3. என் சுவாசத்தின் மறுஜென்மம்

அந்த பள்ளியில் விஹானா முதலில் யாருடனும் பழக முயற்சிக்கவே இல்லை.விஹானாவின் தந்தைக்கு அவளின் எண்ணவோட்டம் பிடிபடவில்லை.அப்படியே நாட்கள் செல்ல செல்ல அஞ்சலி என்ற மாணவி விஹானாவிடம் நட்பு பாராட்டினாள்.விஹானாவோ அவளிடம் முதலில் பேசவே தயங்கினாள். பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவளும் அவளுடன் சகஜமாக பழக ஆரம்பித்தாள்.அவளுடன் பழகியது போல மற்ற மாணவிகளிடம் இவளால் நெருங்கி பழக முடியவில்லை. ஆனால் அவர்களாக எதாவது கேட்டால் அதற்கு ஒற்றை வரியில் பதில் கூற ஆரம்பித்தாள்.

பின்னர் ஒரு நாள் விஹானாவின் வீட்டிற்கு அஞ்சலி விஹானாவுடன் சென்றாள். அங்கோ அவளின் தந்தைக்கு அவள் அந்த புதிய அறிமுக படுத்தியதோடு, அவளுடன் அவ்வளவு இயல்பாக பேசுகிறாளே என்று அவருக்கு அவ்வளவு ஆச்சரியம்.

விஹானாவிடம் அஞ்சலிக்கு ஸ்னாக்ஸ் எடுத்து வர கூறி அவளை சமையலறைக்கு அனுப்பிவிட்டு அஞ்சலியிடம், "அவள் யாருடனும் பேசவே மாட்டாள்.உன்னுடன் எப்படிம்மா அவவ்ளவு நெருங்கி பழகுகிறாள்" என்று கேட்டார்.

அங்கிள் முதலில் அவள் யாருடனும் பழகாதது எனக்கு வித்தியாசமாக இருந்தது. பின்னர் அவளின் தயக்கம் கூச்சம் பயம் போன்றவைகளினால் அவள் இப்படி இருக்கிறாள் என்று தெரிந்தது.அவளிடம் பழகிய பின்புதான் ஒரு விஷயம் தெரிந்தது. அவளிடம் ஒரு குணம், யாரேனும் அதட்டிமிரட்டி அல்லது கெஞ்சியோ ஏதாவது கூறினால் அதை அப்படியே கேட்கிறாள். சாதாரணமாக கூறினால் அதை அவள் முடிந்தால் மட்டுமே செய்கிறாள். 
அதனால் அவளிடம் அவள் பாணியில் பேசிப்பேசி கொஞ்சம் மாற்றினேன் என்றாள்.

விஹானாவின் தந்தையும் அவர்களிருவரும் ஒரே வயதினர் என்பதால் புரிந்துகொண்டதாக நினைத்து விஹானாவிற்கு சகோதரன் சகோதரி யாரேனும் இருந்திருந்தால் அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நினைத்தார். ஏனெனில் அவர் விஹானா பிறந்ததிலிருந்தே அவளை அதட்டியதே இல்லை. முதல்முதலாக அவர் பிடிவாதம் பிடித்தது விஹானாவின் பள்ளி மாற்றத்திற்கே. விஹானாவும் அதனால் தான் ஒத்துக்கொண்டாள் என்பது இப்போதுதான் புரிந்தது.

(நாயகனும் நாயகியும் நேருக்கு நேர் சந்திக்கும் நேரம்,
அதுதான் அண்ணலும் நோக்கினால் அவளும் நோக்கினாள் காட்சி)
விஹானா படிக்கும் பள்ளியில் ஆண்டு விழா வந்தது. எப்பொழுதும் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் அழைப்பார்கள். இம்முறை கம்பெனி ceo யாரையாவது அழைக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆதலால் அவர்கள் தீக்ஷித்தின் நண்பனை சிறப்பு விருந்தினராக அழைக்க தொடர்பு கொண்டனர். 
அப்பொழுதுதான் அவன் தீக்ஷித்தை பற்றி கூறி அவனது பின்புலம், திறமை, தொழில்வளர்ச்சி என அனைத்தையும் கூறி தனக்கு பதிலாக அவன் வருவான் என்றும் அவன் ஊக்கப்படுத்தி பேசுவதில் வல்லவன் என்றும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் பேசுவான் என்று, அவன் வருவான் என்றும் கூறிவிட்டான்.
இவர்களும் சரி என்று கூறி தீக்ஷித்தை அணுகினர். முதலில் மறுத்தவன் பின்பு ஒப்புக்கொண்டான். 
இங்கே அஞ்சலியின் வற்புறுத்தலின் பேரில் நடனத்திற்கு பெயர்கொடுத்தவள் ஆண்டவனின் மேல் பாரத்தை போட்டுவிட்டு பயிற்சியை தொடங்கினாள். 
அவளது நடனம் பற்றி கூறவேண்டுமென்றால் இவளுக்கு அதில் சிற்பி வேடம். அதன் concept என்னவென்றால் இவள் இந்தியநாட்டில் உள்ள நடனங்களை ஆடும் கலைஞர்களின் சிற்பத்தை வடிக்கும் சிற்பி. அவன் யாரிடமும் பேச மாட்டான். அவன் பேசுவதெல்லாம் அவன் வடிக்கும் சிற்பங்களிடம் மட்டுமே. ஒரு நாள் இரவு கனவில் அந்த சிற்பங்களுக்கு உயிர் வந்து இவனுடன் ஆடுவது தான் அந்த concept. 
பார்க்க எளிமையாகத்தான் இருக்கும். ஆனால் மிகவும் கடினம். ஏனென்றால் சிற்பங்களாக இருப்பவர்கள் அவரவர் நாட்டியத்தை ஆடுவர். ஆனால் சிற்பி பரதநாட்டியம் ஆடுபவருடன் பரதநாட்டியம் ஆட வேண்டும். கத்தக்களி ஆடுபவருடன் கதக்களி ஆட வேண்டும். 
அவள் பாரதநாட்டியமும் குச்சிபுடியும் நன்கு ஆடினாள். ஏனெனில் அவள் பரதம் கற்றுத்தேர்ந்தவள். குச்சிப்புடி அதிலிருந்து கொஞ்சம் வேறுபடும். அவ்வளவே, எல்லாரும் அவளுக்கு வடஇந்திய நடனங்கள் தான் கடினமாக இருக்கும் என நினைத்தனர். ஆனால் அவளுக்கு கதகளி தான் கொஞ்சம் கடினமாக இருந்தது வடஇந்திய நடனங்கள் அவளுக்கு இயல்பாக வந்தது. ஏனென்று நமக்கு தெரியுமே. இது தெரியாத அனைவரும் ஆச்சரியப்பட்டனர். 
விழாநாளும் வந்தது. அவள் நடனம் கடைசியில் என்பதால் மேடைக்கு அருகில் உதவிக்கு நின்றுகொண்டிருந்த அஞ்சலிக்கு பக்கத்தில் நின்றாள். ஏனென்றால் அஞ்சலி தான் ஸ்கூல் கல்ச்சுரல் செகிரேட்டரி. 
விழா நம் கதாநாயகன் வரவும் தொடங்க ஆரம்பித்தது. கதாநாயகன் பிளாக் ஜீனும் வைட் ஷர்ட்டும் அணிந்து அதற்கு மேலே ஒரு ப்ளேசரும் (blazer) அணிந்து இருந்தான். அவன் மேடையில் பேசும்பொழுது நம் கதாநாயகி சிறுவசிறுமியர்களுக்கு மேக்கப் போட சென்றுவிட்டாள். அதனால் நம் கதாநாயகனால் பார்க்க முடியவில்லை என்று எண்ணாதீர்கள் அவள் அங்கே நின்றிருந்தாலும் பார்த்திருக்கமாட்டான். 
ஏனெனில் அவன்தான் பெண்கள் இருக்கும் பக்கம் திரும்ப மாட்டானே. நம் கதாநாயகி இருக்கிறாள் என்று தெரிந்து இருந்தால் நிச்சயமாக பார்த்திருப்பான். 
நம் கதாநாயகி அவள் நடனத்திற்கு காவி (saffron) நிறத்தில் குர்த்தாவும் வெள்ளை நிறத்தில் பாட்டியாலா பேண்டும் அணிந்திருந்தாள்.பார்ப்பதற்கு பஞ்சகச்சம் (அதாங்க pant போலவே இருக்கும் வேஷ்டி ) போல இருப்பதால் அதை அணிந்துஇருந்தாள். தலைமுடியை கொண்டை போட்டு அது தெரியாத வண்ணம் தலைப்பாகை கட்டி இருந்தாள். 
பார்ப்பதற்கு சின்ன பையன் போலவே இருந்தாள். அவளது நடனம் முடிந்ததும் கரகோஷம் விண்ணை பிளந்தது. நடந்த நிகழ்வுகளிலேயே அவளது நடனம் தான் உச்சக்கட்டம். பார்ப்பவர் அனைவரும் பிரம்மிக்கும் வண்ணம் இருந்தது. விழா நிறைவில் மேடையில் பேசிய தீக்ஷித் விஹானாவின் நடனத்தை பாராட்டினான். ஆடியது பையன் என்று நினைத்து மேடைக்கு பாராட்ட வரச்சொன்னான். பெண் என்றால் தான் பாராட்ட கூட மாட்டானே. ஒரு பையனை எதிர்பார்த்த அவனுக்கு அவனுடைய அபூர்வா தயங்கித்தயங்கி வந்தது தெரிந்தது. மெய் மறந்து தன்னவளை பார்த்துக்கொண்டிருந்தான். அவளோ பயத்தில் சின்னதாக புன்னகையை உதிர்த்து நன்றி கூறிவிட்டு மேடையைவிட்டு கீழிறங்கி ஓடிவிட்டாள். அவனோ அதிர்ச்சியில் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்தான். 
இதன் பிறகுதான் அவர்கள் வாழ்க்கையில் நிறைய திருப்பங்கள் காத்துக்கொண்டிருக்கிறது. 


Comments