ஆகும் என்று கூறிவிட்டனர்.
அதனால் chinese ரெஸ்ட்டுரின்டிற்கு டிரைவர் யும் விஹானாவையும் அழைத்து சென்றான்.
அவளோ அதனுள்ளே போவதற்குள் அத்தனை கேள்வி கேட்டு அவனை படுத்திஎடுத்துவிட்டாள். அங்கு பாம்பு பல்லி பூரான் எல்லாம் இருக்கும் நான் சாப்பிட வரமாட்டேன்! என்றாள். அவன் அங்கு அதெல்லாம் இல்லை அப்படியே இருந்தாலும் நாமென்ன அதையா சாப்பிட போகிறோம். நூடுல்ஸ் மட்டும் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்றான். அதற்கு அவளோ பாம்பு பூரானெல்லாம் டப்பாவில் தானே வைத்திருப்பர் இல்லை அப்படியே விட்டுவிடுவார்களா என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்டாள்.
அதற்குள் அவர்கள் உள்ளே வந்துவிட முதலில் சூப் சாப்பிடலாம் என்றுகூறி ஆர்டர் செய்துவிட்டு போய் ரெப்பிரேஷ் செய்துவிட்டு வந்து அமர்ந்தனர். சூப் உடன் fortune cookies உம் வந்தது. அவள் அது என்ன என்று கேட்க, விவான் அந்த fortune குக்கியை உடைத்தால் உள்ளே ஒரு சீட்டில் நல்லவாசகங்கள் இருக்கும் அதை பார்க்கும் பொழுது நமது மனதில் ஒரு சிறு நம்பிக்கையும் சந்தோஷமும் பிறக்கும். இது உலகில் உள்ள எல்லா chinese ரெஸ்டாரண்ட்டிலும் இந்த மாதிரி cookies இருக்கும் என்று கூறினான்.
உடனே அவள் அவள் தட்டில் இருந்த குக்கியியை உடைத்து பார்த்தாள். அதில் அவளுக்கு
All you need is love
என்று எழுதப்பட்டிருந்தது. அவள் உடனே விவானின் குக்கியியை அவனிடம் அனுமதி கேட்டு எடுத்து உடைத்து பார்க்க அதில்
Everything that is was first a dream
என்று எழுதிருந்தது. அவள் உடனே driverin குக்கியியை எடுத்து பார்க்க அதில்
An old love will come back to you
அவள் அவர்களுக்கு வந்ததை வைத்து அனைவரையும் ஒட்டிக்கொண்டிருந்தாள். பின்னர் அந்த பெண்ணிடம் fortune cookies ஐ கேட்டாள். அதற்கு அந்த பெண் சாரி மேம், its just a complimentary not for sale என்று கூறியதும் இவளின் முகம் வாடிப்போக, விவான் அந்த ரெஸ்டூரண்ட் மானேஜரிடம் பேசி ஒரு டப்பா நிறைய அவளுக்கு வாங்கி கொடுத்தான்.
பின்னர் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்தவுடன் அவன் சென்று ஓய்வெடுக்க கிளம்பிவிட்டாள். இவளும் அம்மாவிடம் கதைபேசி தூங்கச்சென்றாள்.
மாலை வேளை எழுந்த அவனுக்கு வெளியே ஏதோ குரல் கேட்கவும் balcony இல் இருந்து எட்டிப்பார்த்தான். அங்கே அவளோ வீட்டில் வேலை செய்பவர்கள் தோட்டவேலை செய்பவர்கள் மற்றும் விவானின் p.a என அனைவரையும் கூட்டி வைத்து ஆளுக்கொரு fortune குக்கியியை கொடுத்து ஜோசியம் சொல்கிறேன் என்று ரகளை பண்ணிக்கொண்டிருந்தாள்.
அதனை பார்த்ததும் அவனை அறியாமலே அவனின் இதழில் முறுவல் பூத்தது. பின்னர் இரவு சாப்பிட்டதும் விஹானாவை அழைத்து நீ ஏன் ஒரு போட்டியில் கூட கலந்துக்கொள்ளவில்லை, நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொள்ளவிலையே ஏன்? என்று கேட்டான்.
எனக்கு extra curricular activities எதுவும் தெரியாது என்று கூறினாள்.
விவான், அடுத்த செம்மில் உனக்கு ஸ்போர்ட்ஸ் டே உண்டல்லவா அதற்கு நடைபெறும் போட்டியில் நீ கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினான். அதற்கு விஹானாவோ எனக்குத்தான் எதுவும் விளையாட தெரியாதே? என்று கூறினாள்.
நாளையிலிருந்து 5 நாட்கள் பாஸ்கெட்பால் மற்றும் shuttle க்கான practice அடுத்த 5 நாட்கள் நீ செம்மிற்கு படிக்கலாம் என்று கூறினான்.
அவனது farmhouse அருகே indoor கோர்ட் ஒன்று கட்டிவைத்திருந்தான். அதில் practice செய்ய காலை வர சொல்லி கட்டளையிட்டு சென்றான்.
அவள் இந்த ஐந்து நாட்களும் எப்பொழுது முடியும் என்று காத்திருந்தாள். ஆனால் அவளுக்கு தெரியவில்லை அவளை விட அவன்தான் practice ஆரம்பித்ததும் அப்படி நினைப்பான் என்று !
Shuttle விளையாடும் போது அவனுக்கும் அவளுக்கும் எல்லாம் நார்மலாகத்தான் இருந்தது.
Basketball விளையாடும் பொழுது அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் அவனை என்னவோ செய்தது. அவளின் ஸ்பரிசம், வியர்வை வாசம், கூந்தலின் மனம் என அனைத்தும் அவனை பாடாய்படுத்தியது. அவளோ இது ஏதும் அறியாமல் அவனுடன் நெருக்கமாக நின்று விளையாடிக்கொண்டிருந்தாள்.
அவனுக்கு இவ்விளையாட்டை நிறுத்த சொல்ல தன்மானம் இடம்கொடுக்கவில்லை ஏனெனில் அவள் வேண்டாமென்று மறுத்தும் இவன் ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரெஸ் ஐ குறைக்கும் அதுஇதென்று என்று ஒருநாள் முழுக்க கிளாஸ் எடுத்திருந்தான்.
ஆதலால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றான்.
Comments
Post a Comment