17. என் சுவாசத்தின் மறுஜென்மம்

அதன் பின்னர் விவானுக்கு அவளை செமஸ்டர்க்கு படிக்க வைப்பதற்குள் பெரும்பாடாயிற்று.

விஹானாவின் அம்மாவிற்கு விவான் ஆரம்பத்திலே ஒரு வாக்கு கொடுத்திருந்தான், அதாவது விஹானா interior designing course ஐ முடித்ததும் அவளுடைய எதிர்காலத்திற்காக தன்னுடைய அலுவலகத்தில் வேலை கொடுப்பதாக கூறியிருந்தான்.

அதனை நிறைவேற்றுகிறேன் எனக்கூறி அவளை படிக்க வைக்க முயற்சி செய்துகொண்டிருந்தான்.
உண்மையில் அவனுக்கு அவளுடைய அருகாமை பிடித்திருந்தது. அந்த உணர்வு காதல் என்பது அவனுக்கு புரியவில்லை.

அவளோடு இருக்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பதாய் உணர்ந்தான்.

காலையிலே அவளை எழுப்பி படிக்க வைக்கிறேன் பேர்வழியென்று பாடாய்படுத்திக் கொண்டிருந்தான்.
அவளுக்கோ தூக்கம் சொக்கும். அரைத்தூக்கத்திலே ப்ரஷில் பேஸ்டை வைத்துக்கொண்டு வெளியில் இருக்கும் ஸ்லாபில் அமர்ந்துகொண்டு தூக்கத்திலே பல்துலக்குவாள்.

அவனுக்கோ அவளை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும். அவள் அப்படி கண்கள் சொக்க பிரஷ் ஐ வைத்து மெதுவாய் தேய்க்கும்பொழுது அவனுக்கு அவளின் குழந்தைத்தனம் மிகவும் அழகாய் தெரிந்தது. அவன் எத்தனையோ மாடல் அழகிகளையும், நடிகைகளையும் பார்த்துள்ளான். ஆனால் அவர்கள் அனைவரும் மேக் அப்பிலே வலம் வருவார்கள். தினசரி வாழ்க்கையிலே நடிப்பவர்கள். அவர்கள் மத்தியில் விஹானா தனியாக தெரிந்தாள்.

அவள் தினசரி செய்யும் சிறு செயல் கூட விவானை ஈர்த்தது.

அவளால் சிறிது நேரம் கூட ஒரு இடத்தில் அமர்ந்து படிக்க முடியாது. படிக்க உட்கார்ந்ததும் தூக்கம் வருகிறது முகம் கழுவி வருகிறேன் என்று சென்று விடுவாள். அரைமணிநேரம் கழித்தே வருவாள். சிறிது நேரத்திலேயே கொஞ்சம் பசிக்கிறது ஏதாவது சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு செல்வாள். மிகவும் நேரம் கழித்தே வருவாள் அதுவும் கையில் சிப்ஸ் பாக்கெட்டோ அல்லது பிஸ்கட் பாக்கெட்டோ இருக்கும் சிறிது நேரம் அதை கொரித்துக்கொண்டே இருப்பாள்.

          பின்னர் உண்ட மயக்கம் என்று சிறிது தூங்குகிறேன் என்று தூங்கிவிடுவாள். அதுவும் புத்தகத்தை கொண்டு முகத்தை மூடிக்கொள்வாள். இவை அனைத்தையும் விவான் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பான்.

        சிறிது நேரம் கழித்து அவன் சென்று புத்தகத்தை எடுத்து கீழே வைத்துவிட்டு அவளை ரசித்து ரசித்து பார்ப்பான். இது எதுவும் அறியாத அவளோ தூக்கத்தில் வாயில் ஜொள் வழிய வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருப்பாள்.

         இதற்கிடையே அவனுக்கு சிட்டி இல் உள்ள ஆஃபிஸில் இரண்டு கிளைண்ட்ஸ் உடன் மீட்டிங்கும் ஒரு conference உம் இருந்தது.காலையில் சென்றால் நாடு இரவில் தான் வருவான். அவன் வருவதற்குள் அவள் உறங்கிவிடுவாள். அவளை  காண்பதே அரிதாகிவிடும். அடுத்த இரண்டு நாளில் கல்லூரிக்கு வேறு சென்றுவிடுவாள்.அவளை விட்டு இவனால் செல்ல முடியவில்லை. அது ஏனென்றும் யோசிக்க தோன்றவில்லை.

            ஆதலால் அவளையும் ஆஃபீஸிற்கு அழைத்து சென்று படிக்கவைக்கிறேன் இங்கிருந்தால் படிக்காமல் ஏமாற்றுவாள் என்று கூறி தன்னுடன் வர செய்தான்.

               மறுநாள் விடியற்காலையில் அவளை அரும்பாடு பட்டு எழுப்பி கிளம்ப வைத்து ஒரு வழியாய் ஆஃபீஸிற்கு வந்து சேர்ந்தனர். அவனும் இவளும் சேர்ந்து உள்ளே போக ஆபீஸே ஆவென பார்த்தது.பார்த்தது மட்டுமல்லாமல் அவர்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டனர். இதனை கண்டும் காணாமல் அவன் முன்முறுவலோடு அவளது கைபிடித்து அவளை லிப்டை நோக்கி அழைத்துச்சென்றான். 

          அவனுடைய employees அனைவரும் இவனுக்கு விஷ் செய்ய விஹானா வோ அவனுடைய ஆஃபீஸை மெய்மறந்து பார்த்துக்கொண்டே அவனுடன் வந்தாள்.

           இருவரும் கேபினில் நுழைந்ததும் அவன் அவளை நோக்கி திரும்பினான். அப்பொழுதுதான் கவனித்தான் அவள் ஆவென பார்த்துக்கொண்டிருந்ததை, அவனுக்கு அப்படியே அவளை அள்ளி அணைத்து முத்தம் கொடுக்கவேண்டும் போல் இருந்தது.

            ஒரு நிமிடம் தான் ஏன் அவ்வாறு யோசித்தோம் என்று நினைத்தான். அவனுக்கு ஏதோ புரிவதுபோல் இருந்தது. அப்போதுதான் ஞாபகம் வந்தவனாய், அவளிடம் கேட்டான் விஹா உன்னுடைய புக்ஸ் லாம் எங்கே என்று கேட்க, அதற்கு  அவள் ஐயோ ! நீல்ஜி நான் காரிலேயே மறந்து வச்சிட்டு வந்துட்டேனே !என்று கூறினாள்.

            நீ மறந்தெல்லாம் வச்சிருக்க மாட்ட, வேணும்னே timepass பண்ண வச்சிட்டு வந்துருப்ப என்றுக் கூறினான். 5mins ல நீ போய் எடுத்துட்டு வரணும் புரியுதா? என்று கூறிவிட்டு தன்னுடைய சீட்டில் அமர்ந்து வாட்சை பார்க்க ஆரம்பித்தான்.

            அவளும் உடனே சிட்டாய் பறந்தாள். அவனும் வாட்ச் ஐ பார்த்துக்கொண்டே யோசித்தான். 10நிமிடம் ஆகியும் அவள் இன்னும் வரவில்லையே என்று சிசிடிவியில் பார்க்க ஆரம்பித்தான்.

             அவள் பார்க்கிங் சென்று நோட்ஸ் எடுத்துவிட்டு திரும்பி reception க்கு வந்துக்கொண்டிருக்கும் போது  அவனுடைய கம்பெனியில் வேலை பார்க்கும் ஷ்யாம் அவளுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. இவனுக்கு உடனே கோபம் தலைக்கேறியது. எப்படி?  அவள் இன்னொரு ஆணுடன் பேசலாம்.

            உடனே அவன் ரூமை விட்டு வெளியேறியவன் நேராக அவர்களிடம் சென்று உனக்கு இவனிடம் என்ன பேச்சு? இவனை முன்பே உனக்கு தெரியுமா? என்று தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டே அவளை பார்த்துக் கேட்டான்.

             அதற்கு ஷ்யாம் பேச முற்பட,  நான் அவளிடம் கேட்டேன் என்றுக் கூறினான். அதற்கு விஹானா, நான் வந்துட்டு இருந்தப்போ என் கைல இருந்த பைலை பார்த்துட்டு இன்டெர்வியூ க்கு வந்தேன்னு நெனச்சு விசாரிச்சாரு என்று கூறிக்கொண்டிருக்கும்போதே நீ இங்கு மற்றவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற தேவையில்லை என்று கூற நான் பதில் சொல்லலேன்னா அவருக்கு எப்படி தெ....... அவளை பாதியிலே நிறுத்தி, அதெல்லாம் யார்க்கும் எதுவும் உன்னை பற்றி தெரியவேண்டாம்! என்று கூறி அவளை  இழுத்து சென்றான்.

             அவளை பற்றி யாருக்கும் தெரியவேண்டாம் என்று கூறியது தீக்ஷித்திற்காக இருந்தாலும் அவன் கூறிய விதம் அவனுக்காக, அவனால் அவள் எந்த ஆணுடன் பேசுவதையும் ஏற்க முடியவில்லை.

            அதேநேரம் அங்கு reception ல் பிரியா உடன் பேசிக்கொண்டிருந்த receptionist காலையிலிருந்து நடந்தவைகளை கூறினாள். அதனை கேட்டதும் பிரியாவிற்கு யாரென்றே தெரியாத விஹானாவின் மீது கொலைவெறியே உண்டானது.

            ஏனென்றால் அவள் 5வருடங்களாக விவானை ஒரு தலையாய் காதலித்து வருகிறாள்.இது அந்த ஆஃபிஸில் பாதி பேருக்கு தெரியும். எப்படியும் அவள் அவனை கல்யாணம் செய்து செட்டில் ஆகிவிடுவோம் என்ற நினைப்பில் இருந்ததால் அந்த ஆஃபீஸில் அவள் மற்றவர்களிடம் அதிகாரமாகவே நடந்துகொள்வாள்.

                அவள் வேலையில் கில்லாடி என்பதால் மட்டுமே அவளுக்கு சில சலுகைகளை விவான் அளித்திருந்தான். அதனை அவள் தவறான முறையில் கையாண்டபோதும் அவள் வேலையில் கில்லாடி என்பதால் அவளை கண்டிப்பதோடு நிறுத்திக்கொண்டான்.

         அதுவே அவளுக்கு இன்னும் வசதியாய் போயிற்று. இதனால் மற்றவர்கள் இவள் மீது கோபம் இருந்த போதிலும் வெளிப்படையாய் காட்டிக்கொள்ளவில்லை .

         Receptionist இவளிடம் கூறியது கூட இவளின் முகமாற்றத்தை கண்டு ஆனந்தம் கொள்ளத்தான்.

         இவள் பயங்கர கோபத்துடன் விஹானின் அறைக்கு சென்று அறைக்கதவை மெலிதாக தட்டினாள்.பதில் வராமல் போகவே கதவை மெதுவாக திறந்து பார்த்தாள்.  அங்கு அவள் எதிர்பார்க்காதது விஹானா அவனின் டெஸ்கில் இருந்த புக்கின் மேல் தலை வைத்து தூங்கிக்கொண்டிருந்ததைதான்.

         அவள் நேரே சென்று அவளை வேகமாக உலுக்கி எழுப்பினாள். பதறியடித்து எழ முற்பட்ட விஹானா தவறி கீழே விழுந்தாள். சத்தம் கேட்டு வாஷ்ரூமிலிருந்து வந்த விவான் விஹானா விழுந்ததை பார்த்து அவளை தூக்கிவிட, இங்கு என்ன நடக்கிறது என்று ப்ரியாவை பார்த்து சற்று கோபமாக கேட்டான்.

         இல்லை சார், உங்களுக்கு ஆஃபிஸில் தூங்கினாலே பிடிக்காது இவள் உங்களை பற்றி தெரியாமல் டெஸ்கிலேயே தூங்கிவிட்டாளா !அதான் அவளை எழுப்பினேன் என்று எரிச்சல் மூட்ட அவனிடம் கூறினாள்.

        அவனோ விஹானாவை அவன் அறையில் இருந்த சோபா வில் அமரவைத்து தலையில் அடியேதும் பட்டிருக்கிறதா? என்று பார்த்தான் எதுவுமில்லை என்ற பிறகே நிம்மதி அடைந்தான்.

     பின்னர் ப்ரியாவை பார்த்து உனக்கு அறிவிருக்கிறதா? நான் நீங்கள் தூங்கினால் ஒர்க் admosphere கெட்டுவிடும் என்பதற்காக அதனாலதான் அவ்வளவு தூக்கம் வந்தால் லீவு போட்டு தூங்குங்கள் என்று கூறுவேன் ஏனென்றால் உங்களால் மற்றவர்களும் தூங்கிவிட கூடாது என்பதற்காக, மற்றபடி என் ருமில் தூங்கிக்கொண்டிருக்கும் இவளை எழுப்ப சொல்லவில்லை.

        என் அறையில் யார் என்ன செய்தாலும் இப்படித்தான் வந்து தொந்தரவு செய்வாயா? அதுமட்டுமல்லாமல் அவளை அவள் இவளென்று அழைக்கிறாய் அவளுடன் பழகி இருக்கிறாயா? என்று என்னென்னவோ கோபமாக கேட்டான்.

         அவன் கோபத்தை கண்டவுடன் இவள் செய்வதறியாது இருவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு இப்போதைக்கு எதுவும் வேண்டாமென்று அவளுடைய கேபினுக்கு சென்றுவிட்டாள்.

         இங்கு நடப்பது எதுவும் புரியாமல் அரை தூக்கத்தில் கீழே விழுந்ததால் மலங்க மலங்க விழித்து கொண்டிருப்பதை பார்த்ததும் அவன் அவளை தூங்க சொல்லிவிட்டான்.

          ஒரு இரண்டு மணிநேரம் கழித்து எல்லாம் நார்மலான பிறகு, பிரியா விவானின் அறைக்கதவை தட்டினாள். அவன் 'கம் இன்' என்றதும் உள்ளே நுழைந்து இதற்கு முன்னாள் எதுவும் நடவாதது போல் முகத்தை வைத்துக்கொண்டு, சார் இன்று ரோமிலிருந்து வந்திருக்கும் இத்தாலியன் டெலிகேட்ஸ் உடன் நமக்கு லஞ்ச் மீட்டிங் உள்ளது  சார்  என்று கூறிவிட்டு அர்த்தம் பொதிந்த  பார்வையுடன் விஹானாவை பார்த்தாள்.

              அவளோ சோபாவில் சாய்ந்த படி சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு கையிலிருக்கும் நோட்ஸ் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

                 ஏனென்றால் அவள் பசிக்கிறது என்று ஒரு மணி நேரமாக கூறிக்கொண்டிருந்தாள் இவனோ அந்த material ளில் இருக்கும் சாப்டர் ஐ முடித்தால் தான் சாப்பிட கூட்டிசெல்வேன் என்று கூறிருந்தான்.

             இவள் இவ்வாறு கூறியதும் அவள் உடனே எழுந்து வெளியே செல்ல முற்பட்டாள். உடனே விவான், எங்கே செல்கிறாய் விஹானா?  என்று கேட்டான்.

               அதற்கு அவளோ நீங்கள் lunch ற்கு வெளியே செல்கிறீர்கள் அல்லவா ! அதான் நானும் அப்படியே கேன்டீன் சென்று சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று கிளம்பினேன்.

               நீ காண்டீனிற்கெல்லாம் போகவேண்டாம் நீயும் தான் lunch ற்கு வர போகிறாய்  என்று கூற, அதற்கு பிரியா உடனே சார் அங்கு reservation நீங்க சொன்னதால  4 மெம்பெர்ஸ் க்கு மட்டும்தான் சார் பண்ணிருக்கேன். நீங்க, நான், mr.Ferraro மற்றும்  அவருடைய  செகிரேட்டரி என்று கூறினாள்.

              அதற்கு விவானோ நான் உன்னிடம் 4 பேருக்கு புக் செய் என்றுதான் சொன்னேன். உனக்கு என்று நான் சொல்லவில்லை என்று கூறினான். அங்கு mr.Ferraro avarudaya மனைவியுடன் தான் வருகிறார் செகிரேட்டரி யோடு அல்ல என்று கூற, ப்ரியாவின் முகம் அப்படியே விழுந்துவிட்டது.

               அவள் இன்று அந்த ரெஸ்டூரண்ட்டிற்கு போவதாக ஆபீஸ் முழுக்க தம்பட்டம் அடித்திருந்தாள். அதனால் அங்கு எப்படியாவது சென்று விட திட்டம் தீட்டி அவன் எடுத்து செல்ல விருந்த பைலை மாற்றிவைத்துவிட்டாள். அவனும் விஹானாவை அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்ததால் பைலை ஐ கவனிக்கவில்லை. அவன் பிசினஸ் என்று வந்துவிட்டால் இப்படி careless ஆக இருக்கவே மாட்டான். ஆனால் இன்று விஹானாவினால் இப்படி மாறிவிட்டான்.

                  அவர்கள் அங்கு சென்றதும் அவர்களுக்கு முன்னாள் அந்த இத்தாலியன் businessman  வந்திருந்தார். அவருடன் அவரின் மனைவி மட்டுமல்லால் அவருடைய மகனும் வந்திருக்க, விவான் கேள்விக்குறியோடு பார்க்க அதற்கு அவர் திடிரென்று என்மகனும் வர விருப்பப்பட்டான் அது மட்டுமல்லாமல் இந்த கம்பனியின்  லீகல் பார்ட்னர் என்பதால் நான் அழைத்துவந்தேன். நான் ஏற்கெனவே மேலும் இருவருக்காக reserve செய்துவிட்டேன் என்று கூறினார்.

            விவானுக்கு அவர் அவருடைய மகனை அழைத்து வந்ததில் பிரச்சனை இல்லை அவருடைய மகன் handsome ஆக இருந்ததும் அவன்  விஹானாவை பார்ப்பதும்  தான் அவனுக்கு பிரச்சனை விஹானாவும் அவனை சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்ததால் அவனால் எதுவும்செய்ய முடியாமல் கைமுஷ்டிகளை இருக்கி கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான்.

             அவர்களிடம் இவன் ciao(hi, hello) என்று கூறி கைகுலுக்க அதே நேரம் அவர்கள் ஹாய் என்று கைகுலுக்கினர்.

       Mr.Ferraro son





 
              அவர்கள் அவனிடம் விஹானாவை காட்டி யாரென்று கேட்க  அவன் அவளை girlfriend என்று சொல்ல ஆசைப்பட்டான். அது அவளுக்கு புரியக்கூடாது என்று நினைத்ததால் அவர்கள் பாஷையில்  mia ragazza என்று கூறினான்.

        இவன் கூறியதை Mr.Ferraro வும் அவரின் மனைவியும் நம்பினார்கள் ஆனால் அவருடைய மகனோ இவன் சொல்வதை சந்தேகமாக பார்த்தான்.

        பின்னர் அனைவரும் உள்ளே சென்றனர். அவனே அந்த ப்ராஜெக்ட் பைல்களை எடுத்துக்கொண்டு செல்லும் போதுதான் கவனித்தான் பைலை மாற்றியெடுத்துவந்ததை சற்றும் தாமதிக்காமல் பிரியா விற்கு போன் செய்து அந்த பைலை எடுத்துவரும்படி கூறினான்.

         பிரியா விற்கு ஒரே சந்தோசம் ஏனென்றால் அவள் எதிர்பார்த்தும் அதைத்தானே உடனே கிளம்பினாள்.

         இவன் பிரியாவிற்கு கால் செய்துவிட்டு உள்ளே போவதற்குள் அவர்கள் அங்கு reserve செய்ய பட்டிருந்த டேபிளில் அமர்ந்திருந்தனர்.அவர்கள் அமர்ந்திருந்த ஆர்டர் முதலில்  Vihaanaa, அவளின் இடப்புறமாய் Mr.Ferraro வின் மகன் Alessandro, mrs.Ferraro, mr.ferraro இவன் வேறு வழி இல்லாமல் விஹானாவின் வலப்புறம் சென்று அமர்ந்தான். அவர்களிடம் பைலை பற்றி சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டான். அவர்களும் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றுகூற இவன் ரிலாக்ஸானான்.

            இவர்களும் அதற்குள் order செய்ய விஹானாவிற்கு சிம்பிளாய் sphagetti ஐ ஆர்டர் செய்தான். அதற்குள் ப்ரியாவும் வந்துவிட அவளும் உடனே சென்று விவானின் பக்கத்தில் அமர்ந்துகொண்டாள்.

         அவன் பிசினஸ் டீல் பற்றி Mr.Ferraro வோடு பேசிக்கொண்டிருக்க, அவர்கள் ஆர்டர் செய்த food உம் வந்துவிட மற்றவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர்.

            Alessandro விஹானாவிற்கு அவர்களின் உணவுமுறைகள் பற்றியும் அவர்கள் கலாச்சாரம் பற்றியெல்லாம் பொதுப்படையாக கூறிக்கொண்டிருந்தான்.இவர்கள் பேசுவது அவர்களுக்கு இடைஞ்சலாக கூடாது என்பதற்காக மெதுவாக ஹஸ்கி வாய்ஸ்சில் அவளது காதில்  கூறிக்கொண்டிருந்தான். அதனை பார்பவர்களுக்கு அவர்கள் இருவரும் காதலர்கள் போலவும் இருப்பதாய் வேறு யாரும் சொல்லவிலை விவான் மனதில் தான் அவ்வாறு நினைத்தான்.

        அவ்வாறு நினைத்து கொண்டே Mr.Ferraro விற்கு தெரியாமல் alessandro வை முறைத்தான்.Alessandro வும் அவனை வெறுப்பேற்றவென்றே அவளுடன் இன்னும் கதைபேசலானான். ஆனால் அவனுக்கு உண்மையில் தவறான எண்ணமெல்லாம் இல்லை உண்மையில் அவளை பார்த்ததுமே அவனுக்கு ஒரு தங்கை உணர்வுதான் ஏற்பட்டது.

           அவனுக்கு அதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. ஆனால் அவனுக்கு விவானை சுத்தமாக பிடிக்கவில்லை. சிறிது நேரத்தில் lunch முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு விஹானாவை அழைத்து கொண்டு நேரே வீட்டிற்கு சென்றான். அவன் அவளை வீட்டில் விட்டுவிட்டு அவனுடைய ஜிம்மிற்கு சென்று punching  bag ஐ அவன் கோபம் தணியும் வரை குத்திக்கிழித்தான். கடைசியில் அவனுக்கு உரைத்தது என்னவென்றால் அவன் அவளை காதலிக்கிறான் என்பதே.

             அவனும் யோசித்து பார்த்தான். விஹானாவை மறைத்து வைப்பதால் மட்டும் தீக்ஷித்தை பழிவாங்கிவிட முடியாது. விஹானாவை நாமே திருமணம் செய்துகொண்டால் தன் வாழ்க்கையும் நன்றாக இருக்கும் தீக்ஷித்தை பழிவாங்கியது போலவும் ஆகும் என்று யோசித்து இறுதியாக விஹானாவை திருமணம் செய்துகொள்வதென முடிவெடுத்தான்.

             அவளிடம் இப்போதைக்கு எதுவும் சொல்லவேண்டாம் இன்னும் சற்று நாள் பொறுத்து சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்தான். அவளை மறுநாள் கொண்டு போய் காலெஜில் விட இவனே சென்றான் அவளை அனுப்ப மனம் இல்லையென்றாலும் அவனுக்கு ஊருக்கு செல்லவேண்டி இருப்பதால் அவள் காலேஜில் இருப்பதே நல்லது என்று கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தான்.

                எக்ஸாம் முடிந்து மூன்று நாட்கள் விடுமுறையும் விட்டார்கள். அம்முறை ஸ்போர்ட்ஸ்டே இருப்பதால் ஸ்போர்ட்ஸில் இருப்பவர்களை வீட்டிற்கு போகவேண்டாம் practice இருக்கிறது என்று கூறிவிட்டனர்.

              ஒருவர் இரண்டு கேம் இல் இருக்கவேண்டும் அது என்ன கேம் என்பதை ஸ்டுடென்ட்ஸ் அவர்களாகவே முடிவு செய்து கொள்ளலாம்.ஒரு மாத practice க்கு  பின்னர் selection வைத்து players ஐ செலக்ட் செய்வார்கள். விஹானா பாஸ்கெட் பாலிலும், shuttle ளிலும் தன் பெயரை கொடுத்திருந்தாள்.

            ஒரு மாதத்தில் இரண்டு game இலும் நடந்த selection மேட்சில்  விஹானா செலக்ட் ஆனாள். அதன் பிறகு செலக்ட் ஆன மாணவிகளை டீம் ஆக பிரித்து கோச்சிங் கொடுப்பார்கள். அதற்காக வெளியிலிருந்து கோச் ஐ வரவழைப்பர். அப்படி வந்த பேட்மிட்டன் கோச் ஒருவருக்கு விஹானா வின் மேல் ஒரு கண் இருந்தது. Practice என்ற பெயரில் அவளிடம் மைஸ்பேகவே செய்து கொண்டிருந்தான். அப்படி ஒரு நாள் நடக்கையில் விஹானா அவனை தள்ளிவிட முயற்சிசெய்தாள். ஆனால் அவளால் முடியவில்லை சட்டென்று coach ஐ யாரோ அடித்து தள்ளினார்கள். யாரென்று திரும்பி பார்த்த விஹானா அங்கு கொலைவெறியுடன் நின்றுகொண்டிருந்தவனை பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.

                யாராக இருக்கும்?????????

Comments