21. என் சுவாசத்தின் மறுஜென்மம்

அழுது கொண்டிருந்த விஹானாவை பார்த்ததும், எதிரில் வந்த பிரின்சிபாலை கூட மதியாமல் நேரே விஹானா விடம் சென்றான்.

           அவளை பார்த்து எதற்கும் கவலைப்படாதே விஹானா நான்தான் வந்துவிட்டேனே எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினான்.

              அவன் அவ்வாறு கூறியதும், மிகவும் கோபமடைந்த விஹானா அவனை கலங்கிய கண்களுடன் பார்த்து, இவை அனைத்திற்கும் நீங்கள் தானே காரணம் என்று அவனை குற்றஞ்சாட்டி மீண்டும் கண்ணீர் வடிக்க துவங்கினாள்.

              அவனும் அவளை சமாதானப்படுத்த என்னென்னவோ கூறி பார்த்தான். அவள் கண்களில் கண்ணீருடன் எல்லோரும் என்னை திருடியாக பார்க்கிறார்கள் என்றால் அதற்கு
முழுமுதர் காரணம் நீங்கள்தான்.அன்று உங்கள் ஆபிசில் நடந்த நிகழ்வுதான் இவை அனைத்திற்கும் காரணம்.

           அன்று நடந்த நிகழ்வை நீங்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம்.ஆனால் என்னால் மறக்கவும் முடியவில்லை உங்களை மன்னிக்கவும் முடியவில்லை. அந்த ஒரு நாளின் நிகழ்வு, என்னை எங்கே நிறுத்தி இருக்கிறது? என்று பாருங்கள் என்று கேட்டாள்.

              விஹானா அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இது இது ஏதோ மிஸ்- அண்டர்ஸ்டாண்டிங்கில் கூட நடந்திருக்கலாம் அல்லது உன் மீது வீண்பழி போடுவதற்கென்றே செய்து யாராவது கூட செய்திருக்கலாம் அதுவும் இல்லையென்றால் அவர்கள் எடுத்து விட்டு  தான் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கூட அந்தப் பழியை உன்மீது  போட்டு இருக்கலாம் அல்லவா? என்று கேட்டான்.

                 அதற்கு விஹானாவோ, இங்கு நடந்தது எதுவும் உங்களுக்கு தெரியாது, எதுவும் தெரியாமல் நீங்கள் பேசாதீர்கள்! என்னை அவர்கள் திருடி என்று உறுதி செய்ததே, அன்று ஆபீஸில் நடந்த விஷயத்தை வைத்துதான்  என்று நடந்தவை எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் விவானிடம் கூறி முடித்தாள்.

                    விஹானா சொல்வதைக் கேட்ட அவனுக்கு  எல்லாம் புரிந்தது. யாரோ! வேண்டுமென்றே இவள் மீது திருட்டுப் பழியை சுமத்தி இருக்கிறார்கள். அது கூட தெரியாமல் நடந்த எல்லாவற்றுக்கும் என்னையே குற்றஞ்சாட்டுகிறாள்.

                       விஹானா நீ முதலில் அழுவதை நிறுத்து! நீ திருடவில்லை என்று நான் பிரின்ஸ்பாலிடமும் அந்த பேராசிரியரிடமும்  இடமும் கூறிவிடுகிறேன். இனிமேல் அவர்கள் உன்னை திருடி என்று கூற மாட்டார்கள்  என்று கூறினான்.

                   முதலில் நான் கூறுவதை நீங்கள் கேளுங்கள் இதுபோல தான் அன்று போலீஸ் ஸ்டேஷனில் நான் திருடி அல்ல என்று கூறி அழைத்து வந்தீர்கள்! ஆனால் என்ன நடந்தது? அன்று நடந்த விஷயத்தை வைத்து எல்லாரும் என்னை திருடி என்று முடிவு செய்து விட்டார்களே! நான் அவ்வளவு தூரம் எடுத்துக்கூறியும் யாரும் என்னை நம்பவில்லை. இவ்வளவு ஏன் நான் அன்று நடந்தவற்றை கூற முயற்சித்தேன், ஆனால் அவர்கள் நான் சொல்வதை காது கொடுத்துக் கூட கேட்கவில்லை.

                இதன்பிறகு ஹாஸ்டலில் வேறு ஏதாவது தொலைந்தாலும் என்னையை தான் திருடி என்று திரும்பவும் கூறுவார்கள் என்று கூறிவிட்டு திரும்பவும் அழத்தொடங்கினாள் .

                அவனோ இன்று மாலையே  ஹாஸ்டலில் உள்ள  அனைவரின் மனதிலும் உன்னைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை நான் மாற்றிக் காட்டுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து மாலை வரை சற்று பொறுமையாக இரு! என்று கூறினான்.

               அவள் மீண்டும் ஏதோ பேசத் துவங்க, அதற்குள் பிரின்ஸ்பல்,சாரி! சார் இன்று ஏதோ தவறு நடந்து விட்டது. இனி இதுபோல் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் கூறிக் கொண்டிருக்க அவர் பேசுவதை  நிறுத்துமாறு  கையால் சைகை காட்டினான்.

                  அவரைப் பார்த்து அந்த டெம்பரரி வார்டன் யார்? அவரை நான் உடனே பார்க்க வேண்டும் என்று கேட்டான்.

                 அவன் அவ்வாறு கேட்டவுடன் அந்த அறைக்கு வெளியே நின்ற டெம்ப்ரவரி  வார்டனை அழைத்து அவனிடம் காட்டினார்.

                  விவான் அவரைப் பார்த்து, விஹானாவின் பையிலிருந்து செயினை எடுத்தால் அவள்தான்  திருடினால் என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்! என்று கேட்டான். அவரோ ஏற்கனவே இங்கு நடந்தவற்றை எல்லாம் பார்த்து வெடவெடுத்து போயிருந்தார்.

                 அவர் அவருக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை பயத்தில் நா உழன்றது. அவருக்கு விவானை யார் என்றே தெரியவில்லை. ஆனால் மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பவன் என்று மட்டும் அவருக்கு தெரிந்தது. அவருக்கு விஷாகா கூறியதை  மனதில் வைத்து தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டோமோ என்று நினைத்தார்.

                 அவரிடம் ஒழுங்கான பதில் இல்லாததால் பெருமூச்சு விட்டவாறே, இன்று  மாலை ஹாஸ்டல்  ஆடிட்டோரியத்தில்   அனைவரும் கூடி இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

             பிரின்சிபாலிடம் கூறிவிட்டு விஹானாவை மதியம் சாப்பிடுவதற்கு வெளியே அழைத்துச் சென்றான். அவளைக் கூட்டிக்கொண்டு வெளியே வந்தவன் போனை எடுத்து யாருக்கோகால் செய்து சில கட்டளைகளை இட்டுவிட்டு விஹானாவை பார்த்தான். அவளோ கண்மூடி இருக்கையில் சாய்ந்து இருந்தாள். அவளை தொந்தரவு செய்யாது காரை எடுத்துக் கொண்டு ஒரு நல்ல ரெஸ்டாரன்ட் இருக்குமிடத்திற்கு சென்றான்.

                  அதற்குள் இங்கே விஷாகா தன் தன்னுடைய பைனல் இயர் இன்டர்ன்ஷிப்பிற்காக 90 நாட்கள் விவானின் ஆபீஸில் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி சேர்ந்திருந்தாள்.

                 எனவே அதை உறுதி செய்யும் பொருட்டு அவனின் ஆபீஸிலிருந்து அவளுக்கு கால் செய்து, அவளின் இன்டர்ன்ஷிப் பெர்மிட்டேட் லெட்டரை ஆபீஸில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு ரிசப்ஷனிஸ்ட் கூறினாள்.

                 இதனைக் கேட்ட விஷாகா மிகவும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். அவளுக்கு டெம்பரரி வார்டன் விஹானாவை அழைத்துச் சென்றதிலிருந்து அங்கு பிரின்ஸ்பல் ரூமில்  என்ன நடந்தது? என்று அவளுக்கு தெரியாது.

                  இந்த மகிழ்ச்சியான செய்தியை தன்னுடைய தோழியான இந்துவிற்கு பகிர்ந்து விட்டு ஸ்டாஃப் ரூமிற்கு சென்றாள். அவளுடைய hod விடம் கூறிவிட்டு அனுமதி பெற்றுக் கொண்டு விவானின் ஆஃபீசிற்கு சென்றாள்.

               அவள் சென்ற பின்னரே இந்துவிற்கு பிரின்ஸ்பல் ரூமில் நடந்த விஷயம் அரைகுறையாக தெரியவந்தது. இவ்விஷயத்தை உடனே கூற விசாவிற்கு செல்போனில் அழைத்தாள். ஆபீஸில் செல்போனை அணைத்து வைக்க கூறியதால் விசாகா போனை அணைத்து வைத்திருந்தாள்.எனவே இந்துவிற்கு ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று வந்தது.

                 செய்வதறியாது தவித்த இந்து என்னவோ பெரியதாக நடக்கப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்தவள் தாங்கள் கரெக்ட் செய்த மாணவியான  விஹானாவின் வகுப்பில் படிக்கும் மாணவியை அழைத்து, "நீ மாட்டிக் கொண்டால் எங்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாது" என்று கூறினாள்.

                  அவளோ, "என்னக்கா இப்படி கூறிவிட்டீர்கள்,எதுவும் பிரச்சனை வராது என்று தானே என்னிடம் கூறினீர்கள்" என்று கேட்டாள். இந்துவோ, " இங்கே பாரு நீ எங்களை பற்றிக் கூறினாலும் நாங்கள் ஒன்றும் மாட்டிக் கொள்ள போவதில்லை, ஏனெனில் நாங்கள் அந்த செயினை உன்னிடம் கொடுத்ததற்கான ஆதாரம் இல்லை.எனவே நாங்கள் கூறியது படி நீ செய்தால் உனக்கு நாங்கள் உதவி புரிவோம் இல்லை என்றால் நீ அவர்களிடம் மாட்டிக் கொண்டு, எங்களிடமும் எந்த உதவியும் எதிர்பார்க்க முடியாது என்று கூறினாள்.
  
               நாங்கள் கூறிய படி கேட்டால்,நீ படித்து முடித்தவுடன் விசாகாவின் கம்பெனியில் வேலை நிச்சயம் என்று கூறி அவளை இந்து மிரட்டினாள். அவளும் வேறு வழியில்லாது இந்து கூறுவதற்கு எல்லாம் தலையை ஆட்டி ஒப்புக்கொண்டாள்.

             தன் போட்டிருந்த கோட்டை கழட்டி காரிலேயே வைத்து விட்டு ஸ்லீவ்சை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டான். கூலர்சை மாட்டிக்கொண்டு ஒரு கேப் பையும் முகத்தை பாதி முடியவாரு அணிந்துகொண்டு காரிலிருந்து இறங்கினான்.

              பின்னர் இடது பக்கக் கதவைத் திறந்து விஹானா இறங்குவதற்கு உதவி புரிந்தான். பின்னர் இருவரும் ரெஸ்டாரன்டிற்கு உள்ளே சென்றனர். உள்ளே நுழைந்ததும் விஹானா விவானை ஆச்சரியமாக பார்த்தாள். ஏனெனில் அவன் வழக்கமாக அழைத்துச் செல்லும் பைவ் ஸ்டார் ரெஸ்டாரன்ட் போல் இல்லை. அது மிகவும் சாதாரணமான ரெஸ்டாரென்ட். அவன் இம்மாதிரியான இடங்களுக்கு தன்னை அழைத்துச் செல்லமாட்டான் என்று அவனைப் பார்த்தாள். அவனும் அவள் எதற்காக பார்க்கிறாள் என்று புரிந்தும் எதுவும் பேசாமல் ஒரு டேபிளில் சென்று அமர்ந்தான். நிறைய பேர் இருக்கும் இடத்திற்கு வந்தார் காணமாட்டார் தான் கூறுவதைக் கேட்பாள் என்று இந்த ரெஸ்டாரென்டிற்கு அவளை அழைத்து வந்தான்.

              இருவரும் தங்களுக்கான உணவினை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர். விவானே பேசட்டும் என்று விஹானா அமைதியாக இருந்தாள்.விவானிற்கும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான்.

                இருவரும் ஆர்டர் செய்திருந்த உணவு வந்தது. இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது விவான் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான். விஹானா, இன்று ஹாஸ்டலில் அனைவரின் முன்பும் நீ திருடவில்லை என்று நான் நிரூபித்துக் காட்டுகிறேன் என்று கூறினான். என்ன செய்யப் போகிறேன் என்று மட்டும் கேட்காதே அதை நீ நேரில் பார்த்துக் கொள் என்று கூறினான். அவளுக்கும் இருந்த மனநிலையில் அவனிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

                அந்நேரம் விவானுக்கு ஒரு போன் வந்தது. சற்று தூரம் தள்ளி நின்று பேசி விட்டு வந்தவன் விஹானா,உன்னை டிரைவர் ட்ராப் செய்து விடுவார்.எனக்கு ஒரு முக்கியமான வேலை உள்ளது. நான் இப்பொழுது சென்று விட்டு ஈவ்னிங்  உன்னை காலேஜில் சந்திக்கிறேன் என்று கூறினான்.

                 அவளும் அவனிடம் சரி என்று கூறிவிட்டு கை கழுவச் சென்றாள். பின்னர் அவன் டிரைவரை அழைத்து தன் கார் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு விஹானாவை பத்திரமாக காலேஜில் ட்ராப் செய்து விட்டு வருமாறு கூறினான்.

                 விஹானா அந்த காரில் ஏறி சென்றவுடன், வேறொரு காரில் ஏறி இவனும் புறப்பட்டான்.

                விஹானா சென்று கொண்டிருந்த காருக்கு முன்னால் சற்று தொலைவில் ஒரு ஆக்சிடென்ட். ஆதலால் இவர்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த வண்டி எல்லாம் அப்படியே நிற்க இவர்களின் காரும் நடுரோட்டில் நின்றது. இவர்கள் கார் நின்றுகொண்டிருந்த இடமோ ஒரு நால் ரோடு சாலை.

               விஹானா சென்று கொண்டிருந்த  காரின் டிரைவர், காரை விட்டு கீழே இறங்கி எதனால் டிராபிக் என்று பார்க்கச் சென்றார். இவர்கள் நின்றுகொண்டிருந்த சாலையின் குறுக்கே செங்குத்தாக ஒரு சாலை சென்று கொண்டிருந்தது. அச்சாலையில் வண்டிகள் ஏதும் வரவில்லை. சற்று தொலைவில் மட்டும் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

              காற்று அடைத்தது போல் இருக்க விஹானா சற்று நேரம் ஜன்னலை திறந்து வைக்கலாம் என்று காரின் ஜன்னலை திறந்தாள். அந்த செங்குத்து சாலையின் வழியே வந்து கொண்டிருந்த காரில் தீக்ஷித் வந்து கொண்டிருந்தான். இவர் ஜன்னலை திறந்த நேரம் தீக்ஷித் இவளை பார்த்துவிட்டான். ஒரு நிமிடம் காரை நிறுத்திவிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ தோன்ற, சட்டென்று  வண்டியின் ஆக்சிலேட்டரை அழுத்தியவன் நேரே விஹானாவின் காரினை மோதப் போவது போல் சென்றான்.

               ஆரம்பத்தில் கவனிக்காத விஹானா ஏதோ ஒரு கார் தன்னை நோக்கி வேகமாக வருவதை பார்த்தாள். எங்கே தன்னை இடித்து விடுமோ என்ற பயத்தில் காருக்குள்ளேயே கைகால்கள் வெடவெடக்க, தலையை குனிந்து கொண்டு கண்களை மூடி இரு கைகளால் காதுகளை பொத்திக் கொண்டாள். மிகவும் வேகமாக வந்த தீக்ஷித் அவளின் காரின் அருகே வந்ததும் ஒரு யூ டர்ன் அடித்து சென்று நிறுத்தினான்.

                அவள் பயத்தில் கண்களை மூடி, காதுகளை மூடிக் கொண்டு கை கால்கள் நடுங்க அமர்ந்திருந்தவளை கண்டு புன்னகை பூத்தான். இவனின் காரின் கருப்பு நிற கண்ணாடி ஆதலால் உள்ளே இருக்கும் இவனை விஹானாவால் பார்க்க முடியாது.

                 தீக்ஷித் புன்னகைத்தவாறே மெய்மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் விஹானாவின் கார் டிரைவர் பாதை கிளியர் ஆகவும் காரை எடுத்தார்.

                வண்டி நகர்வதை உணர்ந்த விஹானா கண்களை திறந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். பின்னர் அந்த கார் நல்ல வேளை நம்மை இடிக்கவில்லை என்று நினைத்த பெருமூச்சு ஒன்றை எடுத்து விட்டு கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தாள்.

                  தீக்ஷித்தும் இவர்களின் கார் சென்றவுடன் அவனும் கிளம்பிவிட்டான்.

               விவான் விஹானாவை குற்றமற்றவள் என்று நிரூபிக்க சதீஷிடம் சொல்லி சிசிடிவி புடேஜ் பார்க்க  சொல்லி இருந்தான். கூடவே இன்னும் சில பல கட்டளைகளையும் பிறப்பித்திருந்தான். அவர் நினைத்ததுபோலவே சிசிடிவி புட்டேஜில் அவர்களுக்கு தேவையான ஆதாரம் இருந்தது.

            பின்னர் சில கோப்புகளில் கையெழுத்து இடுவதற்காக ஆபிஸிற்கு  சென்றான். ஆபீஸுக்கு சென்றவன் எவரையும் பார்க்காமல்  விறுவிறுவென நேரே தன்னுடைய அறைக்குச் சென்றான்.

          அதேநேரம் அங்கு விஷாகா அவனை பார்க்க வேண்டும் என்று ரிஷப்ஷனிஸ்ட்டிடம்  கேட்டதற்கு சார் வெளியே சென்றிருக்கிறார் என்று அவள் கூற கடுப்புடன் அமர்ந்திருந்தாள். 

             அந்நேரம் பார்த்து விவான் ஆபீஸ்சிற்குள்  நுழைவதை பார்த்த விஷாகாவிற்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை.

              இப்போது சென்று பார்க்கலாமா என்று அவள் ரிஷப்ஷனிஸ்ட்டிடம் கேட்டதற்கு அவள் மேடம்! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நான் சாரிடம் கேட்டு சொல்கிறேன் என்று கூறி சதீஷிடம் அனுமதி கேட்டாள்.

               சதீஷும் விஷாகா,சாரின் பிசினஸ் பார்ட்னரின் ரெகமெண்டேஷனில் வேலைக்கு சேர்ந்து இருப்பதை அறிந்து  அவளை உள்ளே அனுப்பச் சொன்னான்.

                மேடம்,சாரின் pa ரூமுக்கு செல்லுங்கள். அவர் விவான் சார் பிரியானதும் உங்களை உள்ளே அழைத்துச் செல்வார் என்று கூறினாள்.

                 இவர் நேரில் சதீஷின் அறைக்கு செல்லவும், அதேநேரம் சதீஷ் விவான் கேட்ட பைல்களை எடுத்துக்கொண்டு அவரின் அறைக்குள் செல்ல வெளியே வந்தான்.

                   மேடம், " உள்ளே வெயிட் பண்ணுங்க, நான் சாரிடம் அனுமதி கேட்டுவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு விவானின் அறைக்கு சென்றான். உள்ளே பைல்களை வைத்துவிட்டு விவானிடம் விஷாகாவிற்கு அனுமதி கேட்க, நாளை பார்க்கிறேன் சதீஸ் என்று கூறிவிட்டான்.

                சதீஷின் அழைப்பின் வெளியே சென்ற நேரம் அவளின் கண்களில் விவானின் அறைக்கு அருகில் உள்ள அறையில் இருக்கும் நேம் போர்டை பார்த்தாள். அதில் JMD மிஸ்.விஹானா மூர்த்தி என்று எழுதி இருந்தது. அதைப் பார்த்ததும் கோபத்துடன் இவளேல்லாம் JMD யா இவளுக்கு ஒரு அறையா என்று என்று கோபத்துடன் அந்த அறையை பார்க்க கதவைத் திறந்தாள். திறந்து பார்த்ததும் அந்த அறையின் செழுமையை பார்த்து அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டாள்.

               விஷாகா விடம் விஷயத்தை கூற வெளியே வந்த சதீஷ், விஹானா விற்கு ஏற்பாடு செய்து இருந்த அறையை திறந்து உள்ளே செல்வதைக் கண்டான்.

               மேடம் அங்கெல்லாம் போகக்கூடாது. அது எங்களின் JMD மேடமின் அறை. அனுமதி இல்லாமல் அங்கு செல்லக்கூடாது என்று கூறினான். அவள் கோபமாக அவனை விழித்து பார்க்கவும், சாருக்கு முக்கியமான வேலை உள்ளதால்  உங்களை நாளை பார்ப்பதாக கூறிவிட்டார் என்று கூறினான்.

               பின்னர் நாளை வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று விடுதிக்கு கிளம்பினாள். போகும் பொழுதே விஹானாவை நினைத்து, இந்நேரம் அவள் ஒருவழியாகி இருப்பாள் என்று நினைத்துக்கொண்டே சந்தோஷமாக விடுதிக்கு சென்றாள் .

                   பாவம் அங்கு நடப்பது எதுவும் அவளுக்கு தெரியவில்லை. அவள் விடுதிக்குள் நுழையவும் அவளது பக்கத்து அறையில் உள்ள பெண் அவளை பார்த்ததும் ஆடிட்டோரியத்திற்கு வர சொல்லிவிட்டு அவள் ஆடிட்டோரியம் நோக்கி  சென்றுவிட்டாள்.

                    இவளும் தனது அறையில் பைலையும் ஹாண்பேகையும் வைத்துவிட்டு  ஆடிட்டோரியம் நோக்கி சென்றாள்.
அங்கு அந்த டெம்பரரி வார்டன் மைக்கின் முன்னால் நின்று கொண்டு, எல்லார் முன்பும் நான் விஹானாவிடம் முதலில் மன்னிப்பு கோருகிறேன் என்று கூறினார். அதன்பிறகு இன்று காலையில் நடந்த டைமண்ட் செயின் விவாகரத்தை கூறினார். பின்னர் விஹானா அந்த செயினை எடுக்கவில்லை என்பதற்கான ஆதாரத்தை காட்டுகிறேன் என்று ப்ராஜெக்ட்ரில் சிசிடிவி காட்சிகளை ஒளிபரப்பினார்.அதில் செயின் ஐ வைத்த பெண்ணின் உருவம் மங்கலாக தெரிந்தது. அவள் உருவத்தை காட்டக்கூடாது என்று தான் விவான் அவ்வாறு எடிட் செய்து மாணவிகளிடம் காட்ட சொன்னான்.
    
                 அதில் கல்லூரிக்கு வரும்பொழுது விசாகாவின் தோழியின் கழுத்திலிருந்த டைமண் செயின் , விஹானா கிளாஸ் ரூமை விட்டு வெளியே வருவதற்கு முன்பே காணாமல் போயிருந்தது. அந்த செயின் காணாமல் போய் 3 மணிநேரம் கழித்துதான் விஹானா வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள். ஆதலால் இந்த செயினை விஹானா திருடவில்லை என்று கூறினார். வேறு யாரும் அதனை எடுத்து வைத்துக் கொண்டு மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் அவளின் பாக்கில்  போட்டுள்ளனர்.இது தெரியாமல் அவளை நான் திட்டி விட்டேன் என்னை மன்னித்துவிடு விஹானா என்று கூறிவிட்டு ஒதுங்கி நின்றார்.

                இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்தப் பேராசிரியர் திட்டி இருந்தாலும் இத்தனை பேர் முன்பு அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை,அவர் அப்படி கேட்கக்கூடிய ஆளும் இல்லை, திடீரென்று அவருக்கு என்ன ஆகி விட்டது என்று அவர்களுக்குள் குசுகுசுவென பேசிக் கொண்டிருந்தனர்.

                     இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஷாகாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. இது எவ்வாறு சாத்தியம் என்ன நடந்தது என்று மூளையை போட்டு கசக்கி பிழிந்து கொண்டு இருந்தாள்.

                 பின்னர் கூட்டத்தில் இந்துவை தேடிக்கொண்டிருந்தாள் அவளை கேட்டால் ஏதாவது விவரம் தெரியும் என்று அவளைத் தேடினாள். இப்பொழுது முன்னால் அமரக்கூடிய இந்துவும் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கடைசி ரோவில் அமர்ந்திருந்தாள். பின்னர் அவளை தேடிப்பிடித்து கடைசி ரோவிற்கு சென்று அவர்களிடம் விவரம் கேட்டாள்.

                இந்துவோ விஷாகாவை பார்த்ததும் கோபமாக, விஷாகா உனக்கு ஃபோன் பண்ணினால் ஸ்விட்ச் ஆஃப் என்று வருகிறது எவ்வளவு தடவை உனக்கு ட்ரை செய்தேன் தெரியுமா? என்று கோபமாக பொறிந்து கொண்டிருந்தாள்.

              இந்த விஷாகா ஆபீஸில் சுவிட்ச் ஆஃப் செய்ய சொன்னார்கள் என்று என்று செய்தேன். இங்கே என்னதான் நடக்கிறது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை? நான் ஒரு திட்டம் போட்டால் அது இங்கு வேறு மாதிரி போய்க்கொண்டிருக்கிறது என்ன நடந்தது என்று கேட்டாள்.

              விஷாகாவிடம் இந்து அவள் சென்றதும் என்னென்ன நடந்தது என்று முறையாக சொல்ல ஆரம்பித்தாள். எனினும் இந்துவுக்குமே சில விஷயம் பிடிபடவில்லை. எதோ ஸ்வீப்பர் அக்கா சொன்னதை வைத்து நிலைமையை சமாளித்தேன் என்று கூறினாள்.

                  இருவரும் சற்று நேரம் யோசித்து கோரசாக,ஒருவேளை விவானுக்கு தெரிந்திருக்குமோ? என்று இருவரும் ஒரே சமயத்தில் கேட்டார்கள்.

                  ஆடிட்டோரியத்தில் திடீரென சலசலப்பு அடங்கியது. என்னவென்று இந்த ஒன்றாகவும் ஸ்டேஜை நோக்கி பார்க்க, அங்கு விவான் தன்னுடைய செகிரேட்டரி மற்றும் கார்ட்சுடன் வந்தான்.

              வந்தவன் நேராக மைக்கை பிடித்து, ஹாய் கைஸ், திஸ் இஸ்  விவான் சோப்ரா MD of chopra group of companies and straight to the point,

                 விஹானா cbe chopra கான்ஸ்டருக்ஷன்ஸ் ஓட future JMD சோ அவங்களுக்கு டைமண்ட் செயின் போன்றவையெல்லாம் வெகு சாதாரணம். இனிமேல் எதையாவது எடுத்துவிட்டு பழி போடுபவர்கள் அவரின் தகுதி என்ன தராதரம் என்ன என்று தெரிந்துக்கொண்டு பழி போடுங்கள் இல்லையென்றால் பெரும் சிக்கலில் நீங்கள்தான் மாட்டி கொள்வீர்கள் anyways தேங்க்ஸ் for ur valuable டைம் என்று கூறிவிட்டு ஸ்டேஜ்ய் விட்டு கீழறங்கி வெளியில் சென்றான்.

                அதுவரை அவனையே ஆவென பார்த்துக்கொண்டிருந்த மொத்த கூட்டமும் யார் அந்த விஹானா என்று தேட தொடங்கினர். தெரிந்தவர்கள் அவளை பொறாமையாகவும் பெருமையாகவும் பார்த்தனர்.
           பேசி முடித்து வெளியே சென்ற விவான் வெளியே செல்லும் போது மறந்தும் கூட அவன் விஹானாவை பார்க்கவில்லை. பார்த்தாள் அவள் தான் செய்திருக்கும் காரியத்திற்கு கண்களாலே பொசுக்கி விடுவாள் என்றுதான் பார்க்காமலே சென்று விட்டான். அதுவரை அவனும் அவளுடைய குற்றத்தை நிரூபிப்பதற்காக மட்டுமே காலேஜுக்கு செல்வதாக முடிவெடுத்து இருந்தான். காணவே பாதுகாக்க ஏற்பாடு செய்திருந்த கார்ட்ஸ் மூலம் தீக்ஷித் விஹானாவை பாலோவ் செய்ததை அறிந்து கொண்டான்.  எனவே விடுதிக்குள் நடப்பவைகள் தெரிந்துகொள்ள டைமன் செயினை விஹானாவின் பைக்குள் போட்ட பெண்ணை சந்தித்து அவளிடம் மீதி விவரங்களை கேட்டறிந்து அவளை விஹானாவை  கண்காணிக்க பணம் கொடுத்து ஏற்பாடு செய்தான். ஆதலாலே அந்த பெண்ணை பற்றிய விபரம் கூறாமல் cctv footage ஐ காட்டி நிரூபித்தான். விஹானாவிடம் சீக்கிரம் தன்னுடைய காதலை ப்ரொபோஸ் செய்ய தேதியும் குறித்தான்.

              
                

                

                 

                

              

Comments